குப்புறப் படுக்கலாமா?

குப்புறப் படுக்கலாமா?

பதில்

குப்புறப்படுத்து தூங்கக் கூடாது என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்துமே அறிவிப்பாளர் தொடரில் பல குறைபாடுகளைக் கொண்டதாக உள்ளன.

இந்த அறிவிப்பாளர் தொடர் குறித்த விமர்சனம் நுணுக்கமானதாக இருந்தாலும் இதைச் சரியான ஹதீஸ் என்று சிலர் வாதிடுவதால் விரிவாகவே இதை விளக்குகிறோம்.

முதல் ஹதீஸ்

 حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ وَعَبْدُ الرَّحِيمِ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو حَدَّثَنَا أَبُو سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا مُضْطَجِعًا عَلَى بَطْنِهِ فَقَالَ إِنَّ هَذِهِ ضَجْعَةٌ لَا يُحِبُّهَا اللَّهُ وَفِي الْبَاب عَنْ طِهْفَةَ وَابْنِ عُمَرَ قَالَ أَبُو عِيسَى وَرَوَى يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ يَعِيشَ بْنِ طِهْفَةَ عَنْ أَبِيهِ وَيُقَالُ طِخْفَةُ وَالصَّحِيحُ طِهْفَةُ وَقَالَ بَعْضُ الْحُفَّاظِ الصَّحِيحُ طِخْفَةُ وَيُقَالُ طِغْفَةُ يَعِيشُ هُوَ مِنْ الصَّحَابَةِ رواه الترمدي

7524 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو حَدَّثَنَا أَبُو سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ مَرَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَجُلٍ مُضْطَجِعٍ عَلَى بَطْنِهِ فَقَالَ إِنَّ هَذِهِ لَضِجْعَةٌ مَا يُحِبُّهَا اللَّهُ عَزَّ وَجَلَّ رواه أحمد

7698 حَدَّثَنَا أَبُو كَامِلٍ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا مُضْطَجِعًا عَلَى بَطْنِهِ فَقَالَ إِنَّ هَذِهِ ضِجْعَةٌ لَا يُحِبُّهَا اللَّهُ رواه أحمد

ஒருமனிதர் தன்னுடைய வயிற்றின் மீது (குப்புறப்) படுத்திருப்பதை நபியவர்கள் பார்த்தார்கள். இவ்வாறு படுப்பதை அல்லாஹ் விரும்ப மாட்டான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி)

நூல்கள்:  திர்மிதி, அஹ்மது

இதன் அறிவிப்பாளர்கள் தொடர் பின்வருமாறு உள்ளது.

நபியவர்களிடமிருந்து அபூ ஹூரைரா (ரலி)

அபூ ஹூரைராவிடமிருந்து அபூ ஸலமா

அபூ ஸலமாவிடமிருந்து முஹம்மது பின் அமர்

இந்த அறிவிப்பாளர் வரிசையில் வரும் ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானது அல்ல என புகாரி கூறுகிறார்.

التاريخ الصغير –

682 – وقال محمد بن عمرو عن أبي سلمة عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه و سلم نحوه ولا يصح

التاريخ الكبير

3167 – طخفة الغفاري له صحبة وقال محمد بن عمرو عن أبي سلمة عن أبي هريرة عن النبي صلى الله عليه و سلم ولا يصح وقال لنا أحمد بن الحجاج نا عبد العزيز بن محمد عن محمد بن عمرو بن حلحلة الديلي عن محمد بن عمرو بن عطاء عن أبي هريرة عن النبي صلى الله عليه و سلم ولا يصح أبو هريرة

நபியவர்களிடமிருந்து அபூ ஹூரைரா (ரலி)

அபூ ஹூரைராவிடமிருந்து அபூ ஸலமா

அபூ ஸலமாவிடமிருந்து முஹம்மது பின் அம்ர்

என்ற அறிவிப்பாளர் வரிசையில் அறிவிக்கப்படும் ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானது அல்ல என புகாரி கூறியுள்ளார்கள்.

நூல் : தாரீகுஸ் ஸகீர், தாரீகுல் கபீர்

புகாரி அவர்கள் இதற்கான காரணத்தைக் கூறவில்லை. அபூ ஹாத்தம் அவர்கள் காரணத்துடன் தமது இலலுல் ஹதீஸ் என்ற நூலில் இதை விளக்கியுள்ளனர்.

علل الحديث –

186- وَسَأَلْتُ أَبِي عَنْ حَدِيثٍ ؛ رَوَاهُ حَمَّادُ بْنُ سَلَمَةَ ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو ، عَنْ أَبِي سَلَمَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنّ النَّبِيَّ صلى الله عليه وسلم مَرَّ بِرَجُلٍ مُضْطَجِعٍ عَلَى بَطْنِهِ ، فَقَالَ : هَذِهِ ضِجْعَةٌ لا يُحِبُّهَا اللَّهُ. قَالَ أَبِي : لَهُ عِلَّةٌ.قُلْتُ : وَمَا هُوَ ؟ قَالَ : رَوَاهُ ابْنُ أَبِي ذِئْبٍ ، عَنْ خَالِهِ الْحَارِثِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ، قَالَ : دَخَلْتُ أَنَا ، وَأَبُو سَلَمَةَ عَلَى ابْنِ طَهْفَةَ ، فَحَدَّثَ عَنْ أَبِيهِ ، قَالَ : مَرَّ بِي وَأَنَا نَائِمٌ عَلَى وَجْهِي ، وَهُوَ الصَّحِيحُ.

2187- وَسَأَلْتُ أَبِي عَنْ حَدِيثٍ ؛ رَوَاهُ عَبْدُ الْعَزِيزِ الدَّرَاوَرْدِيُّ ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَلْحَلَةَ الدُّؤَلِيِّ ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ الْعَامِرِيِّ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم وَأَنَا مُنْكَبٌّ عَلَى وَجْهِي نَائِمٌ فَأَقْرَعَنِي ، ثُمَّ قَالَ : هَذِهِ ضِجْعَةٌ يَبْغَضُهَا اللَّهُ.قَالَ أَبِي : إِنَّمَا هُوَ مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ عَطَاءٍ ، عَنِ ابْنِ طَخْفَةَ ، عَنْ أَبِيهِ ، قَالَ : مَرَّ بِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم.

குப்புறப் படுப்பது தொடர்பாக அபூ ஹூரைரா வழியாக அறிவிக்கப்படும் செய்தியைப் பற்றி என்னுடைய தந்தை அபூ ஹாதிமிடம் நான் கேட்டபோது அதில் குறையுள்ளது என்று கூறினார்கள். நான் அது என்ன? என்று கேட்டேன். (குப்புறப் படுப்பது தொடர்பாக) தஹ்ஃபா அவர்களிமிடமிருந்து அவருடைய மகன் இப்னு தஹ்ஃபா அறிவிப்பது தான் சரியானது எனக் குறிப்பிட்டார்கள்.

(குப்புறப் படுப்பது தொடர்பாக) அபூ ஹூரைரா வழியாக அறிவிக்கப்படுவது பற்றி என்னுடைய தந்தையிடம் கேட்டேன் அதற்கவர்கள், (குப்புறப்படுப்பது தொடர்பாக) தஹ்ஃபா அவர்களிமிடமிருந்து அவருடைய மகன் இப்னு தஹ்ஃபா வழியாக முஹம்மத் பின் அம்ர் என்பார் அறிவிப்பது தான் சரியானது எனக் குறிப்பிட்டார்கள்.

நூல் : இலலுல் ஹதீஸ்

நுணுக்கமான குறைபாடு

மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர்களில் யாரும் நம்பிக்கை குறைவானவர்கள் அல்ல. அனைவருமே நம்பகமானவர்கள் தான். ஆனாலும் அறிவிப்பாளர் குறித்து எந்தக் குறைபாடும் இல்லாமல் இருந்தும் இதைச் சரியானது அல்ல என்று புகாரி, அபூஹாதம் ஆகியோர் கூறியிருப்பது ஏன் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஹதீஸ்களில் அறிவிப்பாளரின் நினைவாற்றல், நம்பகத்தன்மை, தொடர்பு அறுந்துள்ளமை போன்ற காரணங்களால் ஹதீஸ்கள் பலவீனமாக ஆகின்றன என்பதை நாம் பரவலாக அறிந்துள்ளோம்.

இது அல்லாத நுணுக்கமான காரணங்களாலும் சில ஹதீஸ்கள் பலவீனமடையும். அது போன்ற பலவீனங்களை இலல் என்று ஹதீஸ் கலையில் வகைப்படுத்தியுள்ளனர். இந்த வகையிலான நுணுக்கமான பலவீனங்களை கூறும் நூல்கள் இலல் அல்ஹதீஸ் எனப்படும்.

مقدمة ابن الصلاح

اعلم : أن معرفة علل الحديث من أجل علوم الحديث وأدقها وأشرفها وإنما يضطلع بذلك أهل الحفظ والخبرة والفهم الثاقب وهي عبارة عن أسباب خفية غامضة قادحة فيه  فالحديث المعلل هو : الحديث الذي اطلع فيه على علة تقدح في صحته مع أن ظاهرة السلامة منها ويتطرق ذلك إلى الإسناد الذي رجاله ثقات الجامع شروط الصحة من حيث الظاهر ويستعان على إدراكها بتفرد الراوي وبمخالفة غيره له مع قرائن تنضم إلى ذلك تنبه العارف بهذا الشأن على إرسال في الموصول أو وقف في المرفوع أو دخول حديث في حديث أو وهم واهم بغير ذلك بحيث يغلب على ظنه ذلك فيحكم به أو يتردد فيتوقف فيه . وكل ذلك مانع ممن الحكم بصحة ما وجد ذلك فيه وكثيرا ما يعللون الموصول بالمرسل مثل : أن يجيء الحديث بإسناد موصول ويجيء أيضا بإسناد منقطع أقوى من إسناد الموصول ولهذا اشتملت كتب علل الحديث على جمع طرقه

இலல் அல்ஹதீஸ் எனும் கலை தான் ஹதீஸ் கலையில் மிக நுணுக்கமானதாகும். இதைக் கூர்மையான அறிவுள்ளவரும், ஏராளமான ஹதீஸ்களை மனனம் செய்தவரும் தான் புரிந்து கொள்வார்கள். ஒரு ஹதீஸை மட்டும் பார்க்காமல் அது பற்றி வந்துள்ள மொத்த ஹதீஸ்கள் எத்தனை? அனைத்தும் ஒரே மாதிரி அமைந்துள்ளனவா? சிறு சிறு வேறுபாடுகள் உள்ளனவா? என்று நுணுக்கமாக ஆராய்ந்து கண்டுபிடிக்கும் குறைபாடுகளே இலல் எனப்படும்.

நூல் : முகத்திமா இப்னுஸ் ஸலாஹ்

குப்புறப் படுப்பது குறித்த அனைத்து ஹதீஸ்களையும் திரட்டி வைத்துக் கொண்டு ஆராயும் போது முஹம்மத் பின் அம்ர் என்பார் இப்னு துஹ்பா வழியாகவும், இப்னு துஹ்பா என்பார் தனது தந்தை துஹ்பா வழியாகவும் அறிவிப்பதாக ஏராளமான அறிவிப்புகள் உள்ளன.

ஆனால் ஒரே ஒரு அறிவிப்பில் மட்டும் முஹம்மத் பின் அம்ர் என்பார் அபூஹுரைராவிடமிருந்து அறிவிப்பதாக உள்ளது.

அனைத்து அறிவிப்புகளையும் ஆய்வு செய்த இலல் துறையில் விற்பண்ணர்களான அபூஹாத்தம், புகாரி போன்றவர்கள் குப்புறப் படுப்பது குறித்த ஹதீஸை அபூஹுரைரா வழியாக முஹம்மத் பின் அம்ர் அறிவிக்க வாய்ப்பு இல்லை என்று கண்டறிந்து இது பலவீனமானது என்று முடிவு செய்கின்றனர்.

ஆனால் முஹம்மத் பின் அம்ர் என்பார் துஹ்பா என்பார் வழியாக அறிவிக்கும் ஹதீஸை அறிவிக்கவே வாய்ப்பு உள்ளது என்று முடிவுக்கு வருகின்றனர்.

இரண்டாவது ஹதீஸ்

எந்த ஹதீஸை முஹம்மத் பின் அமர் என்பார் துஹ்பா என்பாரிடமிருந்து அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக மேற்கண்ட இமாம்கள் கருதுகிறார்களோ அந்த ஹதீஸ் இது தான்.

22510 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ عَنْ ابْنِ إِسْحَاقَ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ عَنْ يَعِيشَ بْنِ طِخْفَةَ الْغِفَارِيِّ عَنْ أَبِيهِ قَالَ ضِفْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَنْ تَضَيَّفَهُ مِنْ الْمَسَاكِينِ فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي اللَّيْلِ يَتَعَاهَدُ ضَيْفَهُ فَرَآنِي مُنْبَطِحًا عَلَى بَطْنِي فَرَكَضَنِي بِرِجْلِهِ وَقَالَ لَا تَضْطَجِعْ هَذِهِ الضِّجْعَةَ فَإِنَّهَا ضِجْعَةٌ يَبْغَضُهَا اللَّهُ عَزَّ وَجَلَّ رواه أحمد

தஹ்பா அல்கிபாரி (ரலி) அறவிக்கிறார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விருந்தளித்த ஏழைகளில் நானும் ஒருவனாக விருந்தில் கலந்து கொண்டேன். தமது விருந்தினரைக் கவனிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்த போது நான் வயிற்றின் மீது அதாவது குப்புறப் படுத்து இருப்பதைப் பார்த்தார்கள். தமது காலால் என்னை உசுப்பிவிட்டார்கள். நீ இவ்வாறு படுக்காதே. இது அல்லாஹ்வுக்குப் பிடிக்காத படுக்கும் முறையாகும் என்றார்கள்.

அறிவிப்பவர் : துஹ்பாவின் மகன் எயீஷ்

நூல் :அஹமத் 25510

துஹ்பாவின் மகனிடமிருந்து இதைக் கேட்டு அறிவிப்பவர் முஹம்மத் பின் அம்ர் ஆவார். இவரைப் போலவே இன்னும் பலர் இந்த ஹதீஸை துஹ்பா வழியாக அறிவித்திருப்பதாலும் இவரும் துஹ்பா வழியாக அறிவித்திருப்பதாலும் இது தான் சரியானது. இவர் அபூஹுரைரா வழியாக அறிவிப்பதாக வருவது சரியான அறிவிப்பு அல்ல.

அப்படியானால் அபூஹுரைரா ரலி வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸ் தானே பலவீனமானது? இந்த ஹதீஸ் பலவீனமானது அல்லவே? இந்த ஹதீஸ் அடைப்படையில் குப்புறப்படுக்கக் கூடாது என்று கூறலாமா என்ற கேள்வி எழலாம்.

ஆனால் இந்த ஹதீஸ் வேறு காரணங்களால் பலவீனமடைகின்றது. அதாவது இந்த ஹதீஸை அறிவுக்கும் பலர் பலவாறாக முரண்பட்டு அறிவிக்கின்றனர். அதாவது இள்திராப் எனும் குழப்பம் இதில் அதிகமாக உள்ளது.

அந்த ஹதீஸ்களில் சிலவற்றை பார்ப்போம்.

4383 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ قَالَ حَدَّثَنِي أَبِي عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ قَالَ حَدَّثَنَا أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ يَعِيشَ بْنِ طَخْفَةَ بْنِ قَيْسٍ الْغِفَارِيِّ قَالَ كَانَ أَبِي مِنْ أَصْحَابِ الصُّفَّةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ انْطَلِقُوا بِنَا إِلَى بَيْتِ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا فَانْطَلَقْنَا فَقَالَ يَا عَائِشَةُ أَطْعِمِينَا فَجَاءَتْ بِحَشِيشَةٍ فَأَكَلْنَا ثُمَّ قَالَ يَا عَائِشَةُ أَطْعِمِينَا فَجَاءَتْ بِحَيْسَةٍ مِثْلِ الْقَطَاةِ فَأَكَلْنَا ثُمَّ قَالَ يَا عَائِشَةُ اسْقِينَا فَجَاءَتْ بِعُسٍّ مِنْ لَبَنٍ فَشَرِبْنَا ثُمَّ قَالَ يَا عَائِشَةُ اسْقِينَا فَجَاءَتْ بِقَدَحٍ صَغِيرٍ فَشَرِبْنَا ثُمَّ قَالَ إِنْ شِئْتُمْ بِتُّمْ وَإِنْ شِئْتُمْ انْطَلَقْتُمْ إِلَى الْمَسْجِدِ قَالَ فَبَيْنَمَا أَنَا مُضْطَجِعٌ فِي الْمَسْجِدِ مِنْ السَّحَرِ عَلَى بَطْنِي إِذَا رَجُلٌ يُحَرِّكُنِي بِرِجْلِهِ فَقَالَ إِنَّ هَذِهِ ضِجْعَةٌ يُبْغِضُهَا اللَّهُ قَالَ فَنَظَرْتُ فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه أبوداد

நூல்: அபூதாவூத் (4383)

14993 حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ عَنْ هِشَامٍ الدَّسْتُوَائِيِّ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ يَعِيشَ بْنِ طِخْفَةَ بْنِ قَيْسٍ الْغِفَارِيِّ قَالَ كَانَ أَبِي مِنْ أَصْحَابِ الصُّفَّةِ فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهِمْ فَجَعَلَ الرَّجُلُ يَنْقَلِبُ بِالرَّجُلِ وَالرَّجُلُ بِالرَّجُلَيْنِ حَتَّى بَقِيتُ خَامِسَ خَمْسَةٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ انْطَلِقُوا فَانْطَلَقْنَا مَعَهُ إِلَى بَيْتِ عَائِشَةَ فَقَالَ يَا عَائِشَةُ أَطْعِمِينَا فَجَاءَتْ بِحَشِيشَةٍ فَأَكَلْنَا ثُمَّ جَاءَتْ بِحَيْسَةٍ مِثْلَ الْقَطَاةِ فَأَكَلْنَا ثُمَّ قَالَ يَا عَائِشَةُ اسْقِينَا فَجَاءَتْ بِعُسٍّ فَشَرِبْنَا ثُمَّ جَاءَتْ بِقَدَحٍ صَغِيرٍ فِيهِ لَبَنٌ فَشَرِبْنَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْ شِئْتُمْ بِتُّمْ وَإِنْ شِئْتُمْ انْطَلَقْتُمْ إِلَى الْمَسْجِدِ فَقُلْتُ لَا بَلْ نَنْطَلِقُ إِلَى الْمَسْجِدِ قَالَ فَبَيْنَا أَنَا مِنْ السَّحَرِ مُضْطَجِعٌ عَلَى بَطْنِي إِذَا رَجُلٌ يُحَرِّكُنِي بِرِجْلِهِ فَقَالَ إِنَّ هَذِهِ ضِجْعَةٌ يَبْغُضُهَا اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى فَنَظَرْتُ فَإِذَا هُوَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدَّثَنَا هَاشِمٌ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ يَعْنِي شَيْبَانَ حَدَّثَنَا يَحْيَى يَعْنِي ابْنَ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي سَلَمَةَ قَالَ أَخْبَرَنِي يَعِيشُ بْنُ طِخْفَةَ بْنِ قَيْسٍ عَنْ أَبِيهِ وَكَانَ أَبُوهُ مِنْ أَهْلِ الصُّفَّةِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا فُلَانُ انْطَلِقْ بِهَذَا مَعَكَ فَذَكَرَ مَعْنَاهُ رواه أحمد

முஸ்னத் அஹமத் 14993

22512 حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ عَنْ هِشَامٍ الدَّسْتُوَائِيِّ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ يَعِيشَ بْنِ طِخْفَةَ الْغِفَارِيِّ قَالَ كَانَ أَبِي مِنْ أَصْحَابِ الصُّفَّةِ فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهِمْ فَجَعَلَ يَنْقَلِبُ الرَّجُلُ بِالرَّجُلِ وَالرَّجُلَيْنِ حَتَّى بَقِيتُ خَامِسَ خَمْسَةٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ انْطَلِقُوا فَانْطَلَقْنَا مَعَهُ إِلَى بَيْتِ عَائِشَةَ فَقَالَ يَا عَائِشَةُ أَطْعِمِينَا فَجَاءَتْ بِحَشِيشَةٍ فَأَكَلْنَا ثُمَّ جَاءَتْ بِحَيْسَةٍ مِثْلِ الْقَطَاةِ فَأَكَلْنَا ثُمَّ قَالَ يَا عَائِشَةُ اسْقِينَا فَجَاءَتْ بِعُسٍّ فَشَرِبْنَا ثُمَّ جَاءَتْ بِقَدَحٍ صَغِيرٍ فِيهِ لَبَنٌ فَشَرِبْنَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْ شِئْتُمْ بِتُّمْ وَإِنْ شِئْتُمْ انْطَلَقْتُمْ إِلَى الْمَسْجِدِ فَقُلْنَا لَا بَلْ نَنْطَلِقُ إِلَى الْمَسْجِدِ قَالَ فَبَيْنَا أَنَا فِي الْمَسْجِدِ مُضْطَجِعًا عَلَى بَطْنِي إِذَا رَجُلٌ يُحَرِّكُنِي بِرِجْلِهِ فَقَالَ إِنَّ هَذِهِ ضِجْعَةٌ يَبْغَضُهَا اللَّهُ فَنَظَرْتُ فَإِذَا هُوَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدَّثَنَا هَاشِمٌ يَعْنِي ابْنَ الْقَاسِمِ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ يَعْنِي شَيْبَانَ عَنْ يَحْيَى يَعْنِي ابْنَ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي سَلَمَةَ قَالَ أَخْبَرَنِي يَعِيشُ بْنُ قَيْسِ بْنِ طِخْفَةَ عَنْ أَبِيهِ وَكَانَ أَبُوهُ مِنْ أَهْلِ الصُّفَّةِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا فُلَانُ انْطَلِقْ بِهَذَا مَعَكَ وَذَكَرَ مَعْنَاهُ رواه أحمد

முஸ்னத் அஹ்மத் 22512

இந்த ஹதீஸ் இன்னும் பல நூல்களில் இடம்பெற்றுள்ளது. இதில் உள்ள முரண்படுகள ஏராளம் என்று தஹ்தீபுல் கமால் ஆசிரியர் ஒரு பட்டியலே போட்டுள்ளார்.

تهذيب الكمال

من اسمه طخفة وطرفة وطريف  2959 – بخ د س طخفة بن قيس الغفاري صحابي له حديث واحد في النهي عن النوم على بطنه رواه يحيى بن أبي كثير وفيه عنه اختلاف طويل عريض فقيل عنه د س عن أبي سلمة بن عبد الرحمن عن يعيش بن طخفة بن قيس عن أبيه وقيل عنه س ق عن أبي سلمة عن يعيش بن قيس بن طخفة عن أبيه وقيل عنه بخ عن أبي سلمة عن بن طخفة عن أبيه وقيل عنه س عن محمد بن إبراهيم بن الحارث التيمي عن عطية بن قيس عن أبيه وهو وهم وقيل عنه س عن محمد بن إبراهيم عن بن ليعيش بن طغفة وفي نسخة بن طخفة عن أبيه وقيل عنه س عن بن لقيس بن طغفة   وفي نسخة بن طخفة عن أبيه من غير ذكر لأبي سلمة ولا لمحمد بن إبراهيم بينهما وقيل عنه ق عن قيس بن طهفة عن أبيه من غير ذكر لأحد بينه وبين قيس ورواه يعقوب بن حميد بن كاسب ق عن إسماعيل بن عبد الله هو بن أبي أويس عن محمد بن نعيم المجمر عن أبيه عن طهفة عن أبي ذر وهو قول منكر لا نعلم أحدا تابعه عليه وفيه اختلاف غير ذلك اقتصرنا منه على ما ذكره هؤلاء الأئمة روى له البخاري في الأدب وأبو داود والنسائي وبن ماجة

முரண் ஒன்று

துஹ்ஃபா என்ற நபித்தோழர் பற்றி குறிப்பிடும் போது

ஒருவர் طخفة என்கிறார்.

இன்னொருவர் طهفة என்கிறார்.

மற்றொருவர் طغفة என்கிறார்.

முரண் இரண்டு

துஹ்ஃபா என்பவர் கைஸின் மகன் என்று சிலரும்

கைஸின் தந்தை என்று வேறு சிலரும் அறிவித்துள்ளனர்.

முரண் மூன்று

எயீஷ் என்பார் துஹ்ஃபாவின் மகன் என்று ஒருவர் கூறுகிறார்.

இன்னொருவர் எயீஷ் என்பார் கைசின் மகனும் துஹ்ஃபாவின் பேரனுமாவார் என்கிறார்.

இது குறித்து ஒவ்வொருவரும் அறிவிப்பாளர் வரிசையும் ஒவ்வொரு விதமாக உள்ளதைக் கீழே காண்க

முதல் தொடர்

1-கைஸ்

2-துஹ்ஃபா

3- எயீஷ்

4- அபூசலமா பின் அப்துர்ரஹ்மான்

5-யஹ்யா பின் அபீ கஸீர்

இரண்டாம் தொடர்

1-துஹ்பா

2-கைஸ்

3- எயீஷ்

4- அபூசலமா பின் அப்துர்ரஹ்மான்

5-யஹ்யா பின் அபீ கஸீர்

மூன்றாவது தொடர்

1-துஹ்ஃபா

2-துஹ்ஃபாவின் மகன்

3- அபூசலமா பின் அப்துர்ரஹ்மான்

4-யஹ்யா பின் அபீ கஸீர்

நான்காவது தொடர்

1-கைஸ்

2-அவரது மகன் அதிய்யா

3- முஹம்மத் பின் இப்ராஹீம்

4-யஹ்யா பின் அபீ கஸீர்

ஐந்தாவது தொடர்

1-துஹ்ஃபா

2-எயீஷின் மகன்

3- முஹம்மத் பின் இப்ராஹீம்

4-யஹ்யா பின் அபீ கஸீர்

ஆறாவது தொடர்

1-துஹ்ஃபா

2-துஹ்ஃபாவின் மகன்

3-யஹ்யா பின் அபீ கஸீர்

ஏழாவது தொடர்

1-துஹ்ஃபா

2-அவரது மகன் கைஸ்

3- யஹ்யா பின் அபீ கஸீர்

இப்படி பலவாறாக முரண்பட்டு அறிவிக்கப்படும் இந்த ஹதீஸில் யஹ்யா பின் அபீ கஸீர் என்பவர் மட்டும் சரியாகக் குறிப்பிடப்படுகிறார். மற்ற பெயர்கள் அனைத்திலும் குழப்பம் உள்ளது. எனவே யஹ்யா பின் அபீகஸீர் தான் இப்படி மாற்றி மாற்றிக் கூறுகிறார். இதன் காரணமாக இந்த ஹதீஸ் பலவீனமாகிறது.

நூல் : தஹ்தீபுல் கமால்

இந்த அறிவிப்புகள் குழப்பமானவை என்று பல அறிவிப்பாளர்கள் பற்றிய விமர்சன நூற்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆய்வு செய்பவர்களுக்காக அதன் அரபி மூலத்தைக் கீழே தந்துள்ளோம்.

إكمال الكمال – ويعيش بن طخفة عن أبيه على اختلاف في اسم أبيه، روى حديثه يحيى بن أبي كثير.

الكاشف – 2462 – طخفة بن قيس الغفاري له صحبة حديثه في النوم منبطحا في حديثه واسمه اضطراب د س

التاريخ الكبير 3167 – طخفة الغفاري له صحبة قال معاذ بن هشام حدثني أبي عن يحيى نا أبو أسامة نا يعيش بن طخفة بن قيس الغفاري عن أبيه قال وكان من أصحاب الصفة فبينا أنا مضطجع من السحر على بطني إذ رجل يحركني برجله فقال إن هذه ضجعة يبغضها الله فنظرت فإذا هو النبي صلى الله عليه و سلم  وقال لي خلف بن موسى بن خلف نا أبي نا يحيى عن أبي سلمة عن يعيش بن طخفة الغفاري أن أباه أخبره وكان من أصحاب الصفة في النوم وقال لنا موسى عن موسى بن خلف يعيش عن طهفة حدثنا آدم نا بن أبي ذئب نا الحارث بن عبد الرحمن كنت مع أبي سلمة فأتانا بن لعبد الله بن طهفة قال أبو سلمة حدث عن أبيك قال حدثني أبي عن النبي صلى الله عليه و سلم نحوه قلت من هذا قال عبد الله بن طهفة قال هذه ضجعة يكرهها الله وقال لي عبد الله بن محمد نا أبو عامر نا زهير بن محمد عن محمد بن عمرو بن حلحلة عن نعيم بن عبد الله المجمر عن بن طخفة الغفاري أخبرني أبي أنه ضاف النبي صلى الله عليه و سلم نحوه وقال محمد بن عمرو عن أبي سلمة عن أبي هريرة عن النبي صلى الله عليه و سلم ولا يصح وقال لي عبيد حدثنا يونس أنا بن إسحاق عن محمد بن عمرو بن عطاء عن نعيم بن محمد عن يعيش بن طهفة ناه عن طهفة الغفاري وقال لي معاذ بن فضالة نا هشام عن يحيى عن أبي سلمة عن يعيش بن طخفة بن قيس الغفاري كان أبي من أصحاب الصفة ولا يصح بن قيس فيه وقال لنا أحمد بن الحجاج نا عبد العزيز بن محمد عن محمد بن عمرو بن حلحلة الديلي عن محمد بن عمرو بن عطاء عن أبي هريرة عن النبي صلى الله عليه و سلم ولا يصح أبو هريرة وقال محمد أنا عبد الله أنا هشام عن يحيى عن أبي سلمة عن يعيش بن طغفة الغفاري قال كان أبي قال أبو عبد الله طغفة خطأ أيضا

تهذيب التهذيب – بخ د س ق (البخاري في الادب المفرد وأبي داود والنسائي وابن ماجة) طخفة (1) بن قيس الغفاري. صحابي له حديث واحد في النهي عن النوم على البطن رواه يحيى بن أبي كثير عن أبي سلمة عن يعيش بن طحنة عن أبيه واختلف فيه على يحيى فقيل عنه عن قيس بن طهفة عن أبيه اختلافا كثيرا فقيل في اسمه قيس بن طخفة وقيل طغفة بن قيس وقيل طهفة ورواه محمد بن نعيم المجمر عن أبيه عن طهفة عن أبي ذر وهو قول منكر وفيه اختلاف كثير.

قلت: وقيل أن الحديث عن عبدالله بن طهفة قال ابن السكن اختلفوا في اسمه وكان يسكن غيفة (2) وذكره البخاري في الاوسط في فصل من مات بين الستين إلى السبعين وقال طهفة وهم واخرج ابن حبان حديثه في صحيحه من طريق الاوزاعي عن يحيى ابن أبي كثير عن أبي طغفة ابن قيس عن أبيه.

மற்றொரு ஹதீஸ்

மேலும் அபூதர் (ரலி) அவர்களிடமிருந்து இப்னு தஹ்ஃபா அல்கிஃபாரி அறிவிப்பதாக இப்னு மாஜா (3714) ல் இடம் பெற்றுள்ளது.

3714 حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ عَنْ أَبِيهِ عَنْ ابْنِ طِخْفَةَ الْغِفَارِيِّ عَنْ أَبِي ذَرٍّ قَالَ مَرَّ بِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا مُضْطَجِعٌ عَلَى بَطْنِي فَرَكَضَنِي بِرِجْلِهِ وَقَالَ يَا جُنَيْدِبُ إِنَّمَا هَذِهِ ضِجْعَةُ أَهْلِ النَّارِ رواه ابن ماجة

இதுவும் ஆதாரத்திற்கு ஏற்றதல்ல. இந்த அறிவிப்பாளர் தொடரும் மறுக்கத் தக்கதாகும்.

இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் முஹம்மத் பின் நுஐம் என்பார் யாரென அறியப்படாதாவர் ஆவார். எனவே இது பலவீனமானதாகும்.

மற்றொரு ஹதீஸ்

18654حَدَّثَنَا رَوْحٌ حَدَّثَنَا زَكَرِيَّا حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَيْسَرَةَ أَنَّهُ سَمِعَ عَمْرَو بْنَ الشَّرِيدِ يَقُولُ بَلَغَنَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى رَجُلٍ وَهُوَ رَاقِدٌ عَلَى وَجْهِهِ فَقَالَ هَذَا أَبْغَضُ الرُّقَادِ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ رواه أحمد

18639 حَدَّثَنَا مَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ مَيْسَرَةَ عَنْ عَمْرٍو عَنِ الشَّرِيدِ أَنَّهُ سَمِعَهُ يُخْبِرُهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ إِذَا وَجَدَ الرَّجُلَ رَاقِدًا عَلَى وَجْهِهِ لَيْسَ عَلَى عَجُزِهِ شَيْءٌ رَكَضَهُ بِرِجْلِهِ وَقَالَ هِيَ أَبْغَضُ الرِّقْدَةِ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ رواه أحمد

அம்ர் பின் அஸ்ஸரீத் கூறுகின்றார். நபியவர்கள் முகம் குப்புற படுத்துக் கிடந்த ஒரு மனிதரைக் கடந்து சென்றார்கள். அப்போது இவர் தான் தூங்குபவர்களில் அல்லாஹ்விடத்தில் மிகவும் வெறுப்பிற்குரியவர் ஆவார் என்று கூறினார்கள்.

நூல்: அஹ்மத் (18654, 18639)

இந்தச் செய்தியை அறிவிக்கின்ற அம்ர் பின் அஸ்ஸரீத் என்பவர் நபித் தோழர் கிடையாது. இவர் ஸஹாபாக்களுக்கு அடுத்த காலத்தைச் சார்ந்த தாபிஈ ஆவார்.

எனவே இது அறிவிப்பாளர் தொடர் முறிவடைந்த முர்ஸல் என்ற வகையைச் சார்ந்த செய்தியாகும். இதுவும் ஆதாரத்திற்கு ஏற்றது கிடையாது.

மற்றொரு ஹதீஸ்

3715 حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ حَدَّثَنَا سَلَمَةُ بْنُ رَجَاءٍ عَنْ الْوَلِيدِ بْنِ جَمِيلٍ الدِّمَشْقِيِّ أَنَّهُ سَمِعَ الْقَاسِمَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ يُحَدِّثُ عَنْ أَبِي أُمَامَةَ قَالَ مَرَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَجُلٍ نَائِمٍ فِي الْمَسْجِدِ مُنْبَطِحٍ عَلَى وَجْهِهِ فَضَرَبَهُ بِرِجْلِهِ وَقَالَ قُمْ وَاقْعُدْ فَإِنَّهَا نَوْمَةٌ جَهَنَّمِيَّةٌ رواه ابن ماجة

அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

பள்ளிவாசலில் முகம் குப்புற தூங்கிக் கொண்டிருந்த ஒரு மனிதரை நபியவர்கள் கடந்து சென்றார்கள். அவரை தன்னுடைய காலினால் உசுப்பினார்கள். எழுந்து அமர்வீராக. இது நரகவாசிகளுடைய தூக்கமாகும் என்று கூறினார்கள்.

நூல்: இப்னுமாஜா (3715)

இந்த செய்தி பின்வரும் அறிவிப்பாளர்களில் வரிசையில் பதிவு செய்யப்பட்டுள்ளது

அபூ உமாமா (ரலி)

அல்காஸிம் இப்னு அப்திர் ரஹ்மான்

அல்வலீத் பின் ஜமீல்

ஸலமா பின் ரஜா

யஃகூப் பின் ஹூமைத்

மேற்கண்ட அறிவிப்பாளர்களில் அல்வலீத் பின் ஜமீல் என்பாரும் ஸலமா பின் ரஜா என்பாரும் பலவீனமானவர்கள் ஆவர்.

குறிப்பாக அல்வலீத் பின் ஜமீல் என்பார் அல்காஸிம் இப்னு அப்திர்ரஹ்மான் வழியாக அறிவிக்கும் செய்திகள் நிராகரிக்கத்தக்கவை என அபூ ஹாதிம் விமர்சனம் செய்துள்ளார்.

இதற்குரிய சான்றுகள் வருமாறு

تهذيب الكمال -6700 – بخ ت ق الوليد بن جميل بن قيس القرشي ويقال الكندي ويقال الكناني أبو الحجاج الفلسطيني يمامي الأصل روى عن القاسم أبي عبد الرحمن بخ ت ق ومكحول الشامي ويحيى بن أبي كثير روى عنه سلمة بن رجاء ت ق وصدقة بن عبد الله السمين وأبو النضر هاشم بن القاسم ويزيد بن هارون بخ ت فق قال أبو الحسن بن البراء عن علي بن المديني الوليد بن جميل لا أعلم روى عنه غير يزيد بن هارون قلت له كيف أحاديثه قال تشبه أحاديثه أحاديث القاسم أبي عبد الرحمن ورضيه وقال أبو زرعة شيخ لين الحديث وقال أبو حاتم شيخ يروي عن القاسم أحاديث منكرة وقال أبو عبيد الآجري سألت أبا داود عن الوليد بن جميل صاحب القاسم فقال دمشقي ليس به بأس قال يزيد بن هارون ما رأيت شاميا أسن منه قال أبو داود يقال أصله فلسطيني وذكره بن حبان في كتاب الثقات وقال أبو أحمد بن عدي وهو راو له عن القاسم أبي عبد الرحمن ولم أجد له عن غير القاسم شيئا روى له البخاري في الأدب والترمذي وبن ماجة

அல்வலீத் பின் ஜமீல் வயோதிகர், ஹதீஸ்களில் பலவீனமானவர் என அபூ சுர்ஆ கூறியுள்ளார்.

இவர் வயோதிகர், அல்காஸிம் என்பாரிடமிருந்து நிராகரிக்கத்தக்க செய்திகளை அறிவித்துள்ளார் என அபூ ஹாத்திம் கூறியுள்ளார்.

நூல் : தஹ்தீபுல் கமால்

ஸலமா பின் ரஜா என்ற அறிவிப்பாளரையும் பல்வேறு இமாம்கள் குறைகூறியுள்ளனார்.

ميزان الاعتدال –  3395 – سلمة بن رجاء [ خ، ت، ق ] الكوفى. عن إبراهيم بن أبى عبلة وغيره. قال أبو زرعة: صدوق. وقال عباس، عن يحيى: ليس بشئ. وقال النسائي: ضعيف. وقال ابن عدى: حدث بأحاديث لا يتابع عليها،

இவர் ஒருபொருட்டாகக் கொள்ளத் தக்கவரில்லை என யஹ்யா பின் முயீன் விமர்சித்துள்ளார்.

இவர் பலவீனமானவர் என நஸாயீ கூறியுள்ளார்.

எனவே மேற்கண்ட அறிவிப்பும் பலவீனம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை

குப்புறப் படுப்பது வெறுப்பிற்குரியது என்ற கருத்தில் வரக்கூடிய அனைத்து ஹதீஸ்களும் பலவீனமாக இருக்கின்ற காரணத்தினால் இவ்வாறு படுப்பது மார்க்க அடிப்படையில் தவறு என்று கூற முடியாது.

மேலும் இந்த் ஹதீஸ் கருத்து அடிப்படையிலும் சரியானது அல்ல.

எந்த மனிதராக இருந்தாலும் அவர் ஒரே விதமாகப் படுத்து உறங்கி எழ முடியாது. பலவிதமாகப் புரண்டு படுப்பது தான் மனிதனின் இயல்பாக உள்ளது. அவ்வாறு புரண்டு படுப்பவனுக்கு, தான் குப்புறப்படுத்து இருக்கிறோம் என்பதே தெரியாது. மனிதனின் சக்திக்கு உட்பட்ட விஷயங்களில் தான் மார்க்கம் தலையிடும். அல்லாஹ் கேள்வி கேட்பான். மனிதனை மீறி நடக்கும் எந்தக் காரியத்துக்கும் அவன் பொறுப்பாளியாக மாட்டான். இந்த அடிப்படை பல குர்ஆன் வசனங்கள் மூலமும், நபிமொழிகள் மூலமும் அனைவரும் அறிந்து வைத்துள்ளது தான்.

மேற்கண்ட ஹதீஸ்களில் ஒருவர் படுக்கைக்குச் செல்லும் போது குப்புறப் படுப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்ததாகக் கூறப்படவில்லை. நன்றாக ஆழ்ந்து உறங்கும் போது சஹர் நேரத்தில் வந்து பார்த்து தூங்குபவரை எழுப்பி விட்டு கண்டிப்பதாக வந்துள்ளது. ஆழ்ந்து தூங்கும் போது ஒருவர் குப்புறப்படுத்தால் அது அவருக்கே தெரியாமல் நடப்பதாகும். அதை எப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டிப்பார்கள்?

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படுத்து உறங்கும் மனிதரைக் கையால் எழுப்பாமல் காலால் உதைத்து எழுப்பினார்கள் என்பது அவர்களின் நற்குணத்துக்கு மாற்றமாகத் தெரிகிறது என்பதையும் கவனிக்கும் போது இது கூடுதல் பலவீனத்தை அடைகிறது.

படுக்க ஆரம்பிக்கும் போது வலது புறமாக ஒருக்களித்து படுப்பது நபிவழியாகும். அதைப் பேணுவதன் மூலம் நன்மைகளை அடையலாம். ஒருக்களித்து படுத்தபின் புரண்டு படுத்து விட்டால் அதனால் நன்மைகளுக்கு பாதிப்பு ஏற்படாது. படுக்கும் போதே குப்புறப்படுத்தால் அதனால் சுன்னத்தை விட்டதால் நன்மை கிடைக்காமல் போகும். அது நரகத்துக்குக் கொண்டு செல்லும் குற்றமாக ஆகாது.

இந்த ஹதீஸின் நுணுக்கமான குறைபாடுகலைக் கவனிக்காமல் குப்புறப்படுத்து தூங்கக் கூடாது என்று முன்னர் கூறி இருந்தோம்; என்பதையும் அதை மாற்றிக் கொண்டோம் என்பதையும் தகவலுக்காகப் பதிவு செய்கிறோம்.

03.02.2012. 15:57 PM

2019-02-19T12:08:21+00:00
CONTACT US
221, Mount Olimpus, Rheasilvia, Mars,
Solar System, Milky Way Galaxy
+1 (999) 999-99-99
PGlmcmFtZSBzcmM9Imh0dHBzOi8vd3d3Lmdvb2dsZS5jb20vbWFwcy9lbWJlZD9wYj0hMW0xOCExbTEyITFtMyExZDYwNDQuMjc1NjM3NDU2ODA1ITJkLTczLjk4MzQ2MzY4MzI1MjA0ITNkNDAuNzU4OTkzNDExNDc4NTMhMm0zITFmMCEyZjAhM2YwITNtMiExaTEwMjQhMmk3NjghNGYxMy4xITNtMyExbTIhMXMweDAlM0EweDU1MTk0ZWM1YTFhZTA3MmUhMnNUaW1lcytTcXVhcmUhNWUwITNtMiExc2VuITJzITR2MTM5MjkwMTMxODQ2MSIgd2lkdGg9IjEwMCUiIGhlaWdodD0iMTAwJSIgZnJhbWVib3JkZXI9IjAiIHN0eWxlPSJib3JkZXI6MCI+PC9pZnJhbWU+
Thank You. We will contact you as soon as possible.
COMPANY NAME
Dolor aliquet augue augue sit magnis, magna aenean aenean et! Et tempor, facilisis cursus turpis tempor odio. Diam lorem auctor sit, a a? Lundium placerat mus massa nunc habitasse.
  • Goblinus globalus fantumo tubus dia montes
  • Scelerisque cursus dignissim lopatico vutario
  • Montes vutario lacus quis preambul denlac
  • Leftomato denitro oculus softam lorum quis
  • Spiratio dodenus christmas gulleria tix digit
  • Dualo fitemus lacus quis preambul patturtul
CONTACT US
Thank You. We will contact you as soon as possible.

யார் இந்த பீ.ஜே

பி.ஜெ என்று சுருக்கமாக அழைக்கப்படும் பி.ஜைனுல் ஆபிதீன் என்பவர் தென்னிந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி என்னும் ஊரில் பிறந்தவர்.

தமிழகத்தின் பழைமை வாய்ந்த அரபுக் கல்லூரிகளில் ஒன்றான கூத்தாநல்லூர் அரபிக் கல்லூரியில் 07 ஆண்டுகள் கல்வி கற்ற இவர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் நிறுவனராவார்.

அரபுக் கல்லூரியில் 07 ஆண்டுகள் மத்ஹபு, தரீக்காக்கள் என்று இஸ்லாத்தின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள வழிகெட்ட கொள்கையை அடிப்படையாகக் கொண்ட கல்வியை கற்ற இவர் பின்னர் அல்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை கற்பதில் ஆர்வம் கொண்டார்.

அல்குர்ஆனுக்கும், ஆதாரபூர்வமான நபிமொழிகளுக்கும் எதிராக உருவாக்கப்பட்ட மத்ஹபுகள் மற்றும் தரீக்காக்களின் வழிகேடுகளை குர்ஆன் சுன்னா ஒளியில் புரிந்து கொண்ட இவர் தனது சகோதரர் மவ்லவி பி.எஸ். அலாவுத்தீனுடன் இணைந்து தர்கா வழிபாடு, பேய் நம்பிக்கை, தட்டு தாயத்து, இணைவைப்பு, பித்அத்துக்கள், மத்ஹபுகள், தரீக்காக்கள் போன்றவற்றுக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்தார்.

இஸ்லாத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட மூட நம்பிக்கைகளுக்கு எதிராக கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பேச்சிலும், எழுத்திலும் போராடி வரும் ஜைனுல் ஆபீதீன் அவர்கள் நூற்றுக் கணக்கான நூல்களை எழுதியுள்ளதுடன், ஆயிரக் கணக்கான கட்டுரைகளுக்கும் சொந்தக் காரர் ஆவார்.

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக சமுதாய சீர்திருத்தப் பணியில் தன்னை அர்பணித்த ஜைனுல் ஆபிதீன் அவர்கள், தமிழகம் தாண்டி இந்தியாவின் பல மாநிலங்களிலும், மத்திய கிழக்கு நாடுகள் இலங்கை, மலேஷியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இஸ்லாமிய பிரச்சாரங்கள் செய்துள்ளார்.

கடந்த 2005ம் வருடம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட போது, இலங்கையில் சுமார் 07 இடங்களில் இவர் உரையாற்றினார். மத்ஹபுகள், தர்காக்கள், இணைவைப்புக் காரியங்கள் அனைத்திற்கும் எதிராக இவர் ஆற்றிய உரைகளினால் பல்லாயிரக் கணக்கான மக்கள் இவரின் உரையைக் கேட்பதற்காகத் திரண்டார்கள்.

கொழும்பு புதுக்கடை, புத்தளம், காலி, மாவனல்லை, காத்தான்குடி போன்ற ஊர்களில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டங்கள் ஒவ்வொன்றிட்கும் சுமார் 30ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டமை குறிப்பிடத் தக்கதாகும்.

பி.ஜெ ஏன் எதிர்க்கப் படுகின்றார்?

பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் இஸ்லாத்தின் பெயரால் தோற்றம் பெற்றுள்ள அனைத்து வழிகேடுகளுக்கும் எதிராக பிரச்சாரம் செய்யும் அதேநேரம் அல்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபி மொழிகளை மாத்திரமே அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்து வருகின்றார்.

அல்-குர்ஆன், மற்றும் ஆதாரபூர்வமான நபி மொழிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் உலமாக்கள், இவருடைய இந்த பிரச்சாரத்தினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். பொது மக்களின் பணத்தில் பொய் சொல்லி வயிறு வளர்க்கும் உலமாக்கள் இவருடைய பிரச்சாரத்தினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தாம் செய்யும் காரியங்களுக்கு பொது மக்கள் ஆதாரம் கேட்க்கும் நிலை பி.ஜே யின் பிரச்சாரத்தினால் உண்டாக்கப்பட்டது. இந்நிலையினால் மக்களை இவ்வளவு காலமும் ஏமாற்றித் திரிந்த உலமாக்கள் பாதிக்கப்பட்டார்கள். பொருளாதார இழிநிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஆகவே தான் பி.ஜெ அவர்களை முழு மூச்சாக இவர்கள் எதிர்த்து வருகின்றார்கள்.

அனைத்துத் தரப்பாரும் இவரை எதிர்க்கும் அளவுக்கு இவர் அப்படி என்னதான் செய்தார்?

ஆம், இவர் செய்த பணி அளப்பரியது. மகத்துவமிக்கது, போற்றத் தக்கது.

கடந்த 30 வருடங்களில் அனைத்து வழிகேடுகளுக்கும் எதிராக இவர் பிரச்சாரம் செய்துள்ளார்.

அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி, நபி முஹம்மது (ஸல்) அவர்களை மாத்திரம் பின்பற்ற வேண்டிய இஸ்லாமிய சமுதாயம் கப்ருகளை வணங்கி வழிபட்டு வருகின்றது. இவருடைய வாழ்நாளில் பெரும் பகுதியை இதற்கெதிரான பிரச்சாரத்திற்காகவே அர்பணித்தார்.

கப்ரு வணக்கத்திற்கு எதிரான பிரச்சாரத்தில் பல இடங்களில் இவர் தாக்கப்பட்டார். அதனைத் தாண்டியும் அல்லாஹ் தனது மார்க்கத்திற்கு வெற்றியைக் கொடுத்தான்.

கப்ரு வணங்கிகளுடன் பல விவாதக் களங்களை சந்தித்த பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அல்லாஹ்வை மாத்திரமே வணங்க வேண்டும், அவ்லியாக்களை வணங்கக் கூடாது, அவர்களிடம் பிரார்த்திக்கக் கூடாது என்பதை ஆணித்தரமாக நிரூபித்தார். இவருடைய இந்தப் பிரச்சாரத்தின் விளைவாக தமிழகத்தின் பல ஊர்களில் தர்காக்களை கட்டி, போசித்து வந்தவர்களே அதனை உடைத்துத் தரை மட்டமாக்கும் நிலை உருவாகியது.

• இஸ்லாத்தின் மூல ஆதாரங்கள் இரண்டா நான்கா?
• இறைவனுக்கு உருவம் உண்டா?
• இணை கற்பிப்பவர் யார்?
• களியக்காவிளை விவாதம்.
• இலங்கை விவாதம்.
• சுன்னத் ஜமாஅத் நூல்களில் ஆபாசங்கள்.
• இமாம்கள் உதவி இல்லாமல் குர்ஆனை விளங்க முடியுமா?
• குர்ஆனில் எழுத்து பிழைகளா – துத்துக்குடி போன்ற தலைப்புகளில் கப்ரு வணங்கும் தரீக்கா, பரேலவிகளுடன் இவர் செய்த விவாதங்கள் புகழ் பெற்றவை. கப்ரு வணங்கிகளாக இருந்த பலர் ஏகத்துவவாதிகளாக மாறும் நிலையை உண்டாக்கின அந்த விவாதங்கள்.
குர்ஆன், ஹதீஸ் தான் மார்க்கம் என்று சொல்லிக் கொண்டு அதற்கு மாற்றமான சலபிக் கொள்கையை கொண்ட ஸலபி வழிகேடர்களுடன் இவர் செய்த விவாதங்கள் குர்ஆனும், ஆதாரபூர்வமான நபிமொழிகளும் மாத்திரம் தான் நேர்வழி என்பதை தெளிவாக நிரூபித்தன. • சூனியம் வாதமும் எதிர்வாதமும்
• அஜ்வா பழமும் சூனியமும்
• முஜீபுடன் விவாதம் • ஜகாத் விவாதம்
• இலங்கை மன்சூருக்கு மறுப்பு
• முகத்தை மறைக்க வேண்டுமா ? சலஃபிகளுடன் நேரடி விவாதம்
• முஜாஹித் பேட்டி
• உமர் ஷரீபின் உளறல்
• உமர் ஷரீபின் உளுத்துப் போன வாதங்கள்
• ஹாமித் பக்ரி விமர்சனத்துக்கு பதில்
• சைபுத்தீன் சிதம்பரத்தில் ஓட்டம்
• சைபுத்தீன் ரஷாதி ஓட்டம்
• ஷைபுத்தீன் ரஷாதிக்கு மறுப்பு போன்ற வீடியோக்கள் இதற்கு சாட்சியாக இருக்கின்றன. இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பல வழிகெட்ட அமைப்பினரோடும் நேருக்கு நேர் விவாதத்தில் கலந்து சத்தியத்தின் மூலம் அசத்தியத்தை அடித்து நொறுக்கிய பி.ஜெ அவர்கள் காதியானிகள் போன்றவர்களுடனும் நேருக்கு நேர் விவாதத்தை எதிர் கொண்டுள்ளார்.

அரபியில் தான் பெற்ற புலமை, தேர்ந்த மார்க்க அறிவு, பேச்சுத் திறமை, நினைவாற்றல், சமயோசித சிந்தனை போன்றவை இவருடைய பிரச்சாரத்திற்கு உத்வேகமளித்தன. முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பின் எந்த நபியும் வரமாட்டார். அவர் தான் இறுதி நபி என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை தகர்க்க முயன்ற மிர்சா குலாம் அஹ்மத் காதியானி என்பவன் தானும் நபியென்று வாதிட்டான். இவனுடைய கொள்கையினால் கவரப்பட்டவர்கள் அஹ்மதியாக்கள் என்ற பெயரில் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். 1994ம் ஆண்டு கோவையில் காதியானிகளுடன் இவர் நடத்திய பகிரங்க விவாதம் காதியானிகளின் கோட்டையையே தவிடு பொடியாக்கியது. • மிர்ஸாகுலாம் பொய்யனே
• ரஷாது கலீபா பொய்யனா தூதரா
• 19 அபத்தமா அற்புதமா
• குர்ஆன் மட்டும் போதுமா
• வஹீ குர்ஆன் மட்டுமா? போன்ற தலைப்புகளில் காதியானிகள் மற்றும் ரஷாத் கலீபாவை நபியென்று ஏற்றுக் கொண்ட வழிகெட்ட 19 கூட்டத்தினருடன் இவர் பகிரங்க விவாதம் செய்து இஸ்லாத்தின் அடிப்படை இறுதி நபித்துவம் நபி முஹம்மது (ஸல்) அவர்களுடன் நிறைவு பெற்று விட்டதை அல்-குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான நபி மொழிகளினூடாக நிரூபித்தார்.

இஸ்லாத்திற்கு எதிராக பல விதங்களிலும் பிரச்சாரங்களை முடுக்கி விட்டு, முஸ்லிம்களை மதம் மாற்றம் செய்வதற்காக அயராது உழைக்கும் கிருத்தவ மிஷனரிகளுடன் நேருக்கு நேர் இவர் செய்த விவாதங்கள் கிருத்தவர்களை ஆட்டம் காண வைத்தது. • பைபிள் இறைவேதமா?
• குர்ஆன் இறைவேதமே!
• கிருத்தவர்கள் ஓட்டமெடுத்த விவாதம்.
• கிறித்தவபாதிரியுடன் விவாதம்.
• கிறித்தவர்களுடன் தவ்ஹீத் ஜமாஅத் நேருக்கு நேர்.
• மூச்சுத் திணற வைத்த விவாதம் – கிறித்தவர்களுடன்.
• பாதிரியார்களுடன் நடந்த அதிரடி விவாதம். போன்ற தலைப்புகளில் இவர் நடத்திய விவாதங்களை இன்றும் இணையதளத்தில் பார்க்க முடியும். கடவுள் இல்லை. கடவுள் நம்பிக்கை என்பது தவறானது. எல்லாம் இயற்கை என்றே நம்ப வேண்டும் என்றும் கடவுள் நம்பிக்கைக்கு எதிராக செயல்படும் நாத்தீகர்களுடன் யாராவது விவாதிக்க முடியுமா? என்று நினைத்து அனைவரும் பின்வாங்கிய ஓடிய நேரத்தில் நாத்தீகர்களுடன் நேருக்கு நேர் விவாதக் களத்தில் சந்தித்தவர் தான் இந்த பி.ஜெ. • இறைவன்இருக்கின்றானா?
• நாத்திகர்களின்மூட நம்பிக்கைகள்.
• குர்ஆன்இறை வேதமா? போன்ற தலைப்புகளில் நடைபெற்ற விவாதக் களத்தில் இறைவன் இருக்கின்றான் என்பதை நிரூபித்ததுடன், அவன் அல்லாஹ் மாத்திரம் தான் என்பதையும் அறிவுப்பூர்வமான நிரூவினார் அறிஞர் பி.ஜெ அவர்கள்.

இப்படி பல தரப்பட்ட வழிகெட்ட கொள்கைகளையும் அல்-குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் விவாதக் களங்கள் மூலம் அடித்து நொருக்கியவர் தான் இந்த பி.ஜெ. அசத்தியத்திற்கு எதிரான இவருடைய பயனத்தினால் வங்குரோத்து நிலை அடைந்தவர்களே இவரின் பிரச்சாரத்திற்கு பல இடங்களிலும் தடை ஏற்படுத்தி வருகின்றார்கள்.

எழுத்துப் பணியில் தனது கவர்ச்சிகரமான பேச்சின் மூலம் ஏகத்துவக் கருத்துக்களை பட்டி தொட்டியெங்கும் கொண்டு செல்வதில் செல்வாக்குச் செலுத்திய அறிஞர் பி.ஜெ அவர்கள் எழுத்துப் பணியிலும் மிகப் பெரும் புரட்சிக்கு வித்திட்டார்.

இஸ்லாத்தின் அடிப்படைக் கருத்துக்களை மக்கள் மயப்படுத்தும் ஆயிரக் கணக்கான கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார்.

• புரட்சி மின்னல்,

• அல்-ஜன்னத்,

• அல்-முபீன்,

• அந்-நஜாத்,

• ஏகத்துவம்,

• தீன்குலப் பெண்மணி

ஆகிய மாத இதழ்களில் இவர் தனது ஏகத்துவப் பிரச்சார ஆக்கங்களை எழுதியுள்ளார்.

“நர்கீஸ்” என்ற மாத இதழில் இவர் எழுதிய “விற்பனைக்காக கற்பனைக் கதைகள்” என்ற தொடர் பெரும் வரவேற்பை பெற்றதுடன், இதழ் நிர்வாகத்திற்கு வந்த அழுத்தம் காரணமாக அந்தத் தொடர் இடை நடுவே நிறுத்தப்பட்டது.

நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள ஜைனுல் ஆபிப்தீன் அவர்கள் இஸ்லாத்திற்கு எதிரான மாற்றாரின் விமர்சனங்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கும் விதமான பல நூல்களை எழுதியுள்ளார்.

• நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?

• இஸ்லாத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களும் பதில்களும்.

• accusations-and-answers

• அர்த்தமுள்ள இஸ்லாம்

• மாமனிதர் நபிகள் நாயகம்

• PROPHET MUHAMMAD THE MAN SUPREME

• அர்த்தமுள்ள கேள்விகள்

அறிவுப்பூர்வமான பதில்கள் • வருமுன் உரைத்த இஸ்லாம்

• இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா

• Does Islam snatch the Rights of Women?

• மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்

• வேதம் ஓதும் சாத்தான்கள் போன்றவை முக்கியமானவை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி இவர் எழுதிய “நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?” என்ற தலைப்பிலான நூல் மாற்று மத நண்பர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த ஒரு நூலாகும். நபி (ஸல்) அவர்களைப் பற்றிய மாற்று மத நண்பர்களின் தவறான எண்ணங்களுக்கு பதில் சொல்லும் விதமாக மிக அருமையாக இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. அதே போல் இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பரிக்கின்றதா? என்ற தலைப்பில் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகளைப் பற்றி விரிவாக இவர் எழுதி வெளியிட்ட நூல் தமிழுலகில் புகழ் பூத்ததாகும். நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?, அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப் பூர்வமான பதில்கள், குற்றச் சாட்டுக்களும் பதில்களும் போன்ற தலைப்புகளில் மாற்று மத நண்பர்களின் அர்த்தமுள்ள கேள்விகளுக்கு அறிவுப் பூர்வமான பதில்களை இவர் வழங்கி தனியான நூல்களை வெளியிட்டுள்ளார். இஸ்லாத்தையும், நபியவர்களையும் கொச்சைப்படுத்தி சல்மான் ரூஷ்தி, தஸ்லிமா நஸ்ரின் போன்றவர்கள் வெளியிட்ட நூல்களுக்கு மறுப்பாக ”வேதம் ஓதும் சாத்தான்கள்” என்ற பெயரில் இவர் எழுதிய நூல் பெரும் வரவேற்பைப் பெற்றது. இஸ்லாத்திற்கு எதிராக பெரும் விமர்சனங்களை முன் வைத்து வரும் கிருத்தவர்களின் அனைத்து விமர்சனங்களுக்கும் காலத்திற்கு ஏற்றாட் போல் இவர் வழங்கிய பதில்கள் அடங்கிய நூல்கள் பொக்கிஷங்களாக பாதுகாக்கப்பட வேண்டியவை.

• இயேசு சிலுவையில் அறையப்படவில்லை.

• இயேசு சிலுவையில் அறையப்படவில்லை ஆங்கிலம்.

• இது தான் பைபிள்.

• இதுதான் பைபிள் ஆங்கிலம்.

• இயேசு இறை மகனா?

• Is jesus the son of god

• பைபிளில் நபிகள் நாயகம்.

• பைபிளில் நபிகள் நாயகம் (ஆங்கிலம்)

• கப்ஸா நிலைக்குமா?

போன்ற தலைப்புகளில் கிருத்தவர்களின் விமர்சனங்களுக்கு இவர் பதில் அளித்துள்ளார். ஜபமணி என்ற பாதிரியார் இஸ்லாத்தை கொச்சைப் படுத்தி “கஃபா நிலைக்குமா?” என்ற தலைப்பில் ஓர் பிரசுரம் வெளியிட்ட நேரத்தில் “கப்ஸா நிலைக்குமா?” என்ற தலைப்பில் இவர் எழுதி வெளியிட்ட நூல் மிகவும் பிரபலம் வாய்ந்தது.

இந்தப் புத்தகம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவு கிருத்தவ பாதிரி ஜபமனியுடன் பி.ஜெ அவர்கள் கிருத்தவம் மற்றும் இஸ்லாம் தொடர்பில் நேரடி விவாதம் செய்து இஸ்லாம் சத்திய மார்க்கம் என்பதை நிரூபணம் செய்தார். இஸ்லாத்திற்குள் இருந்து இஸ்லாத்தின் பெயரால் மூட நம்பிக்கைகளையும், போலிக் கருத்துக்களையும் மார்க்கம் என்று பரப்பும் உலமாக்களின் கருத்துக்கள் மூட நம்பிக்கைகள் அனைத்துக்கும் எதிராக இவர் பல நூல்களை எழுதியுள்ளார். • பேய் பிசாசு உண்டா?

• இஸ்லாமியக் கொள்கை.

• இறைவனிடம் கையேந்துங்கள்.

• யாகுத்பா ஓர் ஆய்வு

• ஜின்களும் ஷைத்தான்களும்

• சுப்ஹான மவ்லித்

• முஹ்யித்தீன் மவ்லித் ஓர் ஆய்வு

• இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூன்யம்

• Was Allah’s Apostle Affected by Black Magic ?

• இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள்

• தர்கா வழிபாடு

• திருமறையின் தோற்றுவாய்

• குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை

• கொள்கை விளக்கம்

• இறைவனைக் காண முடியுமா

• கியாமத் நாளின் அடையாளங்கள்

• தராவீஹ் ஓர் ஆய்வு

• ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா

• குர்ஆன் மட்டும் போதுமா

• பிறை ஓர் விளக்கம்

• நபித்தோழர்களும் நமது நிலையும்

• அமீருக்குக் கட்டுப்படுதல் ஓர் ஆய்வு

• தொப்பி ஓர் ஆய்வு

• தப்லீக் தஃலீம் தொகுப்பு ஓர் ஆய்வு

• இஸ்லாத்தின் பெயரால் கற்பனைக் கதைகள்

• சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும்

• பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்

• பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம் (உருது) போன்ற தலைப்புக்களில் இவர் வெளியிட்ட புத்தகங்கள்
எதிரிகளை வாயடைக்கச் செய்த நூல்களாகும்.
அதே போல்

• தொழுகை சட்டங்கள்.

• நோன்பு

• ஜகாத் ஓர் ஆய்வு

• ஜகாத் ஒர் ஆய்வு (உருது)

• ஜகாத் ஓர் ஆய்வு (ஆங்கிலம்)

• நபிவழியில் நம் ஹஜ்

•குர்பானியின் சட்டங்கள்

• நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும்

• ஜனாஸாவின் சட்டங்கள்

• நேர்ச்சையும் சத்தியமும்

• ஜனாஸா தொழுகை

• விலக்கப்பட்ட உணவுகள்

• சந்திக்கும் வேளையில்

• when-we-meet

• துஆக்களின் தொகுப்பு

• dua-book

• இஸ்லாமியத் திருமணம்

• islamic-marriage

மேற்கண்ட தலைப்புகளில் இஸ்லாத்தின் சட்ட திட்டங்களை பற்றிய நூல்களையெல்லாம் இவர் எழுதியுள்ளமை இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்றாகும். சிறந்த பேச்சாற்றல், மொழியாற்றல், எழுத்தாற்றல் போன்றவற்றை தன்னகத்தே கொண்ட ஒரு அறிஞர் தான் சகோ. பி.ஜெ அவர்கள் என்றால் அது மிகையாகாது.

PGlmcmFtZSB3aWR0aD0iMTAwMCIgaGVpZ2h0PSI1NTAiIHNyYz0iaHR0cHM6Ly93d3cueW91dHViZS5jb20vZW1iZWQvamhIRVJ3X1BSbG8iIGZyYW1lYm9yZGVyPSIwIiBhbGxvdz0iYXV0b3BsYXk7IGVuY3J5cHRlZC1tZWRpYSIgYWxsb3dmdWxsc2NyZWVuPjwvaWZyYW1lPg==

அறிஞர் பி.ஜெ அவர்களின் முழுமையான அனுமதியுடன் இயங்கும் இஸ்லாமிய அறிவுக் கருவூலம்

அறிஞர் பீ.ஜெய்னுலாப்தீன் அவர்களின் பெயரில் நடத்தப்படும் www.onlinepj.net என்ற இந்த இணையதளம் மற்றும் https://www.facebook.com/onlinepjnet என்ற முகநூல் பக்கத்தின் உரிமையாளராகிய அப்துல் அஸீஸ் அல்தாப் ஆகிய நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அறிஞர் PJ அவர்களின் பெயரில் அவருடைய ஆக்கங்கள், வீடியோக்கள், விவாதங்கள் அனைத்தையும் இந்த தளத்தின் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்ப்பதற்கான முழுமையான அனுமதியை எனக்கு வழங்கியுள்ளார். இந்தத் தளத்தின் அனுமதி கேட்டு அறிஞர் PJஅவர்களுக்கு நான் அனுப்பிய மின்னஞ்சலையும், எனது மின்னஞ்சலுக்கு அறிஞர் PJ அவர்கள் அனுப்பிய பதில் மின்னஞ்சலையும் வாசகர்களின் பார்வைக்கு தருகிறேன்.

www.onlinepj.net இணையதளம் பற்றிய உங்கள் மேலான கருத்துக்களை எனது தொலை பேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு நீங்கள் தெரிவிக்க முடியும் என்பதையும் அறிவித்துக் கொள்கிறேன்.

Ph / WhatsApp: 0094 777510105
FaceBook:
https://www.facebook.com/onlinepjnet

அறிஞர் PJ அவர்களுக்கு அல்தாப் ஆகிய நான் அனுப்பிய மின்னஞ்சல்
அப்துல் அஸீஸ் அப்துல் கனீ அல்தாப்

இல 93, காலி வீதி, தெஹிவலை, இலங்கை.

அறிஞர் பீ.ஜெய்னுலாப்தீன் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!

நான் இலங்கையச் சேர்ந்த அல்தாப். ஆரம்ப காலத்திலிருந்து இலங்கையில் தூய முறையில் ஏகத்துவத்தை நிலை நாட்ட பாடுபட்டவர்களில் ஒருவர். உங்கள் 2005ம் ஆண்டு இலங்கை விஜயத்திற்கு காரணமாக இருந்தவர்களின் ஒருவர் ஆவேன்.

உங்களை தமிழ்நாடு தெளஹீத் ஜமாஅத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து தற்போது அநியாயமான முறையில் நீக்கியுள்ளார்கள். ஜமாஅத்திலிருந்து நீங்கள் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவித்த சில நாட்களில் ஜமாஅத் நடத்திய மாநில செயல்குழுவில் உங்களுடைய வீடியோக்களை அனைத்தையும் இணையத்திலிருந்து நீக்குவதாகவும் ஒன்லைன் பீ.ஜெ இணையதளத்தை மாற்றுவதாகவும், உங்கள் புத்தகங்கள் அனைத்தையும் டிஎன்டிஜெ அறிஞர் குழு என்று போடவுள்ளதாகவும் டீ என் டீ ஜே நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது.

உங்களுக்கும் ஜமாஅத்திற்கும் இடையில் உள்ள பிரச்சினையில் தற்போது நான் பேசுவதற்கு விரும்பவில்லை. ஆனால் நீங்கள் பேசிய உரைகள், எழுதிய எழுத்துக்கள், நீங்கள் செய்த விவாதங்களினால் அல்லாஹ் உங்கள் மூலமாக எமக்கு நேர்வழி காட்டினான். இதே போல் இன்னும் பல லட்சக் கணக்கானவர்களுக்கு அல்லாஹ் இவற்றின் மூலம் நேர்வழி காட்ட வேண்டும்.எனவே தான் உங்கள் எழுத்துக்கள், பேச்சுக்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக என் சொந்த செலவில் ஒன்லைன் பீ.ஜெ டொட் நெட் என்ற பெயரில் ஒரு இணையதளத்தை நடத்த எண்ணி இலங்கையிலிருந்து ஒரு சொப்ட்வெயா கொம்பணி மூலம் தற்போது அதனை வெளியிட்டும் விட்டேன்.

இதில் இதுவரை நீங்கள் எழுதிய, பேசியவைகளை தவிர எனது எந்த சொந்தக் கருத்துக்களும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இணையதளம் பற்றி சிலர் இதற்கு பீ.ஜெ அனுமதி தந்தாரா? என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.

தெளஹீத் பிரச்சாரத்திற்கு துணையாக அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்து உங்கள் பெயரில் நான் நடத்தும் இந்த இணையதளத்திற்கு உங்களின் அனுமதியை தருமாறு கேட்டு கொள்கிறேன். உங்கள் அனுமதி கிடைத்தால் அதனையே பொது அனுமதியாக இணையதளத்தில் பிரசுரித்து விடுவேன்.

உங்கள் மேலான அனுமதியை எதிர்பார்த்தவனாக!

அப்துல் அஸீஸ் அப்துல் கனீ அல்தாப் தெஹிவலை, இலங்கை

0777510105

அறிஞர் PJ அவர்கள் அனுப்பிய பதில்.

அன்புள்ள சகோதரர் அல்தாப் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். வஹீ மட்டுமே இஸ்லாத்தின் மூல ஆதாரம் என்ற அடிப்படைக் கொள்கையில் செயல்படுவதற்காக இலங்கையில் SLTJஉருவாக்கப்பட்ட போது முக்கிய தூண்களில் நீங்களும் ஒருவர் என்பதை நான் அறிவேன்.

எந்தப் பொறுப்புக்கும் வர நீங்கள் ஆசைப்படாவிட்டாலும் உங்கள் உழைப்பை நான் நினைவில் வைத்துள்ளேன்.

எனது ஆக்கங்களையும், ஆய்வுகளையும், உரைகளையும், விவாதங்களையும் அறிந்து கொள்ள விரும்புவோருக்கு பயனளிக்கும் வகையில் நீங்கள் onlinepj.net என்ற பெயரில் என் பெயரைப் பயன்படுத்திக் கொள்ளவும் எனது எல்லா ஆக்கங்களையும் பயன்படுத்திக் கொள்ளவும் நான் மனப்பூர்வமாக அனுமதிக்கிறேன்.

இதனால் பயன் பெறுவோரின் மறுமைப் பரிசில் எனக்கு பங்கு கிடைக்கவும், இதனால் பயனடைந்தோரின் துஆக்கள் எனக்கு கிடைக்கவும் நீங்கள் உதவுகிறீர்கள் என்பதால் எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் அன்புடன்

பீ.ஜைனுல் ஆபிதீன்.

AlthafOne AlthafOne