பீஜேயின் சொத்து எவ்வளவு?

பீஜேயின் சொத்து எவ்வளவு?

தவ்ஹீத் ஜமாஅத்தைப் பயன்படுத்தி ஒருவர் பணம் சம்பாதித்துள்ளார் என்று பாக்கரும் இஸ்மாயீல் சலஃபி என்பவரும் கொச்சைப்படுத்தி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஆனால் இந்த ஜமாஅத்தைப் பயன்படுத்தி எந்த ஆதாயத்தையும் பீஜே அடையவில்லை என்று தெரிந்திருந்தும் பீஜே கோடிகளுக்கு அதிபதியாகி விட்டது போலவும், அவர் கார் பங்களாவுடன் சொகுசு வாழ்க்கை வாழ்வது போலவும் பாக்கர் கூட்டம் இப்போது பேசுகிறார்கள்.

மஞ்சள் பையுடன் வந்தவர் இன்று சொகுசு காரில் போவது எப்படி என்று பாக்கரை மேடையில் வைத்துக் கொண்டு செங்கிஸ் கான் பேசி இருக்கிறார்.

இது குறித்து இஸ்மாயில் ஸலஃபி என்பவரும் கேள்வி எழுப்பிய போது பீஜே தனது இணைய தளத்தில் பின்வருமாறு பதில் அளித்துள்ளார். அதுவே பாக்கர் கூட்டத்தின் குற்றச் சாட்டுக்கும் உரிய பதிலாகும்.

இஸ்மாயீல் ஸலஃபி என்பவர் பின்வருமாறு கேள்வி எழுப்பினார்.

உங்கள் மீதிருக்கும் ஊழல் குற்றச் சாட்டுக்களில் நீங்கள் நீதமானவர் என்பதை நிரூபியுங்கள்! அல்ஜன்னத் ஆசிரியர் பொறுப்புக்கு 2000 ரூபாய் சம்பளத்துடன் ஆரம்பித்த உங்கள் சமூக வாழ்வில் இப்போதைய உங்கள் பொருளாதார நிலை என்ன?

அன்பளிப்புக்களைப் பெறாத உங்கள் சொத்து வளர்ச்சியின் அடிப்படை என்ன என்பதை விளக்குவீர்களா?

இதற்கு பீஜே அளித்த பதில் வருமாறு:

எனது பதில்

இஸ்மாயீல் ஸலஃபி கடைந்தெடுத்த பெரும் பொய்யர் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரமே தேவை இல்லை.

என் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கு என்ன பதில் என்று கேட்கிறார். சொத்து சேர்த்த சரித்திரம் என்ன என்று கேட்கிறார்.

இப்படி பொத்தாம் பொதுவாகச் சொன்னால் எப்படி?

இஸ்மயீல் ஸலஃபியின் பாலியல் குற்றச்சாட்டுக்கு என்ன பதில் என்று பொத்தாம் பொதுவாகத் தான் நான் கேட்டேனா? தேவைப்பட்டால் ஆதாரத்துடன் தான் அதைக் கேட்பேன்.

உங்களுக்கு நாணயம், நேர்மை இருந்தால் அந்தக் குற்றச்சாட்டுக்கள் என்ன என்பதைப் பட்டியல் போட்டு அதை நிரூபிக்க முன் வர வேண்டும்.

என் சொத்து வளர்ச்சி பற்றிய பட்டியலையும் எனக்குக் கொடுக்க வேண்டும்?

மானம், சூடு, சொரனை இவை கடுகளவாவது உங்களுக்கு இருந்தால் நீங்கள் எதற்குப் பதில் சொல்லா விட்டாலும் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

எனது சொத்து, எனது பொருளாதார நிலை குறித்து பொதுவாக நான் அதிகம் பேசுவதில்லை. இது போல் சீண்டும் போது மட்டுமே நான் பேசி இருக்கிறேன். இது குறித்து நான் பேசும் போது நான் எதையோ எதிர்பார்ப்பதாக நினைத்து விடுவார்களோ என்று நினைத்து பேசுவோர் பேசிக் கொள்ளட்டும் என்று இருந்து வருகிறேன்.

இப்போது நாம் யுத்த களத்தில் நிற்கும் போது நீங்கள் கேட்பதால் நான் பதில் சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்.

முதலில் எனது சொத்து விபரத்தைத் தந்து விடுகிறேன்.

நான் 25 ஆண்டுகளில் சம்பாதித்த எனது மொத்த சொத்தின் மதிப்பு நீங்கள் ஒரு பள்ளிவாச்ல் கட்டுவதற்குக் கமிஷன் அடிக்கிறீர்களே அதை விடக் குறைவு தான். மிகைப்படுத்திச் சொல்லவில்லை. நிஜமாகத் தான் சொல்கிறேன்.

நான் தற்போது வசித்து வரும் சென்னையில் சிறிய வாடகை வீட்டில் தான் இருந்து வருகிறேன்.

எனது சொந்த ஊரில் எனது தந்தையிடமிருந்து வாரிசாகக் கிடைத்த ஒரு வீட்டு மனை உள்ளது. இரண்டு சென்டுக்கும் குறைவான சுமார் 800 சதுர அடி அளவுடையது. இது எனது சம்பாத்தியம் அல்ல.

எனது குடும்ப நகைகளை விற்று மதுரையில் நான் ஒரு அச்சகம் நடத்தினேன். மிஷினை நானே இயக்குவேன். பைன்டிங் செய்வேன். இன்னும் அச்சு சம்மந்தமான அனைத்து வேலைகளையும் நானே செய்து வந்தேன். இதனிடையே தான் தாவா பணியையும் செய்து வந்தேன்.

தமுமுக ஆரம்பித்த பின் அந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு நான் சென்னையில் இருக்க வேண்டும் என்று நண்பர்கள் வற்புறுத்தியதால் நான் சென்னைக்கு வருவதற்காக அச்சகத்தை விற்றேன். எனது ஊரைச் சேர்ந்த தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்கள் தம்முடைய ஒரு வீட்டை விற்க இருப்பது தெரிந்ததால் அச்சகத்தை விற்ற பணத்தில் அந்த வீட்டை வாங்கினேன்.

எனது பூர்வீக இடத்தில் சொந்த வீடு ஒன்று கட்டினால் நல்லது என்று நான் நினைத்த போது அதற்கான நிதி என்னிடம் இல்லை. அப்போது நான் வாங்கிய வீடு நல்ல விலைக்குப் போகிறது என்பது தெரிந்ததால் அதை விற்று விட்டு உங்கள் பூர்வீக இடத்தில் வீடு கட்டலாமே என்று ஹைதர் அலி ஆலோசனை கூறினார்.

அதை விற்று (அப்போது ஐந்து லட்சம் என்று நினைவு) அதில் தான் எனது பூர்வீக இடத்தில் நான்கு லட்சம் ரூபாயில் ஒரு பெட்ரூம் உள்ள சிறு வீடு கட்டினேன். அந்த வெள்ளை மாளிகையைப் பற்றி உங்கள் இலங்கையைச் சேர்ந்த ரஸ்மி (முஜீப் விவாதத்துக்காக தொண்டி வந்திருந்தார்) அவர்களிடம் கேட்டுக் கொள்ளலாம்.

(இவரும் இவரது நண்பர்கள் சிலரும் தவ்ஹீதை ஏற்றுக் கொண்டாலும் எனது பொருளாதார நிலையை அறிந்து கொள்வதற்காக இரகசிய வருகை தந்தனர். இஸ்மாயீல் ஸலஃபி வகையறாக்கள் பணம் பண்ணுவதற்காக தவ்ஹீத் பேசுவது போல் பீஜேயும் பேசுகிறாரா என்று ஆராய்வதற்காகவே ஒரு குழுவாக வந்தார்கள். எனக்குத் தெரியாமல் நான் வாடகைக்கு குடியிருக்கும் சிறிய வீட்டையும் எனக்கு என்று சொந்தமாக எந்தச் சொத்தும் இல்லை என்பதையும் விசாரித்து அதன் பிறகு தான் தவ்ஹீத் ஜமாஅத்தில் தீவிர ஈடுபாட்டுடன் உள்ளனர். பிற்காலத்தில் இதை என்னிடம் அவர்களே சொல்லிக் காட்டினர்.)

வீடு கட்டுவதற்குப் போக மீதமுள்ள தொகை ஒரு லட்சத்துடன் முப்பதாயிரம் சேர்த்து ஒரு லட்சத்தி முப்பதாயிரம் ரூபாய்க்கு ஹைதர் அலி ஆலோசனையின் பேரில் எனது ஊருக்கு அருகில் ஒரு வயல் வாங்கினேன்.

எனது பூர்வீக வீடும், அந்த வயலும் தான் என்னிடம் உள்ள அசையாச் சொத்துக்கள்.

மதுரையில் இருந்த போது நல்லூர் என்ற கிராமத்தின் அருகில் மிகக் குறைந்த விலைக்கு மணை கிடைக்கிறது என்று சிலர் கூறியதை நம்பி (1990 இருக்கும் என்று நினைக்கிறேன்.) 3000 ரூபாய்க்கு ஒரு மனை வாங்கினேன். மக்கள் குடியேறாத பகுதியில் உள்ள அந்த இடம் இருக்கிறதா? யாரும் ஆக்ரமித்துக் கொண்டார்களா என்பது தெரியவில்லை.

என் பெயரிலோ, என் மனைவியின் பெயரிலோ எந்த வங்கிக் கணக்கும் இல்லை. வங்கியில் கணக்கு வைத்துக் கொள்ளாதவன் இந்தக் காலத்தில் நானாகத் தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன். எனது மூன் பப்ளிகேஷன் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு உள்ளது. அதில் புத்தகங்கள் விற்பது தொடர்பான வரவு செலவு தவிர வேறு எந்த வரவு செலவும் இல்லை. அதை நான் இயக்குகிறேன்.

என் மகன் பத்துக்கு பத்து அளவில் சிறிய கடை வைத்துள்ளார். இரண்டாம் மகன் இந்துச் சகோதரருக்குச் சொந்தமான தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார்.

நாங்கள் மூவரும் உழைத்துத் தான் எங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறோம். நாங்கள் மூவரும் உழைப்பது சொத்துக்கள் வாங்குவதற்குப் போதுமானது அல்ல.

இதைத் தவிர வேறு ஏதாவது சொத்துக்கள் என் பெயரிலோ, என் மனைவி பெயரிலோ, என் பிள்ளைகள் பெயரிலோ இருந்தால் இஸ்மாயீல் சலஃபிக்கு நான் இலவசமாக அளிக்கத் தயாராக இருக்கிறேன்.

அல்லது யாரெல்லாம் இது பற்றி பேசித் திரிகிறார்களோ அவர்கள் அனைவருக்குமே இதைக் கூறிக் கொள்கிறேன். அவர்கள் இது தவிர என் பெயரிலோ, என் மனைவி மக்கள் பெயரிலோ, சொத்துக்கள் இருந்தால் இலவசமாகவே அவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.

எனக்கு இருக்கும்(?) சொகுசு பங்களாக்கள், கார்கள் பண்ணை வீடுகள் அனைத்தையும் இஸ்மாயீல் ஸல்ஃபிக்குத் தந்து விடுகிறேன்.

இது போன்ற கிறுக்குத் தனங்களுக்கு ஒரு மனிதன் பதில் சொல்லாமல் இருந்தால் எதை வேண்டுமானாலும் சொல்வீர்களா?

நான் மதுரையில் அச்சகம் நடத்திக் கொண்டிருந்த போது சில இளைஞர்கள் வந்தனர். பத்துப் பேர் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

அவர்கள் வந்த போது கையால் இயக்கப்படும் கட்டிங் மிஷினில் நான் பேப்பர் கட்டிங் செய்து கொண்டிருந்தேன். வந்தவர்கள் என் காலையே பார்த்தார்கள். என்ன விபரம் என்று கேட்ட போது நீங்கள் இரண்டாயிரம் ரூபாய் செருப்பு போட்டிருப்பதாகச் சொன்னார்கள். அதைத் தான் பார்க்க வந்தோம் என்று கூறினார்கள். நான் ஹவாய் செருப்பு அணிந்திருந்ததையும், உடலுழைப்பு செய்ததையும் பார்த்து விட்டு அதன் காரணமாக தவ்ஹீதுக்கு வந்தார்கள்.

இது போல் நீங்கள் பொய்களைப் பரப்பியதால் தான் சத்தியம் வளர்ந்து கொண்டிருக்கிறது.

இப்படி எல்லாம் சிலர் நினைப்பதற்குக் காரணம் உள்ளது.

(பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியன. (அவர்களைப் பற்றி) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்.

திருக்குர்ஆன் 2:273

மூடர்கள் பார்த்தால் செல்வந்தர்கள் என்று நினைக்கும் அளவுக்கு நபித்தோழர்கள் சுயமரியாதையுடன் நடந்ததை அல்லாஹ் புகழ்ந்துரைக்கிறான். அதை இஸ்மாயீல் ஸலஃபி மூலம் அல்லாஹ் என் விஷயத்திலும் மெய்யாக்கி விட்டான்.

அல்ஜன்னத்தில் 2000 சம்பளம் வாங்கிக் கொண்டைருந்தவன் தானே என்று அவர் கூறுவதன் உள் நோக்கம் அனைவருக்கும் தெரிந்ததே, அதாவது மார்க்கப் பணியின் மூலம் நான் பணம் திரட்டினேன் என்று சொல்லாமல் சொல்கிறாராம்.

எனவே இது குறித்தும் நான் விரிவாகச் சொல்லும் நிலையை ஏற்படுத்தி விட்டார்.

நான் மதரஸாவில் ஓதிக் கொண்டிருந்த காலத்தில் எனது ஆசிரியர்கள் செல்வந்தர்கள் வீடுகளுக்குச் சென்று வாசலில் காத்துக் கிடப்பதையும், செல்வந்தர்களைக் கண்டதும் எழுந்து நிற்பதையும், மலேசியா சென்று கவுரவப் பிச்சை எடுத்ததையும் கண்ட போது நானும் சுயமரியாதை உள்ள என் சக மாணவர்களும் கூனிக் குறுகி விடுவோம்.

இந்தப் பணத்தாசை தானே உண்மையைச் சொல்வதை விட்டும் இவர்களைத் தடுக்கிறது என்று பேசிக் கொள்வோம். இவ்வாறு பேசிக் கொண்டவர்களில் முஹம்மது கான் பாக்கவி மட்டும் என் நினைவில் இருக்கிறார். மற்றவர்கள் நினைவில் இல்லை. சின்ன வயசில் நான் அப்போதே சபதம் எடுத்தேன். எந்த நிலையிலும் செல்வந்தர்களிடம் போய் நிற்கக் கூடாது. கூனிக் குறுகக் கூடாது. நமக்காக எதையும் கேட்கக் கூடாது என்றெல்லாம் தீர்மானம் செய்து கொண்டேன்.

அல்லாஹ்வின் அருளால் 29 ஆண்டுகள் இந்தச் சபதத்தில் உறுதியாக இருந்து வருகிறேன்.

மிக மிக நெருக்கமான சில நண்பர்களிடம் கடன் வாங்கியதுண்டு. அல்லாஹ்வின் அருளால் இன்று என் உறவினர் தவிர வேறு எவருக்கும் நான் பத்துப் பைஸா கூட கடனாளி அல்ல.

எத்தனையோ தடவை வெளி நாடுகளுக்கு நான் பிரச்சாரத்துக்குச் சென்றுள்ளேன். எனக்கு எந்த அன்பளிப்பும் தரக் கூடாது என்று நிபந்தனையுடன் தான் சென்று வந்தேன். சில பொருட்களை நான் வாங்கி வந்தேன் என்றால் எனது சொந்தப் பணத்தில் வாங்கியது தான்.

அதனால் பணத்துக்காகச் சத்தியத்தை மறைக்கும் இஸ்மாயீல் ஸலஃபீ போன்றவர்களின் செயல் எனக்கு வெறுப்பாகத் தெரிகிறது.

அத்னால் தான் நீங்கள் கற்பனை செய்வது போல் நான் சொத்து சேர்க்கவில்லை.

அனைத்துச் செல்வத்தையும் விட தன்மானத்தையே நான் பெரிய செல்வமாகக் கருதுகிறேன்.

நான் செய்யும் மார்க்கப் பணிக்காகவோ, சமுதாயப் பணிக்காகவோ எந்த ஊதியமோ வேறு ஆதாயமோ அடையக் கூடாது என்பதிலும் நான் உறுதியாக இருந்தேன்.

மார்க்கத்துக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணிப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பொருளாதாரத்தை வழங்கலாம் என்பதில் எனக்கு மறுப்பு இல்லை. மேற்கண்ட வசனத்திலேயே அதற்கு அனுமதி உள்ளது. இல்லாவிட்டால் தாவா பணிகள் அறவே நடைபெறாத நிலை ஏற்படும் என்பதையும் நான் அறிவேன்.

ஆனாலும் நான் அந்த நிலையை என் விஷயத்தில் தவிர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

துவக்க காலத்தில் எனக்கு வேறு வழி தெரியாத நிலையில் நஜாத் பத்திரிகையில் ஐ.ஏ.சி அமைப்பின் மூலம் மாத ஊதியம் (சுமார் ஒருடம் இருக்கலாம்) வாங்கினேன். அப்போது கூட அந்த ஊதியம் எனது மார்க்கப் பணிக்காக இருக்கக் கூடாது என்பதற்காக பத்திரிகைகளை சந்தாதாரர்களுக்கு அனுப்புதல், ஸ்டாம்ப் ஒட்டுதல், பார்சல் கட்டுதல், ப்ரூஃப் திருத்துதல் உள்ளிட்ட பணிகளையும் செய்து வாங்கிய ஊதியத்துக்காக உடல் உழைப்பு செய்தேன்.

அடுத்து அல்ஜன்னத் பத்திரிகையை நான் தான் நடத்தினேன், அதில் நட்டம் ஏற்பட்டதால் நடத்த முடியவில்லை. எனது அச்சகத்தின் வருமானத்தையும் அது சாப்பிடக் கூடிய நிலை ஏற்பட்ட போது மக்களிடம் நன்கொடை கேட்டால் தருவார்கள் என்று நண்பர்கள் கூறினார்கள்.

ஒரு இயக்கம் நன்கொடை கேட்கலாம். தனி நபர் நன்கொடை கேட்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே ஜாக் இயக்கமே எடுத்துக் கொண்டு மக்களிடம் நன்கொடை பெற்று நடத்திக் கொள்ளுங்கள் என்று கூறி ஒப்படைத்து விட்டேன். அது வரை எனது அல்ஜன்னத் அச்சகத்தில் அச்சிட்டு நான் தான் நடத்தி வந்தேன்.

இதன் பிறகு தான் அல்ஜன்னத் பத்திரிகை சென்னைக்கு மாறியது. அப்போது தான் 2000 ரூபாய் சம்பளம் வாங்கினேன். அதைத் தான் ஸலஃபி குறிப்பிடுகிறார்.

அந்த உறுத்தலைத் தவிர்ப்பதற்காக எழுத்துப் பணி அல்லாத வேறு பணிகளையும் நான் செய்தேன். (அது ஒரு தனிக் கதை)

சில காலம் (எவ்வளவு காலம் என்பது நினைவில் இல்லை.) இந்த ஊதியத்தைப் பெற்றாலும் சமுதாயப் பணிகள் செய்ய ஜாக் இயக்கம் முட்டுக்கட்டை போட்டதாலும் ஆசிரியரான எனது எழுத்துச் சுதந்திரத்தைப் பறித்ததாலும் நான் விலகிக் கொண்டேன்.

சென்னையில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த எனக்கு அந்தச் சம்பளம் வாடகைக்குக் கூட போதுமானதாக் இல்லை என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

சென்னை வந்ததும் நூல்கள் எழுதி தனியார் புத்தக் வெளியீட்டாளர்களிடம் கொடுத்து வெளியிட்டு அதன் மூலம் கிடைக்கும் இலாபம் தான் எனது வருமானமாக இருந்தது. அதன் பின் நானே புத்தகம் வெளியிடலானேன்.

நான் தமுமுக அமைப்பாளராக இருந்த போது எனக்கு இதயத்தில் பிரச்சனை ஏற்பட்டு சீரியஸான நிலையில் தமுமுக நிர்வாகிகள் என்னை தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அப்போது அதற்கு ஐம்பதாயிரம் ரூபாய் செலவானது. அதை உணர்வு இதழில் இருந்து செலுத்தினார்கள். நான் எவ்வளவோ மறுத்தும் கடனாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியும் அவர்கள் மறுத்து விட்டனர்.

இவ்வளவு காலம் உணர்வு பணியைச் சம்பளம் இல்லாமல் செய்தீர்கள். அதற்கான ஊதியமாக இருக்கட்டும் என்று கூறியதை அப்போது நான் ஏற்று கொண்டேன். தர்மமாக வாங்காமல் உழைப்புக்காக வாங்கினோம் என்ற மன திருப்தி ஏற்பட்டது.

ஆனால் நூல்கள் வெளியிட ஆரம்பித்த பின் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக நான் எந்தப் பணிக்கும் எந்த ஊதியத்தையும் பெற்றதில்லை. உணர்வில் கட்டுரை எழுதுதல், கேள்வி பதில் எழுதுதல், பிழை திருத்தல், மற்றவர்களின் கட்டுரைகளைத் தணிக்கை செய்தல் ஆகிய அனைத்து வேலைகளையும் நான் செய்து வந்த போதும் இந்தப் பத்து ஆண்டுகளில் எந்த ஊதியமும் பெற்றதில்லை. தஃவா சென்டரில் பாடம் நடத்திய போதும் அதற்காக நான் எந்த ஊதியமும் பெற்றதில்லை.

தவ்ஹீத் ஜமாஅத் தலைமைப் பொறுப்பில் எனது முழு நேரத்தையும் செலவிட்ட போதும் அதற்காக ஊதியமோ ஊக்கத் தொகையோ நான் பெற்றதில்லை.

நான் பொறுப்பு வகித்த எந்த இயக்கத்திலும் பண வரவு செலவை நான் கையாள்வதில்லை. சில நெருக்கடியான நேரத்தில், கையாள வேண்டிய நிலை ஏற்பட்டால் இன்னொரு நிர்வாகி அல்லது சில நிர்வாகிகள் துணயுடன் தான் கையாண்டிருக்கிறேன். எந்தக் கடனும் ஜமாஅத்தில் பெற்றதில்லை.

தலைமைப் பொறுப்பின் மூலம் நான் ஆதாயம் அடைந்தவனாக இருந்தால் நான் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகாமல் தொடர முடியும். நான் பொறுப்பில் தொடர்வதைத் தான் மக்களும் விரும்பினார்கள். ஆதாயத்துக்காக பொறுப்பில் உள்ளவன் என்றால் இதை விட்டு விலகிக் கொள்ள மாட்டார்.

ஜாக் தலைமைப் பொறுப்பில் இருந்தும் நானாகத் தான் விலகினேன்.

தமுமுக பொறுப்பில் இருந்தும் நானாகத் தான் விலகினேன்.

தவ்ஃஹீத் ஜ்மாஅத் பொறுப்பில் இருந்தும் நானாகத் தான் விலகினேன்.

இப்போது அனைத்துப் பொறுப்புக்களிலும் இருந்து விலகியதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் எனது தேவைகளுக்கு ஏற்ப சம்பாதிக்க இந்தப் பொறுப்புக்கள் தடையாக இருப்பதும் முக்கியக் காரணமாகும்.

தேர்தல் திருவிழாக்கள் வரும் போது இயக்கத் தலைவர்களுக்கு நல்ல அறுவடை கிடைக்கும். ஆனால் எந்தச் சந்தர்ப்பத்திலும் நான் தனியாக எந்த அரசியல் தலைவரையும் சந்தித்தது இல்லை. பல நிர்வாகிகள் அல்லது பல இயக்கத்தினருடன் தான் சந்தித்துள்ளேன்.

கடந்த தேர்தலில் திமுகவை ஆதரித்தோம் இட ஒதுக்கிட்டுக்காக. தேர்தல் முடிந்த சில மாதங்களில் முதல்வர் வீடு முற்றுகைப் போராட்டம் அறிவிக்க முடிந்ததற்குக் காரணம் எனக்கோ, நான் சார்ந்துள்ள் இயக்கத்துக்கோ எந்த ஆதாய எதிர்பார்ப்பும் இல்லாததே காரணம்.

ரமலான் தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் விளம்பரம் மூலம் நடத்தப்பட்ட போது பல லட்சங்கள் லாபம் கிடைத்தது. உங்கள் உரை தானே ஒளிபரப்பாகிறது. இதை நீங்களே விளம்பரம் பிடித்து நடத்தலாமே என்று பல நண்பர்கள் என் நிலைமை அறிந்து என்னிடம் கூறினார்கள். நான் மறுத்து விட்டேன்.

அந்த வருவாய் அப்போது தமுமுகவுக்குப் பயன்பட்டது. இப்போது தவ்ஹீத் பணிக்குப் பயன்படுகிறது. இதை நான் நடத்தினால் யாரும் என்னைக் கேள்வி கேட்க முடியாது. ஆனால் இவன் ஆதாயத்துக்குத் தான் பேசிக் கொண்டிருக்கிறான் என்று ஒருவன் நினைத்து சத்தியத்தை மறுத்து விடக் கூடாது என்பதற்காக இந்த நிலைபாட்டை எடுத்தேன்.

மீடியா வேல்டு மூலம் தொலைக் காட்சி மூலமும் குறுந்தகடுகள் விற்பனை மூலமும் தனி நபர் சம்பாதிக்கிறார். நீங்களே நடத்தலாமே என்று பல நண்பர்கள் கூறிய போது அதையும் நான் மறுத்து விட்டேன்.

என்னால் ஜமாஅத் ஆதாயம் அடையும் வகையில் தான் அன்றும் இன்றும் நடந்து வருகிறேன். இனியும் நடக்க துஆச் செய்யுங்கள்.

ரமலானுக்கு முன் ஒரு சிறு கடையை வாடகைகுப் பேசி வைத்திருந்தேன். எனக்கு என்று தெரிந்தவுடன் தர மறுத்து விட்டனர். வாடகைக்கும் வீடு பேசிவிட்டு வந்தால் மறு நாள் இல்லை என்று கூறி விடுவார்கள். இதற்கெல்லாம் கூட இடையூறு செய்பவர்கள் உள்ளனர். இப்படி பல விதமான இழப்புகள் தான் எனக்குக் கிடைத்துள்ளது.

மார்க்கத்தைத் தொடர்புபடுத்தி நான் சம்பாதிப்பதாக யாரேனும் கூறுவதாக இருந்தால் நான் புத்தகம் எழுதி விற்பனை செய்வதைத் தான் கூற முடியும். புத்தகத்தின் எழுத்துக்காக நான் எந்த விலையும் வைப்பதில்லை. பிரபலமான எழுத்தாளர்கள் எழுதும் 40 பக்க புத்தகம் 100 ரூபாய் விலை போடப்படும். அப்படி எல்லாம் நான் போடவில்லை.

புத்தகம் தயாரிக்கும் செலவு, அதை விற்பனை செய்யும் இடத்துக்கான வாடகை, அட்வான்ஸ், மின் கட்டணம், ஊழியர் சம்பளம் ஆகிவற்றுக்கு நான் முதலீடு செய்த அடிப்படையில் தான் அதில் லாபம் கிடைக்கிறது. மாதம் பத்தாயிரம் ரூபாய் அளவுக்கு அதில் எனக்கு வருமானம் வருகிறது. அதில் உள்ள முதலீட்டை எடுத்து வேறு ஏதாவது வழியில் பயன்படுத்தினால் எனக்கு இன்னும் அதிக லாபம் கிடைக்கும். அது பற்றியும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

என்னுடைய நூல்கள் பலவற்றை சவூதி ஜாலியாத்கள் இலவசமாக வெளியிட்டுள்ளன. அதனால் எனக்குப் பாதிப்பு என்று நான் சிந்திக்காமல் அனுமதித்தேன். பீஜேக்குத் தடையா என்ற கட்டுரையில் இதை விளக்கியுள்ளேன்.

என் பொருளாதாரம் தொடர்பாக இஸ்மாயீல் சலஃபிக்கோ வேறு எவருக்குமோ நான் பதில் சொல்ல வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அதுவும் இப்போது நான் தனி மனிதன். எந்தப் பொறுப்பிலும் இல்லாதவன் என்பதால் மார்க்க அடிப்படையிலான கேள்விகள் தவிர வேறு எதற்கும் நான் பதில் சொல்லும் அவசியம் இல்லை.

ஆனால் இஸ்மாயில் சலஃபி பொது வாழ்வில் இருந்து கொண்டு ஆதாயம் அடைகிறார். அவர் தான் பதில் சொல்லக் கடமைப்பட்டவராக இருக்கிறார்.

ஆனாலும் என் நிகழ் காலம் பற்றியதாக இல்லாமல் கடந்த கால பொது வாழ்வுடன் தொடர்பு உள்ளதாலும் இதைத் தெரிவிக்கிறேன்.

பணவிஷயத்தில் பீஜே எப்படி நடந்து கொள்கிறார் என்பதற்கு மற்றொரு சம்பவத்தையும் தனது இணைய தளத்தில் அவர் கூறி இருக்கிறார். சம்மந்தப்பட்டவர்கள் இன்னும் உயிருடன் தான் உள்ளனர். அவர்களிடம் விசாரித்து உறுதி செய்து கொள்ளலாம்.

ஹாமித் பக்ரி பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது பின்வருமாறு பீஜே கூறியுள்ளார்.

ஹாமித் பக்ரிக்கு என் மீது கோபம் ஏற்பட இரண்டு காரணங்கள். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் முன்பு ஒரு நாள் என் வீட்டுக்கு அவர் வந்திருந்தார். அப்போது இலங்கையைச் சேர்ந்த நியாஸ் ஹாஜி அவர்களும் என்னைப் பார்க்க வந்திருந்தார்கள். நியாஸ் ஹாஜி அவர்கள் பின்வரும் விபரத்தைக் கூறினார்கள்.

பீஜெ அவர்களே உங்களுக்காக இலங்கையைச் சேர்ந்த ஒரு தனவந்தர் ஐந்து லட்சம் ரூபாய் தரவிருக்கிறார். அதற்கு உங்கள் சம்மதத்தைப் பெற்று வரச் சொன்னார் என்று குறிப்பிட்டார். தனவந்தர்களிடம் உதவி பெறும் போது அவர்கள் நம்மிடம் கூடுதல் உரிமையை எதிர்பார்ப்பார்கள்; நமது நிலைபாடுகள் விஷயத்தில் தலையிட்டு இது வேண்டாம் அது வேண்டாம் என்பார்கள். கை நீட்டி காசு வாங்கியதால் அதற்குச் செவிசாய்த்து வீரியத்தைக் குறைக்கும் நிலை ஏற்படும். எனவே எனக்கு வேண்டாம் என்று கூறி விடுங்கள். அதே நேரம் கடையநல்லூர் மதரஸாவின் நிலை பரிதாபமாக உள்ளது. எனவே அந்தப் பணத்தை மதரஸாவுக்குக் கொடுக்கலாமா என்று அந்தத் தனவந்தரிடம் கூறுங்கள் என்று நான் நியாஸ் ஹாஜியிடம் கூறினேன்.

(மதரஸாவை மூடி விடலாமா என்ற அளவுக்கு நிலை இருந்த நேரம் அது) அவர் உடனே போன் போட்டு அந்தத் தனவந்தரிடம் பேசச் சொன்னார். நான் விளக்கிச் சொன்னவுடன் மதரஸாவுக்குக் கொடுக்க ஒப்புக் கொண்டார்.

அதன்படி அந்த‌ப் பணம் கடையநல்லூர் மதரஸாவுக்காக சைபுல்லாஹ் ஹாஜாவிடம் கொடுக்கப்பட்டது. அந்த மதரஸாவில் அன்றும் இன்றும் நான் நிர்வாகப் பொறுப்பில் இல்லை என்பது குறிப்பிடத்தகது.

இவ்வளவையும் ஹாமித் பக்ரி பார்த்துக் கொண்டே இருந்தார். நியாஸ் ஹாஜி போன உடன் என்னுடன் சண்டைக்கு வந்தார். நான் தான் கஷ்டத்தில் இருக்கிறேனே அந்தப் பணம் உங்களுக்கு வேண்டாம் என்றால் எனக்கு வாங்கித் தரலாமே என்று கடுமையாக வாக்கு வாதம் செய்தார்.

கஷ்டப்படுகிறீர்கள் என்பது பிரச்சனை இல்லை. நான் உங்களை விட கஷ்டத்தில் தானே இருக்கிறேன். நான் எதற்காக அதை மறுத்தேனோ அது உங்களுக்கும் பொருந்தும். நீங்கள் செயலாளராகவும், நீங்கள் சம்பளம் வாங்கும் உஸ்தாதாகவும் உள்ள உங்கள் மதரஸாவுக்குத் தானே அதைக் கொடுக்கச் சொன்னேன் என்று கூறினேன்.

இதன் பின் அனைத்து சகோதரர்களிடமும் இதைப் பற்றியே பேசி வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்தார். என்னிடம் நியாயம் கேட்டு வந்த அனைவரிடமும் விளக்கம் அளித்தேன். இன்று முதல் என்னை நேரில் எதிர்க்காவிட்டாலும் உள்ளிருந்து கொண்டே பிரச்சாரத்தை மறைமுகமாக ஆரம்பித்தார். இது முதல் காரணம்.

பாக்கர் மீது அல்லது இஸ்மாயீல் ஸலஃபி மீது வைக்கப்பட்ட பொருளாதாரக் குற்றச்சாட்டு போல் இது வரை எந்தக் குற்றச்சாட்டும் யாரும் நேருக்கு நேராகச் சுமத்தியதில்லை. அல்லது ஜமாஅத்திலும் குற்றச்சாட்டு வைக்கப்படவில்லை. சில பேர் கள்ள மெயில் மூலம் ஆதாரம் இல்லாமல் பரப்பியது தவிர வேறு இல்லை.

மேலும் யாரிடமாவது பீஜே கடன் வாங்கி விட்டு தராமல் இருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் கிடையாது.

நான் குறிப்பிட்டுள்ள சொத்துக்கள் தவிர வேறு சொத்துக்கள் இருந்தால் அதை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று பீஜே கூறுவது போல் பாக்கர் வகையறாக்கள் பட்டியல் வெளியிடத் தயாரா?

இது 2010ல் எழுதியது. இப்போது அல்லாஹ் எனக்கு பரகத் செய்துள்ளான்.

5/8/2010

2019-01-26T09:06:36+00:00
CONTACT US
221, Mount Olimpus, Rheasilvia, Mars,
Solar System, Milky Way Galaxy
+1 (999) 999-99-99
PGlmcmFtZSBzcmM9Imh0dHBzOi8vd3d3Lmdvb2dsZS5jb20vbWFwcy9lbWJlZD9wYj0hMW0xOCExbTEyITFtMyExZDYwNDQuMjc1NjM3NDU2ODA1ITJkLTczLjk4MzQ2MzY4MzI1MjA0ITNkNDAuNzU4OTkzNDExNDc4NTMhMm0zITFmMCEyZjAhM2YwITNtMiExaTEwMjQhMmk3NjghNGYxMy4xITNtMyExbTIhMXMweDAlM0EweDU1MTk0ZWM1YTFhZTA3MmUhMnNUaW1lcytTcXVhcmUhNWUwITNtMiExc2VuITJzITR2MTM5MjkwMTMxODQ2MSIgd2lkdGg9IjEwMCUiIGhlaWdodD0iMTAwJSIgZnJhbWVib3JkZXI9IjAiIHN0eWxlPSJib3JkZXI6MCI+PC9pZnJhbWU+
Thank You. We will contact you as soon as possible.
COMPANY NAME
Dolor aliquet augue augue sit magnis, magna aenean aenean et! Et tempor, facilisis cursus turpis tempor odio. Diam lorem auctor sit, a a? Lundium placerat mus massa nunc habitasse.
  • Goblinus globalus fantumo tubus dia montes
  • Scelerisque cursus dignissim lopatico vutario
  • Montes vutario lacus quis preambul denlac
  • Leftomato denitro oculus softam lorum quis
  • Spiratio dodenus christmas gulleria tix digit
  • Dualo fitemus lacus quis preambul patturtul
CONTACT US
Thank You. We will contact you as soon as possible.

யார் இந்த பீ.ஜே

பி.ஜெ என்று சுருக்கமாக அழைக்கப்படும் பி.ஜைனுல் ஆபிதீன் என்பவர் தென்னிந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி என்னும் ஊரில் பிறந்தவர்.

தமிழகத்தின் பழைமை வாய்ந்த அரபுக் கல்லூரிகளில் ஒன்றான கூத்தாநல்லூர் அரபிக் கல்லூரியில் 07 ஆண்டுகள் கல்வி கற்ற இவர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் நிறுவனராவார்.

அரபுக் கல்லூரியில் 07 ஆண்டுகள் மத்ஹபு, தரீக்காக்கள் என்று இஸ்லாத்தின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள வழிகெட்ட கொள்கையை அடிப்படையாகக் கொண்ட கல்வியை கற்ற இவர் பின்னர் அல்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை கற்பதில் ஆர்வம் கொண்டார்.

அல்குர்ஆனுக்கும், ஆதாரபூர்வமான நபிமொழிகளுக்கும் எதிராக உருவாக்கப்பட்ட மத்ஹபுகள் மற்றும் தரீக்காக்களின் வழிகேடுகளை குர்ஆன் சுன்னா ஒளியில் புரிந்து கொண்ட இவர் தனது சகோதரர் மவ்லவி பி.எஸ். அலாவுத்தீனுடன் இணைந்து தர்கா வழிபாடு, பேய் நம்பிக்கை, தட்டு தாயத்து, இணைவைப்பு, பித்அத்துக்கள், மத்ஹபுகள், தரீக்காக்கள் போன்றவற்றுக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்தார்.

இஸ்லாத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட மூட நம்பிக்கைகளுக்கு எதிராக கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பேச்சிலும், எழுத்திலும் போராடி வரும் ஜைனுல் ஆபீதீன் அவர்கள் நூற்றுக் கணக்கான நூல்களை எழுதியுள்ளதுடன், ஆயிரக் கணக்கான கட்டுரைகளுக்கும் சொந்தக் காரர் ஆவார்.

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக சமுதாய சீர்திருத்தப் பணியில் தன்னை அர்பணித்த ஜைனுல் ஆபிதீன் அவர்கள், தமிழகம் தாண்டி இந்தியாவின் பல மாநிலங்களிலும், மத்திய கிழக்கு நாடுகள் இலங்கை, மலேஷியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இஸ்லாமிய பிரச்சாரங்கள் செய்துள்ளார்.

கடந்த 2005ம் வருடம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட போது, இலங்கையில் சுமார் 07 இடங்களில் இவர் உரையாற்றினார். மத்ஹபுகள், தர்காக்கள், இணைவைப்புக் காரியங்கள் அனைத்திற்கும் எதிராக இவர் ஆற்றிய உரைகளினால் பல்லாயிரக் கணக்கான மக்கள் இவரின் உரையைக் கேட்பதற்காகத் திரண்டார்கள்.

கொழும்பு புதுக்கடை, புத்தளம், காலி, மாவனல்லை, காத்தான்குடி போன்ற ஊர்களில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டங்கள் ஒவ்வொன்றிட்கும் சுமார் 30ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டமை குறிப்பிடத் தக்கதாகும்.

பி.ஜெ ஏன் எதிர்க்கப் படுகின்றார்?

பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் இஸ்லாத்தின் பெயரால் தோற்றம் பெற்றுள்ள அனைத்து வழிகேடுகளுக்கும் எதிராக பிரச்சாரம் செய்யும் அதேநேரம் அல்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபி மொழிகளை மாத்திரமே அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்து வருகின்றார்.

அல்-குர்ஆன், மற்றும் ஆதாரபூர்வமான நபி மொழிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் உலமாக்கள், இவருடைய இந்த பிரச்சாரத்தினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். பொது மக்களின் பணத்தில் பொய் சொல்லி வயிறு வளர்க்கும் உலமாக்கள் இவருடைய பிரச்சாரத்தினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தாம் செய்யும் காரியங்களுக்கு பொது மக்கள் ஆதாரம் கேட்க்கும் நிலை பி.ஜே யின் பிரச்சாரத்தினால் உண்டாக்கப்பட்டது. இந்நிலையினால் மக்களை இவ்வளவு காலமும் ஏமாற்றித் திரிந்த உலமாக்கள் பாதிக்கப்பட்டார்கள். பொருளாதார இழிநிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஆகவே தான் பி.ஜெ அவர்களை முழு மூச்சாக இவர்கள் எதிர்த்து வருகின்றார்கள்.

அனைத்துத் தரப்பாரும் இவரை எதிர்க்கும் அளவுக்கு இவர் அப்படி என்னதான் செய்தார்?

ஆம், இவர் செய்த பணி அளப்பரியது. மகத்துவமிக்கது, போற்றத் தக்கது.

கடந்த 30 வருடங்களில் அனைத்து வழிகேடுகளுக்கும் எதிராக இவர் பிரச்சாரம் செய்துள்ளார்.

அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி, நபி முஹம்மது (ஸல்) அவர்களை மாத்திரம் பின்பற்ற வேண்டிய இஸ்லாமிய சமுதாயம் கப்ருகளை வணங்கி வழிபட்டு வருகின்றது. இவருடைய வாழ்நாளில் பெரும் பகுதியை இதற்கெதிரான பிரச்சாரத்திற்காகவே அர்பணித்தார்.

கப்ரு வணக்கத்திற்கு எதிரான பிரச்சாரத்தில் பல இடங்களில் இவர் தாக்கப்பட்டார். அதனைத் தாண்டியும் அல்லாஹ் தனது மார்க்கத்திற்கு வெற்றியைக் கொடுத்தான்.

கப்ரு வணங்கிகளுடன் பல விவாதக் களங்களை சந்தித்த பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அல்லாஹ்வை மாத்திரமே வணங்க வேண்டும், அவ்லியாக்களை வணங்கக் கூடாது, அவர்களிடம் பிரார்த்திக்கக் கூடாது என்பதை ஆணித்தரமாக நிரூபித்தார். இவருடைய இந்தப் பிரச்சாரத்தின் விளைவாக தமிழகத்தின் பல ஊர்களில் தர்காக்களை கட்டி, போசித்து வந்தவர்களே அதனை உடைத்துத் தரை மட்டமாக்கும் நிலை உருவாகியது.

• இஸ்லாத்தின் மூல ஆதாரங்கள் இரண்டா நான்கா?
• இறைவனுக்கு உருவம் உண்டா?
• இணை கற்பிப்பவர் யார்?
• களியக்காவிளை விவாதம்.
• இலங்கை விவாதம்.
• சுன்னத் ஜமாஅத் நூல்களில் ஆபாசங்கள்.
• இமாம்கள் உதவி இல்லாமல் குர்ஆனை விளங்க முடியுமா?
• குர்ஆனில் எழுத்து பிழைகளா – துத்துக்குடி போன்ற தலைப்புகளில் கப்ரு வணங்கும் தரீக்கா, பரேலவிகளுடன் இவர் செய்த விவாதங்கள் புகழ் பெற்றவை. கப்ரு வணங்கிகளாக இருந்த பலர் ஏகத்துவவாதிகளாக மாறும் நிலையை உண்டாக்கின அந்த விவாதங்கள்.
குர்ஆன், ஹதீஸ் தான் மார்க்கம் என்று சொல்லிக் கொண்டு அதற்கு மாற்றமான சலபிக் கொள்கையை கொண்ட ஸலபி வழிகேடர்களுடன் இவர் செய்த விவாதங்கள் குர்ஆனும், ஆதாரபூர்வமான நபிமொழிகளும் மாத்திரம் தான் நேர்வழி என்பதை தெளிவாக நிரூபித்தன. • சூனியம் வாதமும் எதிர்வாதமும்
• அஜ்வா பழமும் சூனியமும்
• முஜீபுடன் விவாதம் • ஜகாத் விவாதம்
• இலங்கை மன்சூருக்கு மறுப்பு
• முகத்தை மறைக்க வேண்டுமா ? சலஃபிகளுடன் நேரடி விவாதம்
• முஜாஹித் பேட்டி
• உமர் ஷரீபின் உளறல்
• உமர் ஷரீபின் உளுத்துப் போன வாதங்கள்
• ஹாமித் பக்ரி விமர்சனத்துக்கு பதில்
• சைபுத்தீன் சிதம்பரத்தில் ஓட்டம்
• சைபுத்தீன் ரஷாதி ஓட்டம்
• ஷைபுத்தீன் ரஷாதிக்கு மறுப்பு போன்ற வீடியோக்கள் இதற்கு சாட்சியாக இருக்கின்றன. இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பல வழிகெட்ட அமைப்பினரோடும் நேருக்கு நேர் விவாதத்தில் கலந்து சத்தியத்தின் மூலம் அசத்தியத்தை அடித்து நொறுக்கிய பி.ஜெ அவர்கள் காதியானிகள் போன்றவர்களுடனும் நேருக்கு நேர் விவாதத்தை எதிர் கொண்டுள்ளார்.

அரபியில் தான் பெற்ற புலமை, தேர்ந்த மார்க்க அறிவு, பேச்சுத் திறமை, நினைவாற்றல், சமயோசித சிந்தனை போன்றவை இவருடைய பிரச்சாரத்திற்கு உத்வேகமளித்தன. முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பின் எந்த நபியும் வரமாட்டார். அவர் தான் இறுதி நபி என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை தகர்க்க முயன்ற மிர்சா குலாம் அஹ்மத் காதியானி என்பவன் தானும் நபியென்று வாதிட்டான். இவனுடைய கொள்கையினால் கவரப்பட்டவர்கள் அஹ்மதியாக்கள் என்ற பெயரில் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். 1994ம் ஆண்டு கோவையில் காதியானிகளுடன் இவர் நடத்திய பகிரங்க விவாதம் காதியானிகளின் கோட்டையையே தவிடு பொடியாக்கியது. • மிர்ஸாகுலாம் பொய்யனே
• ரஷாது கலீபா பொய்யனா தூதரா
• 19 அபத்தமா அற்புதமா
• குர்ஆன் மட்டும் போதுமா
• வஹீ குர்ஆன் மட்டுமா? போன்ற தலைப்புகளில் காதியானிகள் மற்றும் ரஷாத் கலீபாவை நபியென்று ஏற்றுக் கொண்ட வழிகெட்ட 19 கூட்டத்தினருடன் இவர் பகிரங்க விவாதம் செய்து இஸ்லாத்தின் அடிப்படை இறுதி நபித்துவம் நபி முஹம்மது (ஸல்) அவர்களுடன் நிறைவு பெற்று விட்டதை அல்-குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான நபி மொழிகளினூடாக நிரூபித்தார்.

இஸ்லாத்திற்கு எதிராக பல விதங்களிலும் பிரச்சாரங்களை முடுக்கி விட்டு, முஸ்லிம்களை மதம் மாற்றம் செய்வதற்காக அயராது உழைக்கும் கிருத்தவ மிஷனரிகளுடன் நேருக்கு நேர் இவர் செய்த விவாதங்கள் கிருத்தவர்களை ஆட்டம் காண வைத்தது. • பைபிள் இறைவேதமா?
• குர்ஆன் இறைவேதமே!
• கிருத்தவர்கள் ஓட்டமெடுத்த விவாதம்.
• கிறித்தவபாதிரியுடன் விவாதம்.
• கிறித்தவர்களுடன் தவ்ஹீத் ஜமாஅத் நேருக்கு நேர்.
• மூச்சுத் திணற வைத்த விவாதம் – கிறித்தவர்களுடன்.
• பாதிரியார்களுடன் நடந்த அதிரடி விவாதம். போன்ற தலைப்புகளில் இவர் நடத்திய விவாதங்களை இன்றும் இணையதளத்தில் பார்க்க முடியும். கடவுள் இல்லை. கடவுள் நம்பிக்கை என்பது தவறானது. எல்லாம் இயற்கை என்றே நம்ப வேண்டும் என்றும் கடவுள் நம்பிக்கைக்கு எதிராக செயல்படும் நாத்தீகர்களுடன் யாராவது விவாதிக்க முடியுமா? என்று நினைத்து அனைவரும் பின்வாங்கிய ஓடிய நேரத்தில் நாத்தீகர்களுடன் நேருக்கு நேர் விவாதக் களத்தில் சந்தித்தவர் தான் இந்த பி.ஜெ. • இறைவன்இருக்கின்றானா?
• நாத்திகர்களின்மூட நம்பிக்கைகள்.
• குர்ஆன்இறை வேதமா? போன்ற தலைப்புகளில் நடைபெற்ற விவாதக் களத்தில் இறைவன் இருக்கின்றான் என்பதை நிரூபித்ததுடன், அவன் அல்லாஹ் மாத்திரம் தான் என்பதையும் அறிவுப்பூர்வமான நிரூவினார் அறிஞர் பி.ஜெ அவர்கள்.

இப்படி பல தரப்பட்ட வழிகெட்ட கொள்கைகளையும் அல்-குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் விவாதக் களங்கள் மூலம் அடித்து நொருக்கியவர் தான் இந்த பி.ஜெ. அசத்தியத்திற்கு எதிரான இவருடைய பயனத்தினால் வங்குரோத்து நிலை அடைந்தவர்களே இவரின் பிரச்சாரத்திற்கு பல இடங்களிலும் தடை ஏற்படுத்தி வருகின்றார்கள்.

எழுத்துப் பணியில் தனது கவர்ச்சிகரமான பேச்சின் மூலம் ஏகத்துவக் கருத்துக்களை பட்டி தொட்டியெங்கும் கொண்டு செல்வதில் செல்வாக்குச் செலுத்திய அறிஞர் பி.ஜெ அவர்கள் எழுத்துப் பணியிலும் மிகப் பெரும் புரட்சிக்கு வித்திட்டார்.

இஸ்லாத்தின் அடிப்படைக் கருத்துக்களை மக்கள் மயப்படுத்தும் ஆயிரக் கணக்கான கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார்.

• புரட்சி மின்னல்,

• அல்-ஜன்னத்,

• அல்-முபீன்,

• அந்-நஜாத்,

• ஏகத்துவம்,

• தீன்குலப் பெண்மணி

ஆகிய மாத இதழ்களில் இவர் தனது ஏகத்துவப் பிரச்சார ஆக்கங்களை எழுதியுள்ளார்.

“நர்கீஸ்” என்ற மாத இதழில் இவர் எழுதிய “விற்பனைக்காக கற்பனைக் கதைகள்” என்ற தொடர் பெரும் வரவேற்பை பெற்றதுடன், இதழ் நிர்வாகத்திற்கு வந்த அழுத்தம் காரணமாக அந்தத் தொடர் இடை நடுவே நிறுத்தப்பட்டது.

நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள ஜைனுல் ஆபிப்தீன் அவர்கள் இஸ்லாத்திற்கு எதிரான மாற்றாரின் விமர்சனங்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கும் விதமான பல நூல்களை எழுதியுள்ளார்.

• நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?

• இஸ்லாத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களும் பதில்களும்.

• accusations-and-answers

• அர்த்தமுள்ள இஸ்லாம்

• மாமனிதர் நபிகள் நாயகம்

• PROPHET MUHAMMAD THE MAN SUPREME

• அர்த்தமுள்ள கேள்விகள்

அறிவுப்பூர்வமான பதில்கள் • வருமுன் உரைத்த இஸ்லாம்

• இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா

• Does Islam snatch the Rights of Women?

• மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்

• வேதம் ஓதும் சாத்தான்கள் போன்றவை முக்கியமானவை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி இவர் எழுதிய “நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?” என்ற தலைப்பிலான நூல் மாற்று மத நண்பர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த ஒரு நூலாகும். நபி (ஸல்) அவர்களைப் பற்றிய மாற்று மத நண்பர்களின் தவறான எண்ணங்களுக்கு பதில் சொல்லும் விதமாக மிக அருமையாக இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. அதே போல் இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பரிக்கின்றதா? என்ற தலைப்பில் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகளைப் பற்றி விரிவாக இவர் எழுதி வெளியிட்ட நூல் தமிழுலகில் புகழ் பூத்ததாகும். நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?, அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப் பூர்வமான பதில்கள், குற்றச் சாட்டுக்களும் பதில்களும் போன்ற தலைப்புகளில் மாற்று மத நண்பர்களின் அர்த்தமுள்ள கேள்விகளுக்கு அறிவுப் பூர்வமான பதில்களை இவர் வழங்கி தனியான நூல்களை வெளியிட்டுள்ளார். இஸ்லாத்தையும், நபியவர்களையும் கொச்சைப்படுத்தி சல்மான் ரூஷ்தி, தஸ்லிமா நஸ்ரின் போன்றவர்கள் வெளியிட்ட நூல்களுக்கு மறுப்பாக ”வேதம் ஓதும் சாத்தான்கள்” என்ற பெயரில் இவர் எழுதிய நூல் பெரும் வரவேற்பைப் பெற்றது. இஸ்லாத்திற்கு எதிராக பெரும் விமர்சனங்களை முன் வைத்து வரும் கிருத்தவர்களின் அனைத்து விமர்சனங்களுக்கும் காலத்திற்கு ஏற்றாட் போல் இவர் வழங்கிய பதில்கள் அடங்கிய நூல்கள் பொக்கிஷங்களாக பாதுகாக்கப்பட வேண்டியவை.

• இயேசு சிலுவையில் அறையப்படவில்லை.

• இயேசு சிலுவையில் அறையப்படவில்லை ஆங்கிலம்.

• இது தான் பைபிள்.

• இதுதான் பைபிள் ஆங்கிலம்.

• இயேசு இறை மகனா?

• Is jesus the son of god

• பைபிளில் நபிகள் நாயகம்.

• பைபிளில் நபிகள் நாயகம் (ஆங்கிலம்)

• கப்ஸா நிலைக்குமா?

போன்ற தலைப்புகளில் கிருத்தவர்களின் விமர்சனங்களுக்கு இவர் பதில் அளித்துள்ளார். ஜபமணி என்ற பாதிரியார் இஸ்லாத்தை கொச்சைப் படுத்தி “கஃபா நிலைக்குமா?” என்ற தலைப்பில் ஓர் பிரசுரம் வெளியிட்ட நேரத்தில் “கப்ஸா நிலைக்குமா?” என்ற தலைப்பில் இவர் எழுதி வெளியிட்ட நூல் மிகவும் பிரபலம் வாய்ந்தது.

இந்தப் புத்தகம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவு கிருத்தவ பாதிரி ஜபமனியுடன் பி.ஜெ அவர்கள் கிருத்தவம் மற்றும் இஸ்லாம் தொடர்பில் நேரடி விவாதம் செய்து இஸ்லாம் சத்திய மார்க்கம் என்பதை நிரூபணம் செய்தார். இஸ்லாத்திற்குள் இருந்து இஸ்லாத்தின் பெயரால் மூட நம்பிக்கைகளையும், போலிக் கருத்துக்களையும் மார்க்கம் என்று பரப்பும் உலமாக்களின் கருத்துக்கள் மூட நம்பிக்கைகள் அனைத்துக்கும் எதிராக இவர் பல நூல்களை எழுதியுள்ளார். • பேய் பிசாசு உண்டா?

• இஸ்லாமியக் கொள்கை.

• இறைவனிடம் கையேந்துங்கள்.

• யாகுத்பா ஓர் ஆய்வு

• ஜின்களும் ஷைத்தான்களும்

• சுப்ஹான மவ்லித்

• முஹ்யித்தீன் மவ்லித் ஓர் ஆய்வு

• இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூன்யம்

• Was Allah’s Apostle Affected by Black Magic ?

• இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள்

• தர்கா வழிபாடு

• திருமறையின் தோற்றுவாய்

• குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை

• கொள்கை விளக்கம்

• இறைவனைக் காண முடியுமா

• கியாமத் நாளின் அடையாளங்கள்

• தராவீஹ் ஓர் ஆய்வு

• ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா

• குர்ஆன் மட்டும் போதுமா

• பிறை ஓர் விளக்கம்

• நபித்தோழர்களும் நமது நிலையும்

• அமீருக்குக் கட்டுப்படுதல் ஓர் ஆய்வு

• தொப்பி ஓர் ஆய்வு

• தப்லீக் தஃலீம் தொகுப்பு ஓர் ஆய்வு

• இஸ்லாத்தின் பெயரால் கற்பனைக் கதைகள்

• சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும்

• பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்

• பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம் (உருது) போன்ற தலைப்புக்களில் இவர் வெளியிட்ட புத்தகங்கள்
எதிரிகளை வாயடைக்கச் செய்த நூல்களாகும்.
அதே போல்

• தொழுகை சட்டங்கள்.

• நோன்பு

• ஜகாத் ஓர் ஆய்வு

• ஜகாத் ஒர் ஆய்வு (உருது)

• ஜகாத் ஓர் ஆய்வு (ஆங்கிலம்)

• நபிவழியில் நம் ஹஜ்

•குர்பானியின் சட்டங்கள்

• நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும்

• ஜனாஸாவின் சட்டங்கள்

• நேர்ச்சையும் சத்தியமும்

• ஜனாஸா தொழுகை

• விலக்கப்பட்ட உணவுகள்

• சந்திக்கும் வேளையில்

• when-we-meet

• துஆக்களின் தொகுப்பு

• dua-book

• இஸ்லாமியத் திருமணம்

• islamic-marriage

மேற்கண்ட தலைப்புகளில் இஸ்லாத்தின் சட்ட திட்டங்களை பற்றிய நூல்களையெல்லாம் இவர் எழுதியுள்ளமை இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்றாகும். சிறந்த பேச்சாற்றல், மொழியாற்றல், எழுத்தாற்றல் போன்றவற்றை தன்னகத்தே கொண்ட ஒரு அறிஞர் தான் சகோ. பி.ஜெ அவர்கள் என்றால் அது மிகையாகாது.

PGlmcmFtZSB3aWR0aD0iMTAwMCIgaGVpZ2h0PSI1NTAiIHNyYz0iaHR0cHM6Ly93d3cueW91dHViZS5jb20vZW1iZWQvamhIRVJ3X1BSbG8iIGZyYW1lYm9yZGVyPSIwIiBhbGxvdz0iYXV0b3BsYXk7IGVuY3J5cHRlZC1tZWRpYSIgYWxsb3dmdWxsc2NyZWVuPjwvaWZyYW1lPg==

அறிஞர் பி.ஜெ அவர்களின் முழுமையான அனுமதியுடன் இயங்கும் இஸ்லாமிய அறிவுக் கருவூலம்

அறிஞர் பீ.ஜெய்னுலாப்தீன் அவர்களின் பெயரில் நடத்தப்படும் www.onlinepj.net என்ற இந்த இணையதளம் மற்றும் https://www.facebook.com/onlinepjnet என்ற முகநூல் பக்கத்தின் உரிமையாளராகிய அப்துல் அஸீஸ் அல்தாப் ஆகிய நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அறிஞர் PJ அவர்களின் பெயரில் அவருடைய ஆக்கங்கள், வீடியோக்கள், விவாதங்கள் அனைத்தையும் இந்த தளத்தின் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்ப்பதற்கான முழுமையான அனுமதியை எனக்கு வழங்கியுள்ளார். இந்தத் தளத்தின் அனுமதி கேட்டு அறிஞர் PJஅவர்களுக்கு நான் அனுப்பிய மின்னஞ்சலையும், எனது மின்னஞ்சலுக்கு அறிஞர் PJ அவர்கள் அனுப்பிய பதில் மின்னஞ்சலையும் வாசகர்களின் பார்வைக்கு தருகிறேன்.

www.onlinepj.net இணையதளம் பற்றிய உங்கள் மேலான கருத்துக்களை எனது தொலை பேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு நீங்கள் தெரிவிக்க முடியும் என்பதையும் அறிவித்துக் கொள்கிறேன்.

Ph / WhatsApp: 0094 777510105
FaceBook:
https://www.facebook.com/onlinepjnet

அறிஞர் PJ அவர்களுக்கு அல்தாப் ஆகிய நான் அனுப்பிய மின்னஞ்சல்
அப்துல் அஸீஸ் அப்துல் கனீ அல்தாப்

இல 93, காலி வீதி, தெஹிவலை, இலங்கை.

அறிஞர் பீ.ஜெய்னுலாப்தீன் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!

நான் இலங்கையச் சேர்ந்த அல்தாப். ஆரம்ப காலத்திலிருந்து இலங்கையில் தூய முறையில் ஏகத்துவத்தை நிலை நாட்ட பாடுபட்டவர்களில் ஒருவர். உங்கள் 2005ம் ஆண்டு இலங்கை விஜயத்திற்கு காரணமாக இருந்தவர்களின் ஒருவர் ஆவேன்.

உங்களை தமிழ்நாடு தெளஹீத் ஜமாஅத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து தற்போது அநியாயமான முறையில் நீக்கியுள்ளார்கள். ஜமாஅத்திலிருந்து நீங்கள் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவித்த சில நாட்களில் ஜமாஅத் நடத்திய மாநில செயல்குழுவில் உங்களுடைய வீடியோக்களை அனைத்தையும் இணையத்திலிருந்து நீக்குவதாகவும் ஒன்லைன் பீ.ஜெ இணையதளத்தை மாற்றுவதாகவும், உங்கள் புத்தகங்கள் அனைத்தையும் டிஎன்டிஜெ அறிஞர் குழு என்று போடவுள்ளதாகவும் டீ என் டீ ஜே நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது.

உங்களுக்கும் ஜமாஅத்திற்கும் இடையில் உள்ள பிரச்சினையில் தற்போது நான் பேசுவதற்கு விரும்பவில்லை. ஆனால் நீங்கள் பேசிய உரைகள், எழுதிய எழுத்துக்கள், நீங்கள் செய்த விவாதங்களினால் அல்லாஹ் உங்கள் மூலமாக எமக்கு நேர்வழி காட்டினான். இதே போல் இன்னும் பல லட்சக் கணக்கானவர்களுக்கு அல்லாஹ் இவற்றின் மூலம் நேர்வழி காட்ட வேண்டும்.எனவே தான் உங்கள் எழுத்துக்கள், பேச்சுக்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக என் சொந்த செலவில் ஒன்லைன் பீ.ஜெ டொட் நெட் என்ற பெயரில் ஒரு இணையதளத்தை நடத்த எண்ணி இலங்கையிலிருந்து ஒரு சொப்ட்வெயா கொம்பணி மூலம் தற்போது அதனை வெளியிட்டும் விட்டேன்.

இதில் இதுவரை நீங்கள் எழுதிய, பேசியவைகளை தவிர எனது எந்த சொந்தக் கருத்துக்களும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இணையதளம் பற்றி சிலர் இதற்கு பீ.ஜெ அனுமதி தந்தாரா? என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.

தெளஹீத் பிரச்சாரத்திற்கு துணையாக அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்து உங்கள் பெயரில் நான் நடத்தும் இந்த இணையதளத்திற்கு உங்களின் அனுமதியை தருமாறு கேட்டு கொள்கிறேன். உங்கள் அனுமதி கிடைத்தால் அதனையே பொது அனுமதியாக இணையதளத்தில் பிரசுரித்து விடுவேன்.

உங்கள் மேலான அனுமதியை எதிர்பார்த்தவனாக!

அப்துல் அஸீஸ் அப்துல் கனீ அல்தாப் தெஹிவலை, இலங்கை

0777510105

அறிஞர் PJ அவர்கள் அனுப்பிய பதில்.

அன்புள்ள சகோதரர் அல்தாப் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். வஹீ மட்டுமே இஸ்லாத்தின் மூல ஆதாரம் என்ற அடிப்படைக் கொள்கையில் செயல்படுவதற்காக இலங்கையில் SLTJஉருவாக்கப்பட்ட போது முக்கிய தூண்களில் நீங்களும் ஒருவர் என்பதை நான் அறிவேன்.

எந்தப் பொறுப்புக்கும் வர நீங்கள் ஆசைப்படாவிட்டாலும் உங்கள் உழைப்பை நான் நினைவில் வைத்துள்ளேன்.

எனது ஆக்கங்களையும், ஆய்வுகளையும், உரைகளையும், விவாதங்களையும் அறிந்து கொள்ள விரும்புவோருக்கு பயனளிக்கும் வகையில் நீங்கள் onlinepj.net என்ற பெயரில் என் பெயரைப் பயன்படுத்திக் கொள்ளவும் எனது எல்லா ஆக்கங்களையும் பயன்படுத்திக் கொள்ளவும் நான் மனப்பூர்வமாக அனுமதிக்கிறேன்.

இதனால் பயன் பெறுவோரின் மறுமைப் பரிசில் எனக்கு பங்கு கிடைக்கவும், இதனால் பயனடைந்தோரின் துஆக்கள் எனக்கு கிடைக்கவும் நீங்கள் உதவுகிறீர்கள் என்பதால் எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் அன்புடன்

பீ.ஜைனுல் ஆபிதீன்.

AlthafOne AlthafOne