சிக்கனமான திருமணம் குறித்த ஹதீஸ் பலவீனமானதா?

சிக்கனமான திருமணம் குறித்த ஹதீஸ் பலவீனமானதா?

பி. ஜைனுல் ஆபிதீன்

குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரகத் (இறைவனின் மறைமுகமான பேரருள்) நிறைந்தது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய பொன்மொழியையும் அடிக்கடி மேற்கோள் காட்டி வருகிரோ.

இந்த ஹதீஸ் குறித்துக் கடந்த காலங்களில் அறிஞர்கள் செய்துள்ள விமர்சனங்களின் அடிப்படையில் தற்போது சில அறிஞர்கள், இது பலவீனமான ஹதீஸ் என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

திருமணம் எளிமையாகவும், சிக்கனமாகவும் தான் நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படை விஷயத்தில் அவர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆடம்பரத்தையும்,  வீண் விரயத்தையும் கண்டிக்கின்ற எண்ணற்ற சான்றுகள் உள்ளதால் அவர்களும் சிக்கனமான திருமணத்தையே வலியுறுத்துகின்றனர்.

ஆனால் மேற்கண்ட நபிமொழி பலவீனமானதாக உள்ளதால் அதை ஆதாரமாகக் காட்டக் கூடாது என்பது தான் அவர்களது விமர்சனத்தின் சாரமாக உள்ளது.

குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே பரகத் நிறைந்தது என்ற நபிமொழியின் அறிவிப்பாளர் தொடரில் குறைபாடு உள்ளதால் இது பலவீனமான ஹதீஸாகும் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

مسند أحمد بن حنبل

24573 حدثنا عبد اللَّهِ حدثني أبي ثنا عَفَّانُ قال ثنا حَمَّادُ بن سَلَمَةَ قال أخبرني بن الطُّفَيْلِ بن سَخْبَرَةَ عَنِ الْقَاسِمِ بن مُحَمَّدٍ عن عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قال إِنَّ أَعْظَمَ النِّكَاحِ بَرَكَةً أَيْسَرُهُ مُؤْنَةً

مسند إسحاق بن راهويه

[946] أخبرنا وكيع نا أبو عيسى موسى بن بكر الأنصاري عن القاسم بن محمد عن عائشة قالت أعظم النكاح بركة أيسره مؤنة فقال له أبي أسمعته من رسول الله e فقال نعم هكذا أخبرت قال إسحاق قلت للملائي هو أبو عيسى الأنصاري فقال نعم

مسند الطيالسي

 [1427] حدثنا أبو داود قال حدثنا موسى بن تليد ان من آل أبي بكر الصديق قال سمعت القاسم بن محمد يحدث عن عائشة قالت أعظم النكاح بركة أيسره مؤنة فقال لي أبى عائشة اخبرتك عن رسول الله e فقال هكذا حدثت وهكذا حفظت

இன்ன அஃலமன் நிகாஹி பரக(த்)தன் அய்ஸருஹூ முஃனதன் (குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே பரகத் நிறைந்தது)

என்ற நபிமொழி குறித்து அவர்கள் செய்யும் விமர்சனங்களைப் பார்த்து விட்டு அவை சரியானவையா என்பதை ஆய்வு செய்வோம்.

இந்த ஹதீஸ் முஸ்னத் அஹ்மத், முஸ்னத் இஸ்ஹாக், முஸ்னத் தயாலிஸி  ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விமர்சனங்கள்

மேற்கண்ட மூன்று நூற்களிலும் கீழ்க்கண்ட அறிவிப்பாளர்கள் வழியாக இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முஸ்னத் அஹ்மத் நூலின் அறிவிப்பாளர் தொடர்

மேற்கண்ட ஹதீஸை நபிகள் நாயகம் கூறியதாக ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

ஆயிஷா (ரலி) கூறியதாக காஸிம் பின் முஹம்மத் அறிவிக்கிறார்.

காஸிம் பின் முஹம்மத் கூறியதாக இப்னுத் துபைல் பின் ஸக்பரா அறிவிக்கிறார்.

இப்னுத் துபைல் பின் ஸக்பரா கூறியதாக ஹம்மாத் பின் ஸலமா அறிவிக்கிறார்.

ஹம்மாத் பின் ஸலமா கூறியதாக அஃப்பான் அறிவிக்கிறார்.

அஃப்பானிடம் நேரில் செவியுற்று அஹ்மத் பின் ஹம்பல் தமது நூலில் பதிவு செய்துள்ளார்.

முஸ்னத் இஸ்ஹாக் அறிவிப்பாளர் தொடர்

மேற்கண்ட ஹதீஸை நபிகள் நாயகம் கூறியதாக ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

ஆயிஷா (ரலி) கூறியதாக காஸிம் பின் முஹம்மத் அறிவிக்கிறார்.

காஸிம் பின் முஹம்மத் கூறியதாக மூஸா பின் பக்ர் அறிவிக்கிறார்.

மூஸா பின் பக்ர் கூறியதாக வகீவு அறிவிக்கிறார்.

வகீவு கூறியதாக நூலாசிரியர் தமது நூலில் பதிவு செய்துள்ளார்.

முஸ்னத் தயாலிஸி அறிவிப்பாளர் தொடர்

மேற்கண்ட ஹதீஸை நபிகள் நாயகம் கூறியதாக ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

ஆயிஷா (ரலி) கூறியதாக காஸிம் பின் முஹம்மத் அறிவிக்கிறார்.

காஸிம் பின் முஹம்மத் கூறியதாக மூஸா பின் தலீதான் அறிவிக்கிறார்

மூஸா பின் தலீதான் கூறியதாக அபூதாவூத் அறிவிக்கிறார்

அபூதாவூத் கூறியதாக நூலாசிரியர் தமது நூலில் பதிவு செய்துள்ளார்.

முஸ்னத் அஹ்மதின் அறிவிப்பாளர்களில் இப்னுத் துபைல் பின் ஸக்பரா என்பவரைத் தவிர மற்ற அனைவரும் நம்பகமானவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

முஸ்னத் இஸ்ஹாக்கின் அறிவிப்பாளர்களில் மூஸா பின் பக்ர் என்பவர் தவிர மற்ற அனைவரும் நம்பகமானவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

முஸ்னத் தயாலிஸியின் அறிவிப்பாளர்களில் மூஸா பின் தலீதான் என்பவர் தவிர மற்ற அனைவரும் நம்பகமானவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

மேற்கண்ட மூவர் காரணமாகவே இந்த ஹதீஸ் விமர்சிக்கப்படுகின்றது. எனவே இம்மூவரைப் பற்றிய விமர்சனங்களை மட்டும் ஆய்வு செய்தாலே இந்த ஹதீஸின் தரத்தைக் கண்டு கொள்ளலாம்.

இம்மூவரும் உண்மையில் மூன்று நபர்கள் அல்லர். ஒரே நபர் தான் இம்மூன்று பெயர்களால் குறிப்பிடப்படுகிறார். மேற்கண்ட அந்த அறிவிப்பாளர் ஈஸா பின் மைமூன்வ் என்ற பெயராலும் குறிப்பிடப்படுகின்றார்.

இப்படி நான்கு பெயர்களால் இவர் குறிப்பிடப்படுகிறார்.

ஈஸா பின் மைமூன் பற்றிய விமர்சனம்

இவரைப் பற்றி புகாரி அவர்கள் முன்கருல் ஹதீஸ் (இவருடைய ஹதீஸ்கள் நிராகரிக்கப்படும்) என்று விமர்சனம் செய்துள்ளார்கள்.

திர்மிதீ அவர்கள் இவரைப் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

இவர் நம்பகமானவர் இல்லை என்று நஸாயீ கூறுகிறார்.

அம்ரு பின் அலீ, அபூஹாதம் ஆகியோர், மத்ரூகுல் ஹதீஸ் (இவரது ஹதீஸ்கள் விடப்பட வேண்டியவை) என்று கூறியுள்ளனர்.

இவர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதவர் என்று யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார்.

இவர் ஹதீஸ் கலையில் பலவீனமானவர் என்று அபூஸுர்ஆ கூறுகிறார்.

இட்டுக்கட்டப்பட்டவை என்று கூறத்தக்க பல ஹதீஸ்களை நம்பகமானவை என்ற பெயரில் இவர் அறிவித்துள்ளார் என்று இப்னு ஹிப்பான் கூறுகின்றார்கள்.

இவரது ஹதீஸ்களை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று யஃகூப் கூறுகிறார்.

இவரை அனைவரும் பலவீனராகக் கருதியுள்ளனர் என்று தஹபீ கூறுகிறார்.

மூஸா பின் பக்ர் என்றும்,

மூஸா பின் தலீதான் என்றும்

இப்னுத் துபைல் பின் ஸக்பரா என்றும்

ஈஸா பின் மைமூன் என்றும்

குறிப்பிடப்படும் இவரைப் பற்றி மேற்கண்டவாறு அறிஞர்கள் செய்துள்ள விமர்சனங்களின் அடிப்படையில் தற்கால அறிஞர்கள் அல்பானி, ஷுஐப் அல்அர்னாவூத் ஆகியோரும், இன்னும் பலரும் மேற்கண்ட ஹதீஸைப் பலவீனமானது என்று கூறியுள்ளனர்.

ஒரு அறிவிப்பாளரைப் பற்றி மேற்கூறப்பட்ட விமர்சனங்கள் இருக்குமானால் அவர் நிச்சயம் பலவீனமானவர் என்பதிலும், அவர் மூலம் அறிவிக்கப்படும் ஹதீஸ் பலவீனமானது என்பதிலும் இரண்டாம் கருத்துக்கு இடமிருக்க முடியாது.

ஆனால் ஆழமாக நாம் ஆய்வு செய்த போது இந்த விமர்சனங்களுக்கும், இந்த ஹதீஸுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்று தெரிய வருகிறது.

விமர்சனங்கள் மறு ஆய்வு

ஈஸா பின் மைமூன் என்ற பெயரில் இரண்டு அறிவிப்பாளர்கள் சம காலத்தில் இருந்துள்ளனர். இருவருமே திருமணம் தொடர்பான ஹதீஸ்களை அறிவித்துள்ளனர்.

குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்தது என்ற நபிமொழியை ஒரு ஈஸா பின் மைமூன் அறிவிக்கிறார்.

திருமணத்தைப் பிரகடனம் செய்யுங்கள்! திருமணத்தில் முரசு கொட்டுங்கள்! என்ற ஹதீஸை மற்றொரு ஈஸா பின் மைமூன் அறிவித்துள்ளார். இருவருமே ஈஸா பின் மைமூன் என்றே குறிப்பிடப்படுகின்றனர்.

குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணம் பற்றிய ஹதீஸை அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் நம்பகமானவர்.

திருமணத்தைப் பிரகடனம் செய்யுங்கள்! திருமணத்தில் முரசு கொட்டுங்கள் என்ற ஹதீஸை அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் பலவீனமானவர்.

இந்த இரண்டாமவரைப் பற்றித் தான் மேலே நாம் சுட்டிக் காட்டிய அறிஞர்கள் மேற்கண்ட கடுமையான விமர்சனங்களைச் செய்துள்ளனர். மேற்கண்ட விமர்சனம் எதுவும் முதலாவதாகக் குறிப்பிட்ட ஈஸா பின் மைமூனைப் பற்றியது அல்ல என்பது நமக்குத் தெரிய வருகிறது.

இவ்விருவரின் பெயரும் ஈஸா,

இவ்விருவரின் தந்தையர் பெயரும் மைமூன்

என்று அமைந்தது போல் இவ்விருவரும் யாரிடம் கேட்டு திருமணம் தொடர்பான ஹதீஸ்களை அறிவிக்கிறார்களோ அவர் பெயர் காஸிம் ஆகும்.

காஸிம் என்பவரின் தந்தை முஹம்மத் ஆகும்.

ஆனால் இரண்டு காஸிம்களும் வெவ்வேறு நபர்களாவர்.

திருமணத்தைப் பிரகடனம் செய்யுங்கள்! திருமணத்தில் முரசு கொட்டுங்கள் என்ற ஹதீஸை அறிவிக்கும் காஸிம் என்பவர் கஅப் என்பவரின் பேரனும், முஹம்மத் என்பவரின் மகனுமாவார்.

குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணம் பற்றிய ஹதீஸை அறிவிக்கும் காஸிம் என்பவர் அபூபக்கர் (அலி) (இஸ்லாத்தின் முதல் கலீஃபா) அவர்களின் பேரனும் முஹம்மத் அவர்களின் மகனுமாவார்.

இவ்விருவர் பெயரும் ஈஸா பின் மைமூன் என்று இருப்பதாலும் இவ்விருவரின் ஆசிரியர்கள் பெயர் காஸிம் பின் முஹம்மத் என்று இருப்பதாலும் சில அறிஞர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டு தவறான முடிவுக்கு வந்துள்ளனர்.

இவ்விருவர் பெயரும், இவ்விருவரின் ஆசிரியர்கள் பெயரும், இவ்விருவரின் தந்தையர் பெயரும் ஒன்றுபட்டதால் குழப்பம் ஏற்பட்டாலும் வேறு சான்றுகள் மூலம் இவ்விருவரையும் வேறுபடுத்தி அறிய முடியும்.

ஈஸா பின் மைமூன் என்ற பெயரில் இருவர் என்பதற்கான ஆதாரங்கள்

تاريخ أسماء الثقات

1062 وعيسى بن ميمون الذي يروي أعظم النكاح بركة ايسره مؤونة يقال له بن تليدان وهو من ولد أبي قحافة ويروي عنه حماد بن سلمة يقول بن سخبرة وهو هذا الذي روى عنه وكيع وأبو نعيم وليس به بأس وعيسى الذي يروي أعلنوا النكاح ويروي حديث محمد بن كعب ضعيف ليس بشيء

குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணம் தான் அதிக பரகத் நிறைந்தது என்ற ஹதீஸை அறிவிக்கும் ஈஸா பின் மைமூன், (மூஸா) இப்னு தலீதான் என்றும் குறிப்பிடப்படுவார். இவர் அபூகுஹாஃபாவின் வழித்தோன்றல் ஆவார். இவர் வழியாக ஹம்மாத் பின் ஸலமா அறிவிக்கும் போது இப்னு ஸக்பரா என்று இவரைக் கூறுவார். வகீவு, அபூநயீம் ஆகியோர் யார் வழியாக அறிவிக்கிறார்களோ அந்த ஈஸா தான் இவர். இவரிடம் குறைபாடு இல்லை. திருமணத்தைப் பகிரங்கப்படுத்துங்கள் என்ற ஹதீஸை அறிவிக்கும் ஈஸா பலவீனமானவர்; கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதவர். இவர் முஹம்மத் பின் கஅபு என்பவர் வழியாக ஹதீஸை அறிவிக்கும் ஈஸா ஆவார்.

நூல்: தாரீகு அஸ்மாயிஸ் ஸிகாத்

تهذيب الكمال

ت ق عيسى بن ميمون المدني المعروف بالواسطي مولى القاسم بن محمد بن أبي بكر الصديق يقال له بن تليدان ويقال إنه الذي يحدث عنه حماد بن سلمة ويسميه الطفيل بن سخبرة روى محمد بن أبي بكر الصديق ت ق ومحمد بن كعب القرظي ونافع مولى بن عمر وهشام بن عروة ويزيد بن ذكوان وأبي الزبير المكي روى عنه إبراهيم بن الحسن العلاف وأحمد بن بشير الكوفي ت وآدم بن أبي إياس ق وأبو خزيمة أسلم بن أبي شيبة الهاشمي البصري وحاتم بن عبيد الله النمري وحجاج بن محمد المصيصي وحجاج بن نصير الفساطيطي وحفص بن الجارود قاضي هراة وحماد بن سلمة وسماه الطفيل بن سخبرة فيما قيل وخالد بن عبد الرحمن وسعيد بن سليمان الواسطي وشيبان بن فروخ وصالح بن بيان الأنباري وعبد الصمد بن النعمان وعبد الكريم بن روح بن عنبسة وعثمان بن عمر بن فارس فصحف في اسمه فقال أبو عيسى المدني وعمر بن علي بن مقدم وأبو نعيم الفضل بن دكين ومحمد بن جعفر المدائني ومحمد بن مصعب القرقساني ووكيع بن الجراح ويحيى بن سعيد العطار الحمصي ويزيد بن هارون ت قال أحمد بن سنان القطان عن عبد الرحمن بن مهدي تهذيب الكمال استعديت على عيسى بن ميمون في هذه الأحاديث عن القاسم بن محمد في النكاح وغيره فقال لا أعود وقال إبراهيم بن عبد الله بن الجنيد سمعت يحيى بن معين يقول عيسى بن ميمون الذي يحدث عن القاسم عن عائشة عن النبي صلى الله عليه وسلم أعظم النكاح بركة أيسره مؤونة يقال له بن تليدان وهو من آل أبي قحافة ليس به بأس وهو الذي حدث عنه حماد بن سلمة قال حدثني بن سخبرة هو هذا ولم يرو هذا عن محمد بن كعب شيئا والذي يحدث عن محمد بن كعب ليس بشيء يعني إن الذي يحدث عن محمد بن كعب آخر وقال عباس الدوري عن يحيى بن معين عيسى بن ميمون صاحب القاسم عن عائشة ليس بشيء وقال في موضع آخر عيسى الذي يروي أعلنوا النكاح ويروي حديث محمد بن كعب القرظي هو الضعيف وليس بشيء

குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே பரகத் நிறைந்தது என்ற ஹதீஸை ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து காஸிம் வழியாக அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் என்பார், இப்னு தலீதான் என்றும் கூறப்படுவார். இவர் அபூகுஹாஃபாவின் வழித் தோன்றலாவார். இவரிடம் தவறு இல்லை. இப்னு ஸக்பரா எனக்கு அறிவித்தார் என்று ஹம்மாத் பின் ஸலமா கூறுவது இவரைத் தான். இவர் முஹம்மத் பின் கஅப் வழியாக எதையும் அறிவித்ததில்லை.

முஹம்மத் பின் கஅப் வழியாக அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதவர். இவர் வேறொரு ஈஸா ஆவார் என்று யஹ்யா பின் மயீன் கூறியதாக இப்ராஹீம் பின் அப்துல்லாஹ் அறிவிக்கின்றார்.

ஆயிஷா, காஸிம் வழியாக அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதவர் என்று யஹ்யா பின் மயீன் கூறியதாக அப்பாஸ் அத்தவ்ரீ கூறிவிட்டு மற்றொரு இடத்தில் இந்த ஈஸா என்பவர் திருமணத்தைப் பகிரங்கப்படுத்துங்கள் என்ற ஹதீஸை அறிவிப்பவரும், முஹம்மத் பின் கஅப் வழியாக ஹதீஸை அறிவிப்பவருமான ஈஸா தான் இவர். இவர் தான் பலவீனமானவர்; கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதவர் என்று தெளிவுபடுத்துகிறார்.

நூல்: தஹ்தீபுல் கமால்

ஈஸா பின் மைமூன் என்ற பெயரில் இருவர் இருந்ததையும், அதில் ஒருவர் தான் பலவீனமானவர் என்பதையும் யஹ்யா பின் மயீன் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். மேலும் பலவீனமானவர் யார் என்பதற்கு மூன்று அடையாளங்களையும் கூறுகிறார்கள்.

திருமணத்தைப் பிரகடம் செய்யுங்கள் என்ற ஹதீஸை அறிவிப்பவர்.

முஹம்மத் பின் கஅப் வழியாக அறிவிப்பவர்.

குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்தது என்ற ஹதீஸை அறிவிப்பவர் அல்ல.

இந்த மூன்று அம்சம் உள்ள ஈஸா தான் பலவீனமானவர்.

மற்றொரு ஈஸா பலவீனமானவர் அல்லர் என்பதையும் யஹ்யா பின் மயீன் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். இதற்கும் மூன்று அடையாளங்களைக் கூறுகிறார்கள்.

குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணம் தான் அதிக பரகத் நிறைந்தது என்ற ஹதீஸை அறிவிப்பவர்

இவருடைய மாணவர் ஹம்மாத் பின் ஸலமா

வகீவு,அபூநயீம் ஆகியோர் இவர் வழியாக அறிவித்திருப்பார்கள்.

அம்ரு பின் அலீ, புகாரி, நஸாயீ உள்ளிட்டோர் செய்த விமர்சனங்கள் இவரைப் பற்றியதல்ல என்பதைப் பின்வரும் கூற்றுக்களிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.

الكامل في ضعفاء الرجال

[1388] عيسى بن ميمون الجرشي مديني يكنى أبا يحيى حدثنا بن أبي بكر قال ثنا عباس قال سمعت يحيى وسئل عن عيسى بن ميمون من هو قال يقال له عيسى الجرشي حدثنا بن حماد وابن أبي بكر قالا حدثنا عباس عن يحيى قال عيسى بن ميمون ليس بشيء وقال الدولابي وفي موضع آخر عيسى بن ميمون المدني يروي أعلنوا النكاح ويروي عن محمد بن كعب ضعيف الحديث ليس بشيء حدثنا الجنيدي ثنا البخاري قال عيسى بن ميمون المدني مولى القاسم بن محمد القرشي صاحب مناكير عن محمد بن كعب هو أبو عبيدة وفي موضع آخر التيمي البصري منكر الحديث وقال عمرو بن علي عيسى بن ميمون المديني يروي عن محمد بن كعب متروك الحديث وقال النسائي عيسى بن ميمون المديني يروي عن محمد بن كعب القرظي متروك الحديث حدثنا سعيد بن عثمان الحراني ثنا عبد الرحمن بن عبيد الله بن أخي الامام قال ثنا محمد بن يزيد الواسطي عن عيسى بن ميمون عن القاسم عن عائشة قالت قال رسول الله e أعلنوا النكاح واجعلوه في المساجد واضربوا عليه بالدف وليولم أحدكم ولو بشاة ثنا عمر بن سنان ثنا نصر بن عبد الرحمن الوشاء قال ثنا أحمد بن بشير عن عيسى بن ميمون عن القاسم عن عائشة قالت قال رسول الله e لا ينبغي لقوم فيهم أبو بكر يؤمهم غيره

திருமணத்தைப் பகிரங்கப்படுத்துங்கள் என்ற ஹதீஸை அறிவிப்பவரும், முஹம்மத் பின் கஅப் வழியாக அறிவிப்பவருமான ஈஸா பின் மைமூன் அல்மதனீ என்பவர் பலவீனமானவர்; கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதவர் என்று தவ்லாபீ கூறுகிறார். முஹம்மத் பின் கஅப் வழியாக நிராகரிக்கத்தக்க ஹதீஸ்களை அறிவித்துள்ள ஈஸா பின் மைமூன் அல்மதனீ, முன்கருல் ஹதீஸ் (இவரது ஹதீஸ்கள் நிரகாரிக்கப்படும்) என்று புகாரி கூறினார். முஹம்மத் பின் கஅப் வழியாக அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் அல்மதனீ என்பவரின் ஹதீஸ்கள் விடப்படுவதற்குத் தகுதியானவை என்று அம்ரு பின் அலீ கூறுகிறார். முஹம்மத் பின் கஅப் வழியாக அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் அல்மதனீ என்பவரின் ஹதீஸ்கள் விடப்படுவதற்குத் தகுதியானவை என்று நஸாயீ கூறுகிறார்.

நூல்: அல்காமில் ஃபில்லுஅஃபா

முஹம்மத் பின் கஅப் வழியாக அறிவிக்கும் ஈஸாவையே புகாரி, அம்ரு பின் அலீ, நஸாயீ உள்ளிட்டோர் விமர்சனம் செய்துள்ளனர் என்பது இந்த விமர்சனங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும் புகாரி அவர்கள் எந்த ஈஸாவை விமர்சனம் செய்தார்கள் என்பதைப் பின்வரும் ஆதாரங்களிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.

التاريخ الكبير

[2781] عيسى بن ميمون المديني عن محمد بن كعب منكر الحديث مولى القاسم بن محمد القرشي

முஹம்மத் பின் கஅப் மூலம் அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் அல்மதனீ என்பாரின் ஹதீஸ்கள் நிராகரிக்கப்படும்.

நூல்: புகாரியின் தாரீகுல் கபீர்

الضعفاء الصغير

[266] عيسى بن ميمون المدني عن محمد بن كعب منكر الحديث

முஹம்மத் பின் கஅப் வழியாக அற்விக்கும் ஈஸா பின் மைமூன் என்பாரின் ஹதீஸ்கள் நிகாரிக்கத்தக்கவை.

நூல்: புகாரியின் லுஅஃபாவுஸ் ஸகீர்

ஈஸா பின் மைமூன் என்பவரின் ஹதீஸ்கள் விடப்படுவதற்குத் தகுதியானவை என்று நஸாயீ அவர்கள் யாரைக் குறிப்பிடுகிறார்கள் என்பதைப் பின்வரும் ஆதாரத்திலிருந்து அறியலாம்.

الضعفاء والمتروكين

[425] عيسى بن ميمون المدني يروي عن محمد بن كعب القرظي متروك الحديث

முஹம்மத் பின் கஅப் வழியாக அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் என்பவரின் ஹதீஸ்கள் விடப்படுவதற்குத் தகுதியானவை.

நூல்: நஸாயீயின் அல்லுஅஃபாவு வல்மத்ரூகீன்

மேற்கண்ட விமர்சனங்களில் பலவீனமான ஈஸா என்பதைத் தெளிவுபடுத்தும் போது முஹம்மத் பின் கஅப் வழியாக அறிவிப்பவர் என்று குறிப்பிட்டுள்ளதைக் கவனத்தில் கொள்க!

இப்னு ஹஜர், திர்மிதீ உள்ளிட்டோர் பலவீனமானவர் என்று குறிப்பிட்டதும் இரண்டாவது ஈஸாவைப் பற்றித் தான் என்பதைப் பின்வரும் ஆதாரத்திலிருந்து அறியலாம்.

تلخيص الحبير

[2122] قوله روي أنه صلى الله عليه وسلم قال أعلنوا النكاح واضربوا عليه بالغربال أي الدف الترمذي وابن ماجة والبيهقي عن عائشة وفي إسناده خالد بن الياس وهو منكر الحديث قاله أحمد وفي رواية الترمذي عيسى بن ميمون وهو يضعف قاله الترمذي وضعفه بن الجوزي من الوجهين نعم روى أحمد وابن حبان والحاكم من حديث عبد الله بن الزبير أعلنوا النكاح وروى أحمد والنسائي والترمذي وابن ماجة

திருமணத்தைப் பகிரங்கப்படுத்துங்கள்! அதற்காக தஃப் என்னும் முரசு கொட்டுங்கள் என்ற ஹதீஸை திர்மிதீ, பைஹகீ ஆகியோர் பதிவு செய்துள்ளனர். திர்மிதீயின் அறிவிப்பில் ஈஸா பின் மைமூன் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று திர்மிதியே குறிப்பிட்டுள்ளார்.

நூல்: இப்னு ஹஜரின் தல்கீஸ்

திருமணத்தைப் பகிரங்கப்படுத்தி, முரசு கொட்ட வேண்டும் என்ற ஹதீஸை அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் என்பவரைத் தான் திர்மிதீ பலவீனப்படுத்தியுள்ளார் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

திர்மிதி அவர்கள் ஈஸா பின் மைமூன் பலவீனமானவர் என்று கூறுவதுடன் திருமணத்தைப் பகிரங்கப்படுத்துங்கள்! அதற்காக தஃப் என்னும் முரசு கொட்டுங்கள் என்ற ஹதீஸை அறிவிப்பவர் என்பதையும் இணைத்துக் கூறுகிறார்கள்.

இவரை அனைவரும் பலவீனப்படுத்தியுள்ளனர் என்று தஹபீ கூறியதும் இரண்டாவது ஈஸாவைப் பற்றியது தான்.

இதைப் பின்வரும் அறிஞர்கள் கூற்றிலிருந்து அறியலாம்.

الكاشف

[4403] عيسى بن ميمون المدني عن القاسم وسالم وعنه حجاج بن محمد وآدم وشيبان بن فروخ ضعفوه ت ق

ஈஸா பின் மைமூன் அல்மதனி என்பாரை அறிஞர்கள் பலவீனமாக்கியுள்ளனர்.

நூல்: அல்காஷிஃப்

ஈஸா பின் மைமூன் என்ற பெயருடன் அல்மதனீ என்ற அடைமொழியையும் தஹபீ இனைத்துக் கூறுகிறார். இவர் திருமணத்தைப் பகிரங்கப்படுத்துங்கள்! அதற்காக தஃப் என்னும் முரசு கொட்டுங்கள் என்ற ஹதீஸை அறிவிப்பவர்.

ஈஸா பின் மைமூன் என்ற பெயரில் இருவர் இருந்துள்ளனர் என்பதும், ஒருவர் பலவீனமானவர்; மற்றவர் நம்பகமானவர் என்பதும், சிக்கனமான திருமணம் பற்றிய ஹதீஸை நம்பகமான ஈஸா பின் மைமூன் அறிவித்துள்ளதால் இது சரியான ஹதீஸ் என்பதில் சந்தேகம் இல்லை.

ஈஸா பின் மைமூன் என்ற பெயரில் உள்ள இருவரை அவர்களின் ஆசிரியர் யார் என்பதை வைத்தும் வேறுபடுத்தி அறியலாம்.

ஈஸா பின் மைமூன் என்ற பெயரைக் கொண்ட இருவரின்  ஆசிரியர் காசிம் பின் முஹம்மத் ஆவார். ஆனால் இருவரும் வேறு வேறு நபர்களாவர்.

ஒரு காசிம் பின் முஹம்மத் வழியாக அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் நம்பகமானவர்; மற்றொரு காசிம் பின் முஹம்மத் வழியாக அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் பலவீனமானவர்.

இந்த அடையாளத்தை வைத்தும் சிக்கனமான திருமணம் குறித்த ஹதீஸை அறிவித்த ஈஸா நம்பகமானவர் என்று மேலும் உறுதி செய்யலாம்.

காஸிம் பின் முஹம்மத் என்ற பெயரில் இருவர் என்பதற்கான ஆதாரம்

تهذيب الكمال

ت ق عيسى بن ميمون المدني المعروف بالواسطي مولى القاسم بن محمد بن أبي بكر الصديق يقال له بن تليدان ويقال إنه الذي يحدث عنه حماد بن سلمة ويسميه الطفيل بن سخبرة روى محمد بن أبي بكر الصديق ت ق ومحمد بن كعب القرظي ونافع مولى بن عمر وهشام بن عروة ويزيد بن ذكوان وأبي الزبير المكي روى عنه إبراهيم بن الحسن العلاف وأحمد بن بشير الكوفي ت وآدم بن أبي إياس ق وأبو خزيمة أسلم بن أبي شيبة الهاشمي البصري وحاتم بن عبيد الله النمري وحجاج بن محمد المصيصي وحجاج بن نصير الفساطيطي وحفص بن الجارود قاضي هراة وحماد بن سلمة وسماه الطفيل بن سخبرة فيما قيل وخالد بن عبد الرحمن وسعيد بن سليمان الواسطي وشيبان بن فروخ وصالح بن بيان الأنباري وعبد الصمد بن النعمان وعبد الكريم بن روح بن عنبسة وعثمان بن عمر بن فارس فصحف في اسمه فقال أبو عيسى المدني وعمر بن علي بن مقدم وأبو نعيم الفضل بن دكين ومحمد بن جعفر المدائني ومحمد بن مصعب القرقساني ووكيع بن الجراح ويحيى بن سعيد العطار الحمصي ويزيد بن هارون ت قال أحمد بن سنان القطان عن عبد الرحمن بن مهدي تهذيب الكمال استعديت على عيسى بن ميمون في هذه الأحاديث عن القاسم بن محمد في النكاح وغيره فقال لا أعود وقال إبراهيم بن عبد الله بن الجنيد سمعت يحيى بن معين يقول عيسى بن ميمون الذي يحدث عن القاسم عن عائشة عن النبي صلى الله عليه وسلم أعظم النكاح بركة أيسره مؤونة يقال له بن تليدان وهو من آل أبي قحافة ليس به بأس وهو الذي حدث عنه حماد بن سلمة قال حدثني بن سخبرة هو هذا ولم يرو هذا عن محمد بن كعب شيئا والذي يحدث عن محمد بن كعب ليس بشيء يعني إن الذي يحدث عن محمد بن كعب آخر وقال عباس الدوري عن يحيى بن معين عيسى بن ميمون صاحب القاسم عن عائشة ليس بشيء وقال في موضع آخر عيسى الذي يروي أعلنوا النكاح ويروي حديث محمد بن كعب القرظي هو الضعيف وليس بشيء

ஹம்மாத் பின் ஸலமாவின் ஆசிரியரும், இப்னு தலீதான் என்றும், துஃபைல் பின் ஸக்பரா என்றும் அழைக்கப்படுபவருமான ஈஸா பின் மைமூன் என்பார், அபூபக்ர் ஸித்தீக் அவர்களின் பேரனும் முஹம்மதின் மகனுமான காஸிமின் அடிமையாவார்.

நூல்: தஹ்தீபுல் கமால்

الضعفاء الكبير للعقيلي

عيسى بن ميمون عن القاسم بن محمد بن كعب القرظي . حدثنا زكريا بن يحيى الساجي قال : حدثنا أحمد بن سنان قال : سمعت عبد الرحمن بن مهدي ، قال استعديت على عيسى بن ميمون فقلت : هذه الأحاديث التي يحدث بها عن القاسم بن محمد عن عائشة ، فقال : لا أعود . حدثنا محمد بن عيسى قال : حدثنا عباس قال : قلت ليحيى : عيسى بن ميمون ؟ قال : ليس حديثه بشيء . وحدثني آدم بن موسى قال : سمعت البخاري قال : عيسى بن ميمون عن محمد بن كعب القرظي ، منكر الحديث

கஅப் என்பாரின் பேரனும் முஹம்மத் என்பாரின் மகனுமாகிய காஸிம் வழியாக அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் என்பவரே பலவீனமானவர்.

நூல்: லுஅஃபாவுல் உகைலீ

تاريخ ابن معين

3950 قال يحيى عيسى بن ميمون الذي يروي أعظم النكاح بركة أيسره مؤنة يقال له بن تليدان وهو من ولد أبي قحافة ويروى عن حماد بن سلمة يقول بن سخبرة وهو هذا قال يحيى وابن سخبرة هذا يروي عنه وكيع وأبو نعيم وليس به بأس 3951 وعيسى الذي يروي أعلنوا النكاح ويروي حديث محمد بن كعب القرظي هو الضعيف ليس بشيء)

تاريخ ابن معين

3833 وعيسى بن ميمون صاحب القاسم عن عائشة ليس بشيء

ஈஸா பின் மய்மூன் பலவீனமானவர் என்பதற்கு இப்னு மயீன் இரு அடையளங்களைக் கூறுகிறார்.

முதலாவது: முஹம்மத் பின் கஃபின் ஹதீஸை இவர் அறிவித்திருப்பார்.

இரண்டாவது: காஸிம் என்பவரிடமிருந்து அறிவித்திருப்பார்.

எளிய திருமணம் சம்பந்தப்பட்ட ஹதீஸில் ஈஸா பின் மய்மூன், காஸிம் என்பவரிடமிருந்தே அறிவிப்பு செய்கின்றார். அதில் இடம் பெறக் கூடிய காஸிம் என்பவர் அபூபக்கர் (ரலி) அவர்களின் பேரனாவார்.

நூல் : தாரீக் இப்னு மயீன்

பிற்கால அறிஞர்கள் ஈஸா என்ற பெயரில் இருவர் இருந்துள்ளனர் என்ற விபரத்தை அறியாமல் இருவரையும் ஒரே நபராக கருதி விமர்சனம் செய்துள்ளனர்.

யஹ்யா பின் மயீன் அவர்களின் அவர்களின் அறிவிப்பாளர் குறித்த ஆய்வுக்கு முன் பிற்காலத்தில் வந்தவர்கள் செய்யும் விமர்சனம் நிற்காது.

யஹ்யா பின் மயீன் அவர்கள் கவனத்தில் கொண்ட நுணுக்கமான வேறுபாட்டை சிலர் கவனத்தில் கொள்ளாத காரணத்தால் ஆள் மாறாட்டம் நடைபெற்று மேற்கண்ட ஹதீஸை பலவீனமானது என்று கூறுகின்றனர் என்றே நமக்குத் தோன்றுகிறது.

அறிவிப்பாளர் குறித்து யஹ்யா பின் மயீன் அவர்கள் கூறும் எந்த விமர்சனத்தையும் மறுப்பது என்றால் அவரை விட பலமான ஆதாரங்களுடன் இருக்க வேண்டும்.

அறிவிப்பாளர்களை எடை போடும் எந்த நூலை எடுத்துக் கொண்டாலும் அதிகமான அறிவிப்பாளர்களை எடைபோடுவதில் யஹ்யா பின் மயீன் அவர்கள் தான் முதலிடத்தில் இருப்பதைக் காணலாம். மிகப் பெரும்பாலான நூலாசிரியர்கள் அறிவிப்பாளர்கள் குறித்து விமர்சிக்கும் போது யஹ்யா பின் மயீன் என்ன சொல்லி இருக்கிறார் என்று எடுத்துக் காட்டுவதை அதிகமாகக் காண முடியும். மற்ற எந்த அறிஞரின் விமர்சனமும் இவரது விமர்சனத்தின்  அளவை எட்டியதில்லை.

இந்தக் கலையை உலகுக்கு சொன்ன பேரறிஞர் யஹ்யா பின் சயீத் அல்கத்தான் ஆவார். அவருடைய மாணவர்களில் முதன்மையானவரும் அவரையும் இத்துறையில் மிஞ்சியவரும் ஹதீஸ் கலையின் இமாமுமானவர் தான் யஹ்யா பின் மயீன் ஆவார். இவரைப் பற்றிய சில குறிப்புகளை முதலில் அறிந்து கொள்வோம்.

تهذيب التهذيب – ابن حجر

وقال العجلي ما خلق الله تعالى أحدا كان أعرف بالحديث من يحيى بن معين ولقد كان يجتمع مع أحمد وابن المديني ونظرائهم فكان هو الذي ينتخب لهم الأحاديث لا يتقدمه منهم أحد ولقد كان يؤتى بالأحاديث قد خلطت وتلبست فيقول هذا الحديث كذا وهذا كذا فيكون كما قال

ஹதீஸ் கலை பற்றி யஹ்யா பின் மயீனை விட அதிகம் அறிந்தவரை அல்லாஹ் படைக்கவில்லை. இவர் அஹ்மத் பின் ஹம்பல், அலீ பின் மதீனீ, மற்றும் இது போன்ற தரத்தில் உள்ளவர்களின் காலத்தில் வாழ்ந்தவர். இவர்களுக்குச் சரியான ஹதீஸ்களைக் கண்டறிந்து சொல்பவராக இருந்தார். மேற்கண்டவர்களில் யாரும் இவரை முந்தியதில்லை. ஹதீஸ்களைக் குழப்பி அவர் முன்னால் சொல்லப்பட்டால் இந்த ஹதீஸ் இப்படித்தான் என்று சொல்லி விடுவார், அவர் சொன்னது போலவே இருக்கும் என்று அஜலீ கூறுகிறார்.

ஆதாரம் : தஹ்தீபுத் தஹ்தீப்

அஹ்மத் பின் ஹம்பல், இப்னுல் மதீனி ஆகியோரின் காலத்தில் வாழ்ந்த இவரிடம் தான் அவர்கள் கேட்டு தெரிந்து கொள்ளும் அளவுக்கு மாமேதையாக யஹ்யா பின் மயீன் திகழ்ந்தார். ஒரு ஹதீஸை அறிவிப்பாளர்க்ளின் பெயர்களை அனைத்தையும் மாற்றி கூறினாலும் இது இப்படி அல்ல என்று சொல்லும் அளவுக்கு மாமேதையாக யஹ்யா பின் மயீன் திகழ்ந்தவர்.

تهذيب التهذيب

وقال محمد بن رافع سمعت أحمد بن حنبل يقول كل حديث لا يعرفه بن معين فليس هو بحديث وفي رواية فليس هو ثابتا

யஹ்யா பின் மயீனுக்கு தெரியாத எந்த ஹதீஸும் ஹதீஸாக இருக்க முடியாது என்று அஹ்மத் பின் ஹம்பல் கூறினார்கள்.

ஆதாரம் : தஹ்தீபுத் தஹ்தீப்

تهذيب التهذيب

قال بن الرومي وكنت عند أحمد فجاء رجل فقال يا أبا عبد الله انظر في هذه الأحاديث فإن فيها خطأ قال عليك بأبي زكريا فإنه يعرف الخطأ

நான் அஹ்மத் பின் ஹம்பலுடன் இருந்த போது ஒரு மனிதர் வந்தார். இதோ சில ஹதீஸ்கள் உள்ளன. இவற்றில் பல தவறுகள் உள்ளன. அதை உங்களால் கூற முடியுமா என்று கேட்டார். அதற்கு அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் அபூ ஜக்கரியா (எனும் யஹ்யா பின் மயீன்) அவர்களிடம் செல். அவர் தவறுகளைக் கண்டுபிடித்து விடுவார் என்றார்கள் என இப்னுர் ரூமி சொன்னார்.

ஆதாரம் : தஹ்தீபுத் தஹ்தீப்

تهذيب التهذيب

 وقال عبد الخالق بن منصور قلت لابن الرومي سمعت بعض أصحاب الحديث يحدث بأحاديث يحيى ويقول حدثني من لم تطلع الشمس على أكبر منه فقال وما يعجب سمعت بن المديني يقول ما رأيت في الناس مثله وقال أيضا قلت لابن الرومي سمعت أبا سعيد الحداد يقول الناس كلهم عيال على يحيى بن معين فقال صدق ما في الدنيا مثله قال وسمعت بن الرومي يقول ما رأيت أحدا قط يقول الحق في المشايخ غير يحيى

மனிதர்களில் இவருக்கு நிகரானவர் யாரையும் நான் காணவில்லை என்று இப்னுல் மதீனி கூறினார். தமது ஆசிரியர்களானாலும் தாட்சண்யமில்லாமல் அவர்கள் குறித்து உனமையைச் சொன்னதில் யஹ்யா பின் மயீனைத் தவிர வேறு எவரையும் காணவில்லை என்று இப்னுர் ரூமி கூறினார்.

ஆதாரம் : தஹ்தீபுத் தஹ்தீப்

تهذيب التهذيب

وقال الإسماعيلي سئل الفرهياني عن يحيى وأحمد وعلي وأبي خيثمة قال أما علي فأعلمهم بالعلل وأما يحيى فأعلمهم بالرجال وأحمد بالفقه وأبو خيثمة من النبلاء وقال حنبل عن أحمد كان بن معين أعلمنا بالرجال

யஹ்யா பின் மயீன், அஹ்மத் பின் ஹம்பல், அலீ பின் மதீனி, அபூ ஹைஸமா ஆகியோர் குறித்து ஃபர்ஹியானியிடம் கேட்கப்பட்டது. அலீ பின் மதீனி அவர்கள் நுணுக்கமான குறைபாடுகளை நன்கு அறிந்தவர். யஹ்யா பின் மயீன் அறிவிப்பாளர்கள் பற்றி நன்கு அறிந்தவர். அஹ்மத் பின் ஹம்பல் ஃபிக்ஹ் எனும் சட்டங்களை நன்கு அறிந்தவர். அபூ ஹைசமா கூர்மையான புத்தி உள்ளவர் என்றார். எங்களில் யஹ்யா பின் மயீன் தான் அறிவிப்பாளர்களை நன்கு அறிந்தவர் என்று அஹ்மத் பின் ஹம்பல் கூறினார்.

ஆதாரம் : தஹ்தீபுத் தஹ்தீப்

تهذيب التهذيب

وقال أبو عبيد القاسم بن سلام قال انتهى العلم إلى أربعة أبو بكر بن أبي شيبة أسردهم له وأحمد أفقههم فيه وعلي بن المديني أعلمهم به ويحيى بن معين أكتبهم له وفي رواية عنه أعلمهم بصحيحه وسقيمه بن معين وقال صالح بن محمد أعلم من أدركت بعلل الحديث بن المديني وبفقهه أحمد بن حنبل وأحفظهم عند المذاكرة أبو بكر بن أبي شيبة وأعلمهم بتصحيف المشائخ يحيى بن معين وفي رواية عنه يحيى أعلم بالرجال والكني وقال الآجري قلت لأبي داود أيما أعلم بالرجال علي أو يحيى قال يحيى عالم بالرجال وليس عند علي من خبر أهل الشام شيء

ஹதீஸ்களில் சரியானதையும், பலவீனமானதையும் நன்கு அறிந்தவர் யஹ்யா பின் மயீன் ஆவார். கல்வி நான்கு பேருக்குள் அடக்கம்., அபூபக்ர் பின் ஷைபா நன்கு மனனம் செய்தவர். அஹ்மத் பின் ஹம்பல் நன்கு சட்டம் அறிந்தவர். அலீ பின் மதீனி அவர்களில் அறிஞர். யஹ்யா பின் மயீன் சரியான ஹதீஸையும், தவறான ஹதீஸையும் நன்கு அறிந்தவர் என்று காசிம் பின் சலாம் கூறினார். தனக்கு அறிவித்தவர்களின் பெயர்க் குழப்பங்களை நன்கு அறிந்தவர் யஹ்யா பின் மயீன் ஆவார். அறிவிப்பாளர்கள் பற்றி நன்கு அறிந்தவர் யஹ்யா பின் மயீன் ஆவார் என்று சாலிஹ் பின் முஹம்மத் கூறுகிறார். அறிவிப்பாளர்கள் குறித்து நன்கு அறிந்தவர் யஹ்யா பின் மயீனா? அலீ பின் மதீனியா என்று அபூதாவூத் இடம் கேட்டேன். அதற்கவர்கள் யஹ்யா பின் மயீன் தான் அறிவிப்பாளர் பற்றி அதிகம் அறிந்தவர். அலீ பின் மதீனிக்கு சிரியாவாசிகளான அறிவிப்பாளர் பற்றி எதுவும் தெரியாது என்று கூறியதாக ஆஜுர்ரீ கூறுகிறார்.

அது மட்டுமின்றி அறிவிப்பாளர்களை எடைபோடும் அறிஞர்களில் இரு சாரார் உள்ளனர். பெரிய குறைபாடுகள் இருந்தால் மட்டுமே அறிவிப்பாளரைப் பலவீனமாக்கும் அறிஞர்கள் ஒரு வகையினர். சின்னக் குறைபாடுகள் இருந்தால் அதன் காரணமாக பலவீனம் என்று சொல்ல மாட்டார்கள். ஹாகிம் போன்றவர்கள் இந்த வகையில் சேருவார்கள்.

சின்னக் குறை இருந்தால் கூட பலவீனமாக்கும் அறிஞர்களும் இருந்துள்ளனர். இப்படி அற்ப குறைபாடுகள் இருந்தால் கூட அவரைப் பலவீனப்படுத்தும் அறிஞர்களில் முதன்மையானவர் யஹ்யா பின் மயீன்.

ஒருவரைப் பலமானவர் என்று சொல்வதற்கு அதிகத் தயக்கம் காட்டக் கூடிய அளவுக்கு கடும் போக்குடையவராகவும் அறிவிப்பாளர்களைப் பிரித்து மேய்வதில் மாபெரும் விற்பன்னராகவும் இவரது சொல்லையே அனைவரும் மேற்கோள் காட்டும் அளவுக்கு மாமேதையாகவும், ஹதீஸ்களை எப்படித் தான் மாற்றிப் போட்டாலும் அதைக் கண்டு பிடிக்கும் ஞானமுள்ளவருமான யஹ்யா பின் மயீன் அவர்கள் ஈஸா என்ற பெயரில் இருவர் இருந்துள்ளதாகவும் சிக்கனமான திருமணத்தை அறிவிப்பவர் பலவீனமானவர் அல்ல என்றும் கூறுகிறார்.

யஹ்யா பின் மயீன் அவர்கள் இரண்டு ஈஸா இருப்பதாகச் சொல்லி இருக்கிறார். இப்படி அவர் சொன்னதை எடுத்து எழுதும் அறிஞர்கள் இதில் யஹ்யா பின் மயீன் தவறாகக் கூறிவிட்டார் என்று சொல்லவில்லை. இன்னின்ன காரணத்தால் அது பிழை எனவும் சொல்லவில்லை.

எனவே சிக்கனமான திருமணம் பரகத் நிறைந்த்து என்ற ஹதீஸ் ஆதாரப்பூர்வ்மான ஹதீஸ் என்பது தான் சரியான கருத்தாகும். அல்லாஹ் மிக அறிந்தவன்.

2019-02-28T16:30:13+00:00
CONTACT US
221, Mount Olimpus, Rheasilvia, Mars,
Solar System, Milky Way Galaxy
+1 (999) 999-99-99
PGlmcmFtZSBzcmM9Imh0dHBzOi8vd3d3Lmdvb2dsZS5jb20vbWFwcy9lbWJlZD9wYj0hMW0xOCExbTEyITFtMyExZDYwNDQuMjc1NjM3NDU2ODA1ITJkLTczLjk4MzQ2MzY4MzI1MjA0ITNkNDAuNzU4OTkzNDExNDc4NTMhMm0zITFmMCEyZjAhM2YwITNtMiExaTEwMjQhMmk3NjghNGYxMy4xITNtMyExbTIhMXMweDAlM0EweDU1MTk0ZWM1YTFhZTA3MmUhMnNUaW1lcytTcXVhcmUhNWUwITNtMiExc2VuITJzITR2MTM5MjkwMTMxODQ2MSIgd2lkdGg9IjEwMCUiIGhlaWdodD0iMTAwJSIgZnJhbWVib3JkZXI9IjAiIHN0eWxlPSJib3JkZXI6MCI+PC9pZnJhbWU+
Thank You. We will contact you as soon as possible.
COMPANY NAME
Dolor aliquet augue augue sit magnis, magna aenean aenean et! Et tempor, facilisis cursus turpis tempor odio. Diam lorem auctor sit, a a? Lundium placerat mus massa nunc habitasse.
  • Goblinus globalus fantumo tubus dia montes
  • Scelerisque cursus dignissim lopatico vutario
  • Montes vutario lacus quis preambul denlac
  • Leftomato denitro oculus softam lorum quis
  • Spiratio dodenus christmas gulleria tix digit
  • Dualo fitemus lacus quis preambul patturtul
CONTACT US
Thank You. We will contact you as soon as possible.

யார் இந்த பீ.ஜே

பி.ஜெ என்று சுருக்கமாக அழைக்கப்படும் பி.ஜைனுல் ஆபிதீன் என்பவர் தென்னிந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி என்னும் ஊரில் பிறந்தவர்.

தமிழகத்தின் பழைமை வாய்ந்த அரபுக் கல்லூரிகளில் ஒன்றான கூத்தாநல்லூர் அரபிக் கல்லூரியில் 07 ஆண்டுகள் கல்வி கற்ற இவர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் நிறுவனராவார்.

அரபுக் கல்லூரியில் 07 ஆண்டுகள் மத்ஹபு, தரீக்காக்கள் என்று இஸ்லாத்தின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள வழிகெட்ட கொள்கையை அடிப்படையாகக் கொண்ட கல்வியை கற்ற இவர் பின்னர் அல்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை கற்பதில் ஆர்வம் கொண்டார்.

அல்குர்ஆனுக்கும், ஆதாரபூர்வமான நபிமொழிகளுக்கும் எதிராக உருவாக்கப்பட்ட மத்ஹபுகள் மற்றும் தரீக்காக்களின் வழிகேடுகளை குர்ஆன் சுன்னா ஒளியில் புரிந்து கொண்ட இவர் தனது சகோதரர் மவ்லவி பி.எஸ். அலாவுத்தீனுடன் இணைந்து தர்கா வழிபாடு, பேய் நம்பிக்கை, தட்டு தாயத்து, இணைவைப்பு, பித்அத்துக்கள், மத்ஹபுகள், தரீக்காக்கள் போன்றவற்றுக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்தார்.

இஸ்லாத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட மூட நம்பிக்கைகளுக்கு எதிராக கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பேச்சிலும், எழுத்திலும் போராடி வரும் ஜைனுல் ஆபீதீன் அவர்கள் நூற்றுக் கணக்கான நூல்களை எழுதியுள்ளதுடன், ஆயிரக் கணக்கான கட்டுரைகளுக்கும் சொந்தக் காரர் ஆவார்.

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக சமுதாய சீர்திருத்தப் பணியில் தன்னை அர்பணித்த ஜைனுல் ஆபிதீன் அவர்கள், தமிழகம் தாண்டி இந்தியாவின் பல மாநிலங்களிலும், மத்திய கிழக்கு நாடுகள் இலங்கை, மலேஷியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இஸ்லாமிய பிரச்சாரங்கள் செய்துள்ளார்.

கடந்த 2005ம் வருடம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட போது, இலங்கையில் சுமார் 07 இடங்களில் இவர் உரையாற்றினார். மத்ஹபுகள், தர்காக்கள், இணைவைப்புக் காரியங்கள் அனைத்திற்கும் எதிராக இவர் ஆற்றிய உரைகளினால் பல்லாயிரக் கணக்கான மக்கள் இவரின் உரையைக் கேட்பதற்காகத் திரண்டார்கள்.

கொழும்பு புதுக்கடை, புத்தளம், காலி, மாவனல்லை, காத்தான்குடி போன்ற ஊர்களில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டங்கள் ஒவ்வொன்றிட்கும் சுமார் 30ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டமை குறிப்பிடத் தக்கதாகும்.

பி.ஜெ ஏன் எதிர்க்கப் படுகின்றார்?

பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் இஸ்லாத்தின் பெயரால் தோற்றம் பெற்றுள்ள அனைத்து வழிகேடுகளுக்கும் எதிராக பிரச்சாரம் செய்யும் அதேநேரம் அல்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபி மொழிகளை மாத்திரமே அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்து வருகின்றார்.

அல்-குர்ஆன், மற்றும் ஆதாரபூர்வமான நபி மொழிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் உலமாக்கள், இவருடைய இந்த பிரச்சாரத்தினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். பொது மக்களின் பணத்தில் பொய் சொல்லி வயிறு வளர்க்கும் உலமாக்கள் இவருடைய பிரச்சாரத்தினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தாம் செய்யும் காரியங்களுக்கு பொது மக்கள் ஆதாரம் கேட்க்கும் நிலை பி.ஜே யின் பிரச்சாரத்தினால் உண்டாக்கப்பட்டது. இந்நிலையினால் மக்களை இவ்வளவு காலமும் ஏமாற்றித் திரிந்த உலமாக்கள் பாதிக்கப்பட்டார்கள். பொருளாதார இழிநிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஆகவே தான் பி.ஜெ அவர்களை முழு மூச்சாக இவர்கள் எதிர்த்து வருகின்றார்கள்.

அனைத்துத் தரப்பாரும் இவரை எதிர்க்கும் அளவுக்கு இவர் அப்படி என்னதான் செய்தார்?

ஆம், இவர் செய்த பணி அளப்பரியது. மகத்துவமிக்கது, போற்றத் தக்கது.

கடந்த 30 வருடங்களில் அனைத்து வழிகேடுகளுக்கும் எதிராக இவர் பிரச்சாரம் செய்துள்ளார்.

அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி, நபி முஹம்மது (ஸல்) அவர்களை மாத்திரம் பின்பற்ற வேண்டிய இஸ்லாமிய சமுதாயம் கப்ருகளை வணங்கி வழிபட்டு வருகின்றது. இவருடைய வாழ்நாளில் பெரும் பகுதியை இதற்கெதிரான பிரச்சாரத்திற்காகவே அர்பணித்தார்.

கப்ரு வணக்கத்திற்கு எதிரான பிரச்சாரத்தில் பல இடங்களில் இவர் தாக்கப்பட்டார். அதனைத் தாண்டியும் அல்லாஹ் தனது மார்க்கத்திற்கு வெற்றியைக் கொடுத்தான்.

கப்ரு வணங்கிகளுடன் பல விவாதக் களங்களை சந்தித்த பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அல்லாஹ்வை மாத்திரமே வணங்க வேண்டும், அவ்லியாக்களை வணங்கக் கூடாது, அவர்களிடம் பிரார்த்திக்கக் கூடாது என்பதை ஆணித்தரமாக நிரூபித்தார். இவருடைய இந்தப் பிரச்சாரத்தின் விளைவாக தமிழகத்தின் பல ஊர்களில் தர்காக்களை கட்டி, போசித்து வந்தவர்களே அதனை உடைத்துத் தரை மட்டமாக்கும் நிலை உருவாகியது.

• இஸ்லாத்தின் மூல ஆதாரங்கள் இரண்டா நான்கா?
• இறைவனுக்கு உருவம் உண்டா?
• இணை கற்பிப்பவர் யார்?
• களியக்காவிளை விவாதம்.
• இலங்கை விவாதம்.
• சுன்னத் ஜமாஅத் நூல்களில் ஆபாசங்கள்.
• இமாம்கள் உதவி இல்லாமல் குர்ஆனை விளங்க முடியுமா?
• குர்ஆனில் எழுத்து பிழைகளா – துத்துக்குடி போன்ற தலைப்புகளில் கப்ரு வணங்கும் தரீக்கா, பரேலவிகளுடன் இவர் செய்த விவாதங்கள் புகழ் பெற்றவை. கப்ரு வணங்கிகளாக இருந்த பலர் ஏகத்துவவாதிகளாக மாறும் நிலையை உண்டாக்கின அந்த விவாதங்கள்.
குர்ஆன், ஹதீஸ் தான் மார்க்கம் என்று சொல்லிக் கொண்டு அதற்கு மாற்றமான சலபிக் கொள்கையை கொண்ட ஸலபி வழிகேடர்களுடன் இவர் செய்த விவாதங்கள் குர்ஆனும், ஆதாரபூர்வமான நபிமொழிகளும் மாத்திரம் தான் நேர்வழி என்பதை தெளிவாக நிரூபித்தன. • சூனியம் வாதமும் எதிர்வாதமும்
• அஜ்வா பழமும் சூனியமும்
• முஜீபுடன் விவாதம் • ஜகாத் விவாதம்
• இலங்கை மன்சூருக்கு மறுப்பு
• முகத்தை மறைக்க வேண்டுமா ? சலஃபிகளுடன் நேரடி விவாதம்
• முஜாஹித் பேட்டி
• உமர் ஷரீபின் உளறல்
• உமர் ஷரீபின் உளுத்துப் போன வாதங்கள்
• ஹாமித் பக்ரி விமர்சனத்துக்கு பதில்
• சைபுத்தீன் சிதம்பரத்தில் ஓட்டம்
• சைபுத்தீன் ரஷாதி ஓட்டம்
• ஷைபுத்தீன் ரஷாதிக்கு மறுப்பு போன்ற வீடியோக்கள் இதற்கு சாட்சியாக இருக்கின்றன. இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பல வழிகெட்ட அமைப்பினரோடும் நேருக்கு நேர் விவாதத்தில் கலந்து சத்தியத்தின் மூலம் அசத்தியத்தை அடித்து நொறுக்கிய பி.ஜெ அவர்கள் காதியானிகள் போன்றவர்களுடனும் நேருக்கு நேர் விவாதத்தை எதிர் கொண்டுள்ளார்.

அரபியில் தான் பெற்ற புலமை, தேர்ந்த மார்க்க அறிவு, பேச்சுத் திறமை, நினைவாற்றல், சமயோசித சிந்தனை போன்றவை இவருடைய பிரச்சாரத்திற்கு உத்வேகமளித்தன. முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பின் எந்த நபியும் வரமாட்டார். அவர் தான் இறுதி நபி என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை தகர்க்க முயன்ற மிர்சா குலாம் அஹ்மத் காதியானி என்பவன் தானும் நபியென்று வாதிட்டான். இவனுடைய கொள்கையினால் கவரப்பட்டவர்கள் அஹ்மதியாக்கள் என்ற பெயரில் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். 1994ம் ஆண்டு கோவையில் காதியானிகளுடன் இவர் நடத்திய பகிரங்க விவாதம் காதியானிகளின் கோட்டையையே தவிடு பொடியாக்கியது. • மிர்ஸாகுலாம் பொய்யனே
• ரஷாது கலீபா பொய்யனா தூதரா
• 19 அபத்தமா அற்புதமா
• குர்ஆன் மட்டும் போதுமா
• வஹீ குர்ஆன் மட்டுமா? போன்ற தலைப்புகளில் காதியானிகள் மற்றும் ரஷாத் கலீபாவை நபியென்று ஏற்றுக் கொண்ட வழிகெட்ட 19 கூட்டத்தினருடன் இவர் பகிரங்க விவாதம் செய்து இஸ்லாத்தின் அடிப்படை இறுதி நபித்துவம் நபி முஹம்மது (ஸல்) அவர்களுடன் நிறைவு பெற்று விட்டதை அல்-குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான நபி மொழிகளினூடாக நிரூபித்தார்.

இஸ்லாத்திற்கு எதிராக பல விதங்களிலும் பிரச்சாரங்களை முடுக்கி விட்டு, முஸ்லிம்களை மதம் மாற்றம் செய்வதற்காக அயராது உழைக்கும் கிருத்தவ மிஷனரிகளுடன் நேருக்கு நேர் இவர் செய்த விவாதங்கள் கிருத்தவர்களை ஆட்டம் காண வைத்தது. • பைபிள் இறைவேதமா?
• குர்ஆன் இறைவேதமே!
• கிருத்தவர்கள் ஓட்டமெடுத்த விவாதம்.
• கிறித்தவபாதிரியுடன் விவாதம்.
• கிறித்தவர்களுடன் தவ்ஹீத் ஜமாஅத் நேருக்கு நேர்.
• மூச்சுத் திணற வைத்த விவாதம் – கிறித்தவர்களுடன்.
• பாதிரியார்களுடன் நடந்த அதிரடி விவாதம். போன்ற தலைப்புகளில் இவர் நடத்திய விவாதங்களை இன்றும் இணையதளத்தில் பார்க்க முடியும். கடவுள் இல்லை. கடவுள் நம்பிக்கை என்பது தவறானது. எல்லாம் இயற்கை என்றே நம்ப வேண்டும் என்றும் கடவுள் நம்பிக்கைக்கு எதிராக செயல்படும் நாத்தீகர்களுடன் யாராவது விவாதிக்க முடியுமா? என்று நினைத்து அனைவரும் பின்வாங்கிய ஓடிய நேரத்தில் நாத்தீகர்களுடன் நேருக்கு நேர் விவாதக் களத்தில் சந்தித்தவர் தான் இந்த பி.ஜெ. • இறைவன்இருக்கின்றானா?
• நாத்திகர்களின்மூட நம்பிக்கைகள்.
• குர்ஆன்இறை வேதமா? போன்ற தலைப்புகளில் நடைபெற்ற விவாதக் களத்தில் இறைவன் இருக்கின்றான் என்பதை நிரூபித்ததுடன், அவன் அல்லாஹ் மாத்திரம் தான் என்பதையும் அறிவுப்பூர்வமான நிரூவினார் அறிஞர் பி.ஜெ அவர்கள்.

இப்படி பல தரப்பட்ட வழிகெட்ட கொள்கைகளையும் அல்-குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் விவாதக் களங்கள் மூலம் அடித்து நொருக்கியவர் தான் இந்த பி.ஜெ. அசத்தியத்திற்கு எதிரான இவருடைய பயனத்தினால் வங்குரோத்து நிலை அடைந்தவர்களே இவரின் பிரச்சாரத்திற்கு பல இடங்களிலும் தடை ஏற்படுத்தி வருகின்றார்கள்.

எழுத்துப் பணியில் தனது கவர்ச்சிகரமான பேச்சின் மூலம் ஏகத்துவக் கருத்துக்களை பட்டி தொட்டியெங்கும் கொண்டு செல்வதில் செல்வாக்குச் செலுத்திய அறிஞர் பி.ஜெ அவர்கள் எழுத்துப் பணியிலும் மிகப் பெரும் புரட்சிக்கு வித்திட்டார்.

இஸ்லாத்தின் அடிப்படைக் கருத்துக்களை மக்கள் மயப்படுத்தும் ஆயிரக் கணக்கான கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார்.

• புரட்சி மின்னல்,

• அல்-ஜன்னத்,

• அல்-முபீன்,

• அந்-நஜாத்,

• ஏகத்துவம்,

• தீன்குலப் பெண்மணி

ஆகிய மாத இதழ்களில் இவர் தனது ஏகத்துவப் பிரச்சார ஆக்கங்களை எழுதியுள்ளார்.

“நர்கீஸ்” என்ற மாத இதழில் இவர் எழுதிய “விற்பனைக்காக கற்பனைக் கதைகள்” என்ற தொடர் பெரும் வரவேற்பை பெற்றதுடன், இதழ் நிர்வாகத்திற்கு வந்த அழுத்தம் காரணமாக அந்தத் தொடர் இடை நடுவே நிறுத்தப்பட்டது.

நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள ஜைனுல் ஆபிப்தீன் அவர்கள் இஸ்லாத்திற்கு எதிரான மாற்றாரின் விமர்சனங்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கும் விதமான பல நூல்களை எழுதியுள்ளார்.

• நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?

• இஸ்லாத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களும் பதில்களும்.

• accusations-and-answers

• அர்த்தமுள்ள இஸ்லாம்

• மாமனிதர் நபிகள் நாயகம்

• PROPHET MUHAMMAD THE MAN SUPREME

• அர்த்தமுள்ள கேள்விகள்

அறிவுப்பூர்வமான பதில்கள் • வருமுன் உரைத்த இஸ்லாம்

• இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா

• Does Islam snatch the Rights of Women?

• மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்

• வேதம் ஓதும் சாத்தான்கள் போன்றவை முக்கியமானவை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி இவர் எழுதிய “நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?” என்ற தலைப்பிலான நூல் மாற்று மத நண்பர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த ஒரு நூலாகும். நபி (ஸல்) அவர்களைப் பற்றிய மாற்று மத நண்பர்களின் தவறான எண்ணங்களுக்கு பதில் சொல்லும் விதமாக மிக அருமையாக இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. அதே போல் இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பரிக்கின்றதா? என்ற தலைப்பில் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகளைப் பற்றி விரிவாக இவர் எழுதி வெளியிட்ட நூல் தமிழுலகில் புகழ் பூத்ததாகும். நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?, அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப் பூர்வமான பதில்கள், குற்றச் சாட்டுக்களும் பதில்களும் போன்ற தலைப்புகளில் மாற்று மத நண்பர்களின் அர்த்தமுள்ள கேள்விகளுக்கு அறிவுப் பூர்வமான பதில்களை இவர் வழங்கி தனியான நூல்களை வெளியிட்டுள்ளார். இஸ்லாத்தையும், நபியவர்களையும் கொச்சைப்படுத்தி சல்மான் ரூஷ்தி, தஸ்லிமா நஸ்ரின் போன்றவர்கள் வெளியிட்ட நூல்களுக்கு மறுப்பாக ”வேதம் ஓதும் சாத்தான்கள்” என்ற பெயரில் இவர் எழுதிய நூல் பெரும் வரவேற்பைப் பெற்றது. இஸ்லாத்திற்கு எதிராக பெரும் விமர்சனங்களை முன் வைத்து வரும் கிருத்தவர்களின் அனைத்து விமர்சனங்களுக்கும் காலத்திற்கு ஏற்றாட் போல் இவர் வழங்கிய பதில்கள் அடங்கிய நூல்கள் பொக்கிஷங்களாக பாதுகாக்கப்பட வேண்டியவை.

• இயேசு சிலுவையில் அறையப்படவில்லை.

• இயேசு சிலுவையில் அறையப்படவில்லை ஆங்கிலம்.

• இது தான் பைபிள்.

• இதுதான் பைபிள் ஆங்கிலம்.

• இயேசு இறை மகனா?

• Is jesus the son of god

• பைபிளில் நபிகள் நாயகம்.

• பைபிளில் நபிகள் நாயகம் (ஆங்கிலம்)

• கப்ஸா நிலைக்குமா?

போன்ற தலைப்புகளில் கிருத்தவர்களின் விமர்சனங்களுக்கு இவர் பதில் அளித்துள்ளார். ஜபமணி என்ற பாதிரியார் இஸ்லாத்தை கொச்சைப் படுத்தி “கஃபா நிலைக்குமா?” என்ற தலைப்பில் ஓர் பிரசுரம் வெளியிட்ட நேரத்தில் “கப்ஸா நிலைக்குமா?” என்ற தலைப்பில் இவர் எழுதி வெளியிட்ட நூல் மிகவும் பிரபலம் வாய்ந்தது.

இந்தப் புத்தகம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவு கிருத்தவ பாதிரி ஜபமனியுடன் பி.ஜெ அவர்கள் கிருத்தவம் மற்றும் இஸ்லாம் தொடர்பில் நேரடி விவாதம் செய்து இஸ்லாம் சத்திய மார்க்கம் என்பதை நிரூபணம் செய்தார். இஸ்லாத்திற்குள் இருந்து இஸ்லாத்தின் பெயரால் மூட நம்பிக்கைகளையும், போலிக் கருத்துக்களையும் மார்க்கம் என்று பரப்பும் உலமாக்களின் கருத்துக்கள் மூட நம்பிக்கைகள் அனைத்துக்கும் எதிராக இவர் பல நூல்களை எழுதியுள்ளார். • பேய் பிசாசு உண்டா?

• இஸ்லாமியக் கொள்கை.

• இறைவனிடம் கையேந்துங்கள்.

• யாகுத்பா ஓர் ஆய்வு

• ஜின்களும் ஷைத்தான்களும்

• சுப்ஹான மவ்லித்

• முஹ்யித்தீன் மவ்லித் ஓர் ஆய்வு

• இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூன்யம்

• Was Allah’s Apostle Affected by Black Magic ?

• இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள்

• தர்கா வழிபாடு

• திருமறையின் தோற்றுவாய்

• குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை

• கொள்கை விளக்கம்

• இறைவனைக் காண முடியுமா

• கியாமத் நாளின் அடையாளங்கள்

• தராவீஹ் ஓர் ஆய்வு

• ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா

• குர்ஆன் மட்டும் போதுமா

• பிறை ஓர் விளக்கம்

• நபித்தோழர்களும் நமது நிலையும்

• அமீருக்குக் கட்டுப்படுதல் ஓர் ஆய்வு

• தொப்பி ஓர் ஆய்வு

• தப்லீக் தஃலீம் தொகுப்பு ஓர் ஆய்வு

• இஸ்லாத்தின் பெயரால் கற்பனைக் கதைகள்

• சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும்

• பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்

• பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம் (உருது) போன்ற தலைப்புக்களில் இவர் வெளியிட்ட புத்தகங்கள்
எதிரிகளை வாயடைக்கச் செய்த நூல்களாகும்.
அதே போல்

• தொழுகை சட்டங்கள்.

• நோன்பு

• ஜகாத் ஓர் ஆய்வு

• ஜகாத் ஒர் ஆய்வு (உருது)

• ஜகாத் ஓர் ஆய்வு (ஆங்கிலம்)

• நபிவழியில் நம் ஹஜ்

•குர்பானியின் சட்டங்கள்

• நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும்

• ஜனாஸாவின் சட்டங்கள்

• நேர்ச்சையும் சத்தியமும்

• ஜனாஸா தொழுகை

• விலக்கப்பட்ட உணவுகள்

• சந்திக்கும் வேளையில்

• when-we-meet

• துஆக்களின் தொகுப்பு

• dua-book

• இஸ்லாமியத் திருமணம்

• islamic-marriage

மேற்கண்ட தலைப்புகளில் இஸ்லாத்தின் சட்ட திட்டங்களை பற்றிய நூல்களையெல்லாம் இவர் எழுதியுள்ளமை இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்றாகும். சிறந்த பேச்சாற்றல், மொழியாற்றல், எழுத்தாற்றல் போன்றவற்றை தன்னகத்தே கொண்ட ஒரு அறிஞர் தான் சகோ. பி.ஜெ அவர்கள் என்றால் அது மிகையாகாது.

PGlmcmFtZSB3aWR0aD0iMTAwMCIgaGVpZ2h0PSI1NTAiIHNyYz0iaHR0cHM6Ly93d3cueW91dHViZS5jb20vZW1iZWQvamhIRVJ3X1BSbG8iIGZyYW1lYm9yZGVyPSIwIiBhbGxvdz0iYXV0b3BsYXk7IGVuY3J5cHRlZC1tZWRpYSIgYWxsb3dmdWxsc2NyZWVuPjwvaWZyYW1lPg==

அறிஞர் பி.ஜெ அவர்களின் முழுமையான அனுமதியுடன் இயங்கும் இஸ்லாமிய அறிவுக் கருவூலம்

அறிஞர் பீ.ஜெய்னுலாப்தீன் அவர்களின் பெயரில் நடத்தப்படும் www.onlinepj.net என்ற இந்த இணையதளம் மற்றும் https://www.facebook.com/onlinepjnet என்ற முகநூல் பக்கத்தின் உரிமையாளராகிய அப்துல் அஸீஸ் அல்தாப் ஆகிய நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அறிஞர் PJ அவர்களின் பெயரில் அவருடைய ஆக்கங்கள், வீடியோக்கள், விவாதங்கள் அனைத்தையும் இந்த தளத்தின் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்ப்பதற்கான முழுமையான அனுமதியை எனக்கு வழங்கியுள்ளார். இந்தத் தளத்தின் அனுமதி கேட்டு அறிஞர் PJஅவர்களுக்கு நான் அனுப்பிய மின்னஞ்சலையும், எனது மின்னஞ்சலுக்கு அறிஞர் PJ அவர்கள் அனுப்பிய பதில் மின்னஞ்சலையும் வாசகர்களின் பார்வைக்கு தருகிறேன்.

www.onlinepj.net இணையதளம் பற்றிய உங்கள் மேலான கருத்துக்களை எனது தொலை பேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு நீங்கள் தெரிவிக்க முடியும் என்பதையும் அறிவித்துக் கொள்கிறேன்.

Ph / WhatsApp: 0094 777510105
FaceBook:
https://www.facebook.com/onlinepjnet

அறிஞர் PJ அவர்களுக்கு அல்தாப் ஆகிய நான் அனுப்பிய மின்னஞ்சல்
அப்துல் அஸீஸ் அப்துல் கனீ அல்தாப்

இல 93, காலி வீதி, தெஹிவலை, இலங்கை.

அறிஞர் பீ.ஜெய்னுலாப்தீன் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!

நான் இலங்கையச் சேர்ந்த அல்தாப். ஆரம்ப காலத்திலிருந்து இலங்கையில் தூய முறையில் ஏகத்துவத்தை நிலை நாட்ட பாடுபட்டவர்களில் ஒருவர். உங்கள் 2005ம் ஆண்டு இலங்கை விஜயத்திற்கு காரணமாக இருந்தவர்களின் ஒருவர் ஆவேன்.

உங்களை தமிழ்நாடு தெளஹீத் ஜமாஅத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து தற்போது அநியாயமான முறையில் நீக்கியுள்ளார்கள். ஜமாஅத்திலிருந்து நீங்கள் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவித்த சில நாட்களில் ஜமாஅத் நடத்திய மாநில செயல்குழுவில் உங்களுடைய வீடியோக்களை அனைத்தையும் இணையத்திலிருந்து நீக்குவதாகவும் ஒன்லைன் பீ.ஜெ இணையதளத்தை மாற்றுவதாகவும், உங்கள் புத்தகங்கள் அனைத்தையும் டிஎன்டிஜெ அறிஞர் குழு என்று போடவுள்ளதாகவும் டீ என் டீ ஜே நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது.

உங்களுக்கும் ஜமாஅத்திற்கும் இடையில் உள்ள பிரச்சினையில் தற்போது நான் பேசுவதற்கு விரும்பவில்லை. ஆனால் நீங்கள் பேசிய உரைகள், எழுதிய எழுத்துக்கள், நீங்கள் செய்த விவாதங்களினால் அல்லாஹ் உங்கள் மூலமாக எமக்கு நேர்வழி காட்டினான். இதே போல் இன்னும் பல லட்சக் கணக்கானவர்களுக்கு அல்லாஹ் இவற்றின் மூலம் நேர்வழி காட்ட வேண்டும்.எனவே தான் உங்கள் எழுத்துக்கள், பேச்சுக்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக என் சொந்த செலவில் ஒன்லைன் பீ.ஜெ டொட் நெட் என்ற பெயரில் ஒரு இணையதளத்தை நடத்த எண்ணி இலங்கையிலிருந்து ஒரு சொப்ட்வெயா கொம்பணி மூலம் தற்போது அதனை வெளியிட்டும் விட்டேன்.

இதில் இதுவரை நீங்கள் எழுதிய, பேசியவைகளை தவிர எனது எந்த சொந்தக் கருத்துக்களும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இணையதளம் பற்றி சிலர் இதற்கு பீ.ஜெ அனுமதி தந்தாரா? என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.

தெளஹீத் பிரச்சாரத்திற்கு துணையாக அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்து உங்கள் பெயரில் நான் நடத்தும் இந்த இணையதளத்திற்கு உங்களின் அனுமதியை தருமாறு கேட்டு கொள்கிறேன். உங்கள் அனுமதி கிடைத்தால் அதனையே பொது அனுமதியாக இணையதளத்தில் பிரசுரித்து விடுவேன்.

உங்கள் மேலான அனுமதியை எதிர்பார்த்தவனாக!

அப்துல் அஸீஸ் அப்துல் கனீ அல்தாப் தெஹிவலை, இலங்கை

0777510105

அறிஞர் PJ அவர்கள் அனுப்பிய பதில்.

அன்புள்ள சகோதரர் அல்தாப் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். வஹீ மட்டுமே இஸ்லாத்தின் மூல ஆதாரம் என்ற அடிப்படைக் கொள்கையில் செயல்படுவதற்காக இலங்கையில் SLTJஉருவாக்கப்பட்ட போது முக்கிய தூண்களில் நீங்களும் ஒருவர் என்பதை நான் அறிவேன்.

எந்தப் பொறுப்புக்கும் வர நீங்கள் ஆசைப்படாவிட்டாலும் உங்கள் உழைப்பை நான் நினைவில் வைத்துள்ளேன்.

எனது ஆக்கங்களையும், ஆய்வுகளையும், உரைகளையும், விவாதங்களையும் அறிந்து கொள்ள விரும்புவோருக்கு பயனளிக்கும் வகையில் நீங்கள் onlinepj.net என்ற பெயரில் என் பெயரைப் பயன்படுத்திக் கொள்ளவும் எனது எல்லா ஆக்கங்களையும் பயன்படுத்திக் கொள்ளவும் நான் மனப்பூர்வமாக அனுமதிக்கிறேன்.

இதனால் பயன் பெறுவோரின் மறுமைப் பரிசில் எனக்கு பங்கு கிடைக்கவும், இதனால் பயனடைந்தோரின் துஆக்கள் எனக்கு கிடைக்கவும் நீங்கள் உதவுகிறீர்கள் என்பதால் எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் அன்புடன்

பீ.ஜைனுல் ஆபிதீன்.

AlthafOne AlthafOne